Published:Updated:

ரூ.10,000 கோடி அபேஸ்..? - தலைமறைவான ‘ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸ்’ - காப்பாற்றுகிறதா காவல்துறை?

ஐ.எஃப்.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.எஃப்.எஸ்

எங்கள் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, சிலர் பணத்தை வசூலித்திருக்கிறார்கள். அந்தப் பணத்தை ஐ.எஃப்.எஸ்-ஸிடம் தரவில்லை’ என்று புதுக்கரடி ஒன்று பரப்பப்படுகிறது.

ரூ.10,000 கோடி அபேஸ்..? - தலைமறைவான ‘ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸ்’ - காப்பாற்றுகிறதா காவல்துறை?

எங்கள் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, சிலர் பணத்தை வசூலித்திருக்கிறார்கள். அந்தப் பணத்தை ஐ.எஃப்.எஸ்-ஸிடம் தரவில்லை’ என்று புதுக்கரடி ஒன்று பரப்பப்படுகிறது.

Published:Updated:
ஐ.எஃப்.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.எஃப்.எஸ்

பலரும் எதிர்பார்த்தபடியே ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகியிருக்கின்றன. அந்த நிறுவனத்தை நடத்திவந்தவர்களான லட்சுமி நாராயணன் சுந்தரம், ஜனார்த்தனன், மோகன் பாபு உள்ளிட்ட பெருந்தலைகள் பலரும் தலைமறைவாகியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து பினாமி ஏஜென்ட்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பலரும் பதுங்கத் தொடங்க, அவர்களுடைய பெரும்பாலான அலுவலகங்கள் மூடிக்கிடக்கின்றன. நம்பி ‘முதலீடு’ செய்த மக்கள் பதற்றத்துடன் படையெடுக்கிறார்கள். ஆனால், பூட்டுகள் மட்டுமே தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுடன் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்!

‘பங்குச் சந்தை முதலீட்டில் ஆண்டுக்கு 24% வருமானம் தருவதாகக் கூறி, ஏஜென்ட்டுகள் மூலமாகப் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கிறது வேலூர், காட்பாடியில் இயங்கிவரும் ஐ.எஃப்.எஸ் நிறுவனம்’ என்று கிளம்பிய புகார்களின் அடிப்படையில், ‘கோடி கோடியாகச் சுருட்டுகிறார்கள். நிதி நிறுவனத்தை நோக்கி நீளும் புகார்கள். நிருபரை மிரட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர்’ என்ற தலைப்பில் 06/07/2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. 30.07.2022 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘பொருளாதாரக் குற்றப்பிரிவின் விசாரணை வலையில்... ஐ.எஃப்.எஸ்!’ என்ற தலைப்பில் ‘ஃபாலோ-அப்’ கட்டுரையும் வெளியானது. இந்த நிலையில்தான், தலைமறைவுப் படலம். ‘செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கின்றன’ என்று பொங்க ஆரம்பித்த ஏஜென்ட்டுகள், தாங்களும் தலைமறைவாகத் தொடங்கியிருக்கிறார்கள்.

ரூ.10,000 கோடி அபேஸ்..? - தலைமறைவான ‘ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸ்’ - காப்பாற்றுகிறதா காவல்துறை?

இந்தச் சூழலில், ஆடியோ செய்தி ஒன்று யூடியூபில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. ‘நான் லட்சுமி நாராயணன் பேசுறேன். ஒருசில தினங்களா நான் என்னோட பிராப்பர் பிளேஸ்ல இல்லை. அதுக்கு இம்ப்பார்ட்டன்ட்டான ரீசன் இருக்கு. பதினஞ்சு நாள்ல வந்துடுவேன். இதைப் பத்தி வெளியில இருக்கறவங்க தப்புத் தப்பா பேசுறது... உள்ள இருக்கறவங்க தப்புத் தப்பா பேசுறதை நிறுத்திக்கங்க. இந்த பிஸினஸ் பிராப்பரா இருக்கு... பிராப்பரா ரன் ஆகும். செய்தி வெளியிடுற மீடியா மேல லீகல் ஆக்‌ஷன் எடுப்போம். உள்ள இருக்கற ஆட்கள் வேணும்னே தப்புத் தப்பா பேசினா, அவங்க மேலயும் லீகல் ஆக்‌ஷன் எடுக்கப்படும்’ என்றெல்லாம் மிரட்டுகிறது அந்தக் குரல்.

வார்த்தைக்கு வார்த்தை ‘பிஸினஸ்’ என்று கூறும் அந்தக் குரல், என்ன பிஸினஸ் என்று எதையும் சொல்லவில்லை. ஜூ.வி-யில் முதல் கட்டுரை வெளியானதும் நமக்கு அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீஸில், ‘ஐ.எஃப்.எஸ் நிறுவனம், நிதி சார்ந்த எந்த பிஸினஸையும் செய்வதில்லை. நிதி சார்ந்த கல்வியை மட்டுமே வழங்குகிறது’ என்று கூறப்பட் டிருந்தது. ஆனால், இந்தக் குரலோ, பிஸினஸ்... பிஸினஸ்... என்கிறது. நடத்துவது, நிதி சார்ந்த கல்வி நிறுவனம் மட்டுமே என்றால், அந்த பிஸினஸில் தலைமறைவாகும் அளவுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரியவில்லை.

லட்சுமி நாராயணன் சுந்தரம்
லட்சுமி நாராயணன் சுந்தரம்

அதுமட்டுமல்ல, இந்த நிறுவனத்துக்காகப் பரிந்துகொண்டு, ‘இந்தப் பிரச்னை சரியாகிவிடும்’ என்கிற வகையில் வீடியோக்களைப் பதிவிட ஆரம்பித்துள்ளனர் சிலர். அதேசமயம், அவற்றின் பின்னூட்டங்களிலேயே, ‘தங்களுக்குப் பணம் வரவில்லை’ என்பதையும் சிலர் பதிவுசெய்துள்ளனர். ‘இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிப் பெரும்புள்ளிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர். இந்தப் பிரச்னையின் பின்னணியில் இருக்கும் அரசியலையும் விசாரிக்க வேண்டும்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஆகக்கூடி, பணம் வசூல் செய்யப்பட்டிருப்பதும், இதில் அரசியல் புள்ளிகளின் பின்னணி இருப்பதும் உண்மை என்பது உறுதியாகியிருக்கிறது.

இப்போது, ‘எங்கள் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, சிலர் பணத்தை வசூலித்திருக்கிறார்கள். அந்தப் பணத்தை ஐ.எஃப்.எஸ்-ஸிடம் தரவில்லை’ என்று புதுக்கரடி ஒன்று பரப்பப்படுகிறது. அப்படி யாராவது ஏமாற்றியிருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கவேண்டியதுதானே... ஆனால், இந்த விஷயத்தை விசாரிக்க ஆரம்பித் தோம் என்பதற்காக, ஜூ.வி நிருபர் மீது காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. பிறகு, மாவட்ட எஸ்.பி தலையீட்டின் பேரில் அந்தப் புகார் ரத்துசெய்யப்பட்டது.

ஜனார்த்தனன்
ஜனார்த்தனன்

இந்தப் பிரச்னை வெடித்து வெளியில் வந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கும் மேலாகிறது. வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறையிடம் புகார்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது என்று வெளிப் படையான, உறுதியான எந்தத் தகவலும் இல்லை. ‘காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட மக்களிடம் சுமார் 10,000 கோடிக்கு மேல் வசூலிக் கப்பட்டிருக்கிறது. முக்கியஸ்தர்களான ஜனார்த் தனனைத்தான் விசாரித்துவருகிறோம். லட்சுமி நாராயணன் தற்போது ஹைதராபாத்தில் பதுங்கி யிருக்கிறார். ஏஜென்ட்டுகள் ஓடிவிடக் கூடாது என்பதற்காகத்தான் கமுக்கமாக விசாரணை நடக்கிறது’ என்றெல்லாம் போலீஸ் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வருகின்றன.

இது போன்ற பண மோசடிகள், பெரும்பாலும் போலீஸின் கவனத்துக்கு வராமலெல்லாம் நடப்பதில்லை. போலீஸ் துறையைச் சேர்ந்தவர் கள் சிலரே இதில் முதலீடு செய்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இந்தச் சர்ச்சை நிறுவனத் தின்மீது, இந்த நிறுவனத்துடன் தொடர்பிலிருக்கும் அரசியல் புள்ளிகள், காவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?