Published:Updated:

ஆம்னி பேருந்து வணிகம்... வெளிப்படையாக நடக்கும் நாடகமா?

நாகர்கோவில் ஆம்னி பேருந்துநிலையம்
பிரீமியம் ஸ்டோரி
நாகர்கோவில் ஆம்னி பேருந்துநிலையம்

ஆர்.டி.ஐ-யில் ‘ஆம்னி பேருந்துகள் தினசரி ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இயக்க அனுமதி வழங்குவது யார், அதில் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து பணம் வசூலிக்க அரசாணை உள்ளதா?’ என்று கேட்டிருந்தேன்.

ஆம்னி பேருந்து வணிகம்... வெளிப்படையாக நடக்கும் நாடகமா?

ஆர்.டி.ஐ-யில் ‘ஆம்னி பேருந்துகள் தினசரி ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இயக்க அனுமதி வழங்குவது யார், அதில் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து பணம் வசூலிக்க அரசாணை உள்ளதா?’ என்று கேட்டிருந்தேன்.

Published:Updated:
நாகர்கோவில் ஆம்னி பேருந்துநிலையம்
பிரீமியம் ஸ்டோரி
நாகர்கோவில் ஆம்னி பேருந்துநிலையம்

ஆம்னி பஸ் கட்டணங்கள், சாமானியர்களுக்கு எட்டாத உயரம். பண்டிகைக் காலங்களிலிலோ பகல்கொள்ளை. பல்வேறு தரப்பினர் குரல்கொடுத்தும் தமிழக அரசு இதை கட்டுப்படுத்தவில்லை. கண்துடைப்பாக சில வழக்குகளைப் போடுவதுடன் சரி. இந்த நிலையில்தான், ‘ஆம்னி பஸ்கள், அரசுப் பேருந்துகளைப்போல் குறிப்பிட்ட வழித்தடங்களில் தினசரி இயங்கவும், பயணிகளிடம் தனித்தனியாக டிக்கெட் வசூலிக்கவும் தமிழகத்தில் அனுமதி இல்லை’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற்றிருக்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கத் தலைவர் ஜாண் விக்டர்தாஸ். அனுமதியே இல்லாமல் எப்படி இயங்குகின்றன ஆம்னி பஸ்கள்?

சிவகங்கையில் புதுச்சேரி, நாகாலாந்து பதிவெண்கொண்ட ஆம்னி பஸ்கள்
சிவகங்கையில் புதுச்சேரி, நாகாலாந்து பதிவெண்கொண்ட ஆம்னி பஸ்கள்

ஜாண் விக்டர்தாஸிடம் பேசினோம். “ஆர்.டி.ஐ-யில் ‘ஆம்னி பேருந்துகள் தினசரி ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இயக்க அனுமதி வழங்குவது யார், அதில் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து பணம் வசூலிக்க அரசாணை உள்ளதா?’ என்று கேட்டிருந்தேன். அதற்கு, ‘ஆம்னி பேருந்துகள், ஒப்பந்த வாகன வகையைச் சேர்ந்தவை. அவற்றை குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்க அனுமதி இல்லை. பயணிகளுக்கு தனித்தனி யாக டிக்கெட் கொடுத்து பணம் வசூலித்து ஏற்றிச் சென்றால், 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியில் புகார் தெரிவிக்கலாம்’ என்று போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திலிருந்து பதில் வழங்கியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதிலிருந்து, தமிழகத்தில் ஆம்னி பேருந்துப் போக்குவரத்து வணிகத்தையே முறைப்படுத்த வில்லை என்பது தெரிகிறது. அரசும் ஆம்னி பேருந்து தரப்பினரும் காலம்காலமாக மக்களிடம் நாடகமாடிவருகிறார்கள். தமிழகத்தில் அனைத்து முக்கியமான நகரங்களிலும் அரசுப் பேருந்து நிலையத்தைப்போலவே ஆம்னி பேருந்து நிலையங்களும் இருக்கின்றன. அங்கிருந்து டிக்கெட் வழங்கித்தான் பயணிகள் அழைத்துச் செல்லப் படுகின்றனர். இவை தவிர, இணையத்தில் வெளிப்படையாக டிக்கெட் விலையை நிர்ணயித்தும் வணிகம் செய்கிறார்கள்.

 ஜாண் விக்டர்தாஸ், நவுசத் அலி
ஜாண் விக்டர்தாஸ், நவுசத் அலி

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள், சுற்றுலா அல்லது குழுப்பயணம் என்றரீதியில் விண்ணப்பிக்கப் பட்டு, சட்டவிரோத மாக இயக்கப்படுகின்றன. இவையெல்லாம் வெளிப்படை யாகத் தெரிந்தும் காவல் துறையோ, போக்குவரத்துத் துறையோ நடவடிக்கை எடுப்பதில்லை. இப்படி முறைகேடாக இயக்குவது மட்டுமன்றி, கட்டணத்திலும் கொள்ளையடிக்கிறார்கள். பல ஆம்னி பேருந்துகள், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையையும் செய்வதில்லை. தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஊழியர்களுக்கு சரியான போனஸ் வழங்க இயலவில்லை. பேருந்துக்கு தரமான உதிரி பாகங்களையும் பொருத்த இயலவில்லை. இப்படி அரசுப் பேருந்துகளுக்குச் சவால்விடும் அளவுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை, அதிகாரிகள் கண்டுகொள்வதேயில்லை” என்றார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி மாநிலச் செயலாளர் நவுசத் அலி, ‘படுக்கை வசதிகளுடன்கூடிய ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க அனுமதி இருக்கிறதா?’ என்று ஆர்.டி.ஐ-யில் தகவல் கேட்டுப் பெற்றிருக்கிறார். அவரிடமும் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“என் கேள்விக்கு, ‘தமிழகத்தில் படுக்கை வசதியுடன்கூடிய ஆம்னி பேருந்துகளை இயக்க இதுவரை அனுமதி வழங்கவில்லை’ என்று தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான், படுக்கை வசதிகொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும் வெளிமாநிலங்களில் பதிவு செய்துவிட்டு, தமிழகத்தில் இயக்குகிறார்கள். அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் பினாமிகள் பெயரில் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பலவும் இயங்குகின்றன. அதனால்தான், அரசு இந்த முறைகேடுகளை கண்டுகொள்வ தில்லை” என்றார்.

நாகர்கோவில் ஆம்னி பேருந்துநிலையம்
நாகர்கோவில் ஆம்னி பேருந்துநிலையம்

ஆம்னி பேருந்து நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் பேசினோம். “நீங்கள் சொல்வது உண்மைதான். நாங்கள் `ஆம்னி பேருந்துகளுக் கென்றே தனி விதிமுறைகளை உருவாக்கி, எங்கள் வணிகத்தை முறைப்படுத்த வேண்டும்’ என்று நீண்டகாலமாகவே கேட்டுவருகிறோம். அரசுதான் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேசமயம் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதால்தான், கணிசமான பயணிகள் சிரமம் இல்லாமலும் சரியான நேரத்திலும் பயணம் செய்ய முடிகிறது” என்றார் தனது தரப்பு நியாயமாக.

போக்குவரத்துத் துறை ஆணையர் சமயமூர்த்தி யிடம் பேசினோம். “ஆம்னி பேருந்துகள், சுற்றுலா வாகன வகையைச் சேர்ந்தவை. ஒப்பந்த அடிப்படையில் பாயின்ட் டு பாயின்ட் என்ற முறையில் பயணிகளை குழுவாக அழைத்துச் செல்ல மட்டுமே அவற்றுக்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகளை, அரசுப் பேருந்துகளைப்போல் பயணிகளிடம் தனித்தனியாக டிக்கெட் வசூலித்து இயக்கக் கூடாது. அப்படி இயங்கும் ஆம்னி பேருந்துகள்மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். டிக்கெட் ஏஜென்டுகள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஆயுதபூஜை விடுமுறை நாள் களில் மட்டும் பத்தாயிரம் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தி, சுமார் நான்கரை லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்திருக் கிறோம். விரைவில் படுக்கை வசதிகொண்ட பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism