Published:Updated:

தாலிக்குத் தங்கம் திட்டத்தில் நடந்த முறைகேடுகள்?! - ஆர்.டி.ஐ ஆர்வலர் சொல்லும் தகவல் என்ன?

தாலிக்குத் தங்கம் திட்டம் ( மாதிரிப் படம் )

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக ஆர்.டி.ஐ ஆர்வலர் பிரம்மா தெரிவிக்கிறார். அரசியல் கட்சியினர் பலர் இந்தத் திட்டத்தில் முறைகேடு செய்திருப்பதாகவும் கூறுகிறார்.

தாலிக்குத் தங்கம் திட்டத்தில் நடந்த முறைகேடுகள்?! - ஆர்.டி.ஐ ஆர்வலர் சொல்லும் தகவல் என்ன?

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக ஆர்.டி.ஐ ஆர்வலர் பிரம்மா தெரிவிக்கிறார். அரசியல் கட்சியினர் பலர் இந்தத் திட்டத்தில் முறைகேடு செய்திருப்பதாகவும் கூறுகிறார்.

Published:Updated:
தாலிக்குத் தங்கம் திட்டம் ( மாதிரிப் படம் )

தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களின் கல்விநிலையை உயர்த்தும் வகையில் மமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, 10-ம் வகுப்பு வரை படித்துள்ள பெண்ணின் திருமணத்துக்கு உதவித்தொகையாக 25,000 ரூபாய் பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டன.

அதேபோல, பட்டப் படிப்பு முடித்த பெண்களுடைய திருமண உதவித்தொகைக்கு 50,000 ரூபாய் உதவித்தொகையும் திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் நகையும் வழங்கப்பட்டன. ஆனால், ’தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்’ என அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தை நிறுத்துவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில் இருந்த திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசுகையில், “தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்குத் தங்க நாணயம் வழங்குவதில் முறைகேடு என 43 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் திட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடுகளை இதற்கு மேல் கூறி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை” என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினரிடம் வழக்கம்போல எதிர்ப்பும் ஆதரவும் நிலவுகின்றன. கடந்த அ.தி.மு.க ஆட்சி கொண்டுவந்த திட்டம் என்பதற்காக இந்தத் திட்டம் முடக்கப்படுவதாக அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், தி.மு.க ஆதரவுக் கட்சியினரோ, அரசின் முடிவை ஆதரித்துப் பேசிவருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமண உதவித் திட்டத்தில் குளறுபடிகள் நடந்திருப்பதால் அந்தத் திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தாலிக்குத் தங்கம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயனடைந்தவர்கள் குறித்த தகவல்களை நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரம்மா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்டிருந்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள நிலையை அறியும் வகையில் அவர் கேட்டிருந்த நிலையில், சில மாவட்டங்களின் சமூக நலத்துறை அதிகாரிகள் அதற்கான தகவல்களை அளிக்கவில்லை. தகவல் அளித்த மாவட்டங்களின் மூலம் கிடைத்த தகவல்களிலிருந்து இந்தத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருக்கும் வாய்ப்பைப் புரிந்துகொள்ள முடிவதாக வழக்கறிஞர் பிரம்மா தெரிவித்தார்.

இது தொடர்பாகப் பேசிய பிரம்மா, ``தமிழகத்தில் 29 மாவட்டங்களிலிருந்து தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்ட தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதன்படி மொத்தம் 8,70,478 பேர் பயனடைந்திருப்பதாக ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்திருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி, கடந்த 10 வருடங்களில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 80,912 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

வழக்கறிஞர் பிரம்மா
வழக்கறிஞர் பிரம்மா

இந்தத் திட்டத்தில் மிகவும் குறைவாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஏழைப் பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள். அதன்படி 10 வருடங்களில் 13,674 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் 2019-ம் ஆண்டில் ஒரு பயனாளிகூட திருமண உதவித்தொகை பெறவில்லை எனத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். அப்படியானால் அந்த வருடத்தில் தாலிக்குத் தங்கம் பெறத் தகுதியான ஒருவருக்குக் கூடவா திருமணம் நடக்கவில்லை என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

எத்தனை பேருக்கு உதவித்தொகை மற்றும் தங்க நாணயம் வழங்கியிருக்கிறோம் என எல்லா மாவட்டங்களிலுமிருந்தும் தகவல் கொடுத்திருக்கிறார்களே தவிர, பயனாளர்கள் குறித்த முழு விவரங்களையும் எந்த மாவட்டத்திலுமிருந்தும் தெரிவிக்கவில்லை.

நெல்லை மாவட்ட புள்ளிவிவரம்
நெல்லை மாவட்ட புள்ளிவிவரம்

விசாரணை நடத்தப்பட வேண்டும்!

தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தில் மோசடி அதிகமாக நடந்திருக்கிறது. அதன் காரணமாகவே முதல்வர் ஸ்டாலின், “இதற்கு மேல் கூறி இந்தத் திட்டத்தைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை’ எனறு பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.

ஆனால், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது. திட்டத்துக்குத் தகுதியில்லாத பலருக்குப் பணமும் தங்கமும் கொடுக்கப்பட்டிருக்கு. அதிகாரிகள் சிலரும் இதற்குத் துணைபோயிருக்கிறார்கள். அதனால் இது குறித்து உரிய விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்” என்றார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் இந்த முடிவால், மாநிலம் முழுவதும் உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டிருப்பதால் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கல்வியாளர்கள்

ஏற்கெனவே இந்திய அளவில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ள நிலையில், அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்பதால் அரசு கூடுதலாக புதிய கல்லூரிகளைத் தொடங்கி மாணவிகளின் உயர் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism