Published:Updated:

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

பேங்க்
பிரீமியம் ஸ்டோரி
பேங்க்

`சேவிங்ஸ் விஷயத்துல நான் ரொம்ப கெட்டி. மொத்தப் பணத்தையும் பேங்க்ல போட்டு வெச்சிருக்கேன்...

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

`சேவிங்ஸ் விஷயத்துல நான் ரொம்ப கெட்டி. மொத்தப் பணத்தையும் பேங்க்ல போட்டு வெச்சிருக்கேன்...

Published:Updated:
பேங்க்
பிரீமியம் ஸ்டோரி
பேங்க்

மாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். இதில் யாரைக் குற்றம் சொல்வது? ஒரு சினிமா பாடலை மறந்திருக்க மாட்டீர்கள் `ஏமாறாதே ஏமாறாதே, ஏமாற்றாதே ஏமாற்றாதே.' இதில் ஏமாறுவதுதான் முதலில் குறிப்பிடப்படுகிறது. பாட்டை விடுங்கள்... சட்டம் என்ன கூறுகிறது?

Ignorance of law is no excuse - அதாவது, சட்டம் தெரியாது என்று சொல்வது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதேபோல் இன்னொன்று Let thebuyer beware - அதாவது ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்லாதீர்கள். நீங்கள் ஏமாறாமல் இருங்கள்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

`சேவிங்ஸ் விஷயத்துல நான் ரொம்ப கெட்டி. மொத்தப் பணத்தையும் பேங்க்ல போட்டு வெச்சிருக்கேன்...', `எப்போ, எது வாங்கினாலும் தள்ளுபடி விற்பனையிலதான் வாங்கறது...', `வீட்டுல நகைகளை வெச்சுக்கிறதில்லை. பேங்க் லாக்கர்ல பத்திரமா இருக்கு...' - இப்படியெல்லாம் பெருமை பேசி நிதி நிர்வாகத்தில் நீங்கள் திறமையானவர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? புத்திசாலித்தனம் என்ற பெயரில் நீங்கள் அறியாமல் செய்கிற தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றிலுள்ள ஆபத்துகளை விளக்குவதே இந்த இணைப்புப் புத்தகத்தின் நோக்கம். அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார் ஆடிட்டர் லதா ரகுநாதன்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

ரிஸ்க் எடுப்பதில் நீங்கள் எப்படி?

நாம்தான் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது புரிகிறது. அதைச் செய்வது எப்படி? மூன்று உதாரணங்கள் பார்க்கலாம்.

ஒருவர் பங்குச்சந்தையில் நுழைய மறுக்கிறார். காரணம், கேட்டால் அது குதிரைப் பந்தயம் போன்று ஒரு சூதாட்டம் என்கிறார். தவிர, அவருக்கு ரிஸ்க் எடுப்பது பிடிக்காது என்றும் கூறிவிட்டு, தன் முதலீடுகளைப் பல வங்கிகளில் வைப்பு அல்லது டெபாசிட்டுகளாக வைத்திருப்பதாகச் சொல்கிறார்.

இரண்டாவது உதாரணம். ஒருவர் சந்தைக்குக் காய்கறிகள் வாங்கச் செல்கிறார். அங்கே ஒருவர் கூறுகளாகக் குவித்து வைத்த காய்கறியை மிகக் குறைந்த விலைக்கு விற்கிறார். ஆனால், இவரோ அந்தப் பக்கம் போகாமல், கடைகளில் விற்கப்படும் காய்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

மூன்றாவது உதாரணம், ஒருவர் புடவை வாங்கச் செல்கிறார். கடையில் ஒரு பிரிவில் தள்ளுபடி விற்பனையும் இருக்கிறது. புடவைகள் அனைத்தும் பாதி விலையில் விற்கப்படுகின்றன. அங்கு சென்று ஒரு புடவையைப் பிரித்து அங்குலம் அங்குலமாக சரிபார்த்து அதில் குறை எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு வாங்குகிறார்.

இந்த மூன்று சூழ்நிலைகளிலும் ரிஸ்க் எவ்வாறு பார்க்கப்படுகிறது அல்லது எடுக்கப்படுகிறது என்று பார்க்கலாம். முதல் உதாரணத்தில், பங்குச் சந்தை சூதாட்டம் என்று எதை வைத்துச் சொல்கிறார்? நிறைய சந்தர்ப்பங்களில் பொதுவெளியில் மற்றவர் சொல்வதை நாம் நம்பத்தொடங்கிவிடுகிறோம். இங்கும் அப்படித்தான் நடந்திருக்கும். ஒருமுறைகூட பங்குச் சந்தை பக்கம் செல்லாதவர், எப்படி அதன் நிலையைப் புரிந்துகொண்டிருக்க முடியும்?

அடுத்ததாக வங்கிகளில் போடப்பட்டிருப்பதால் அவர் பணம் மிகப் பாதுகாப்பாக இருக்கும் என்கிறார். இதுவும் சரியானதல்ல. அதில் உள்ள ஆபத்தை அவர் புரிந்துகொண்டுள்ளாரா என்றால் இல்லை. காரணம், வைப்பு கணக்கில் அவர் மொத்த சேமிப்பையும் ஒரே வங்கியில் வைத்திருந்தார். இது எதனால் ஆபத்து என்பதைப் போகப் போகப் பார்ப்போம்.

அடுத்த உதாரணத்தில், காய்கறி வாங்குபவர், விலை குறைவாக இருந்தாலும் அதில் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும் என்பதை உணர்ந்து அதை வாங்க மறுக்கிறார்.

மூன்றாவது உதாரணத்தில், புடவை வாங்குபவர் அதில் பொத்தல்கள் இருக்கக்கூடும் என்பதை உணர்ந்திருக்கிறார். ஆனால், இது ஒன்று மட்டுமே அந்தப் புடவையில் அபாயம் என்பதில்லை. அது பழைய ஸ்டாக்காக இருக்கலாம். ஒரு முறை துவைத்துப் போட்டாலே கிழிந்தும் போகலாம் அல்லது யாராவது வாடகைக்கு எடுத்துச் சென்று ஒரு முறை கட்டிய புடவையாக இருக்கலாம். இங்கே இவர் எல்லா ஆபத்துகளையும் தெரிந்துகொள்ளாமல் முடிவெடுக்கிறார்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

இந்த மூன்று உதாரணங்களில், நம்மில் பலர் முதல் அல்லது மூன்றாவது ரகத்தில்தான் இருக்கிறோம். அப்படி என்றால் நாம் முதலீடு பற்றியோ, கடன் வாங்குவது பற்றியோ, நம் கைவசம் உள்ள சொத்துகளைச் சரியாகப் பராமரிப்பது பற்றியோ முழு தெளிவில்லாமல் இருக்கிறோம். அதாவது, ஆபத்தை விரும்பாவிட்டாலும் ஆபத்தான நிலையில் வாழ்கிறோம்.

நம் அன்றாட வாழ்வில் கவனிக்கத் தவறிய இத்தகைய சில விஷயங்களைப் பார்ப்போம்.

வங்கிகளில் வைப்பு நிதிகள்... பாதுகாப்பானவையா?

ரிஸ்க் எடுப்பது பிடிக்காது என்று கூறும் பலர் தேர்ந்தெடுப்பது வங்கிகளில் செய்யப்படும் சேமிப்புகளைத்தான். இவை வைப்புகளாக, ரீ இன்வெஸ்ட்மென்ட் திட்டங்களாக அல்லது சாதாரண சேவிங்க்ஸ் கணக்காக அவரவரின் பணத்தேவையைப் பொறுத்துப் பகிர்ந்து வைக்கப்படுகிறது. இந்தக் கணக்குகளைச் சேமிப்புகள் என்ற வகையில் பார்த்தால் மிகவும் குறைந்த வட்டியையே ஈட்டித் தருகின்றன. இருந்தும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் வைக்கப்படுகின்றன. உண்மையிலே இதற்குப் பாதுகாப்பு உண்டா?

ஒருவர் தன் மொத்த சேமிப்பையும் ஒரே வங்கியில் வெவ்வேறு வித கணக்குகளாகச் சேமித்து வைக்கிறார். இதற்குக் காரணம் பல நேரங்களில் வயது. அதிகரிக்கும் வயதுடன் கூடவே தள்ளாமை, ஞாபக மறதி மற்றும் உடல் அசதி போன்றவையும் அதிகரிக்கின்றன. எனவே, இவர்களால் பல வங்கிகளுக்கு அலைய முடியாது. ஏதோ ஒரு வங்கியில் அதன் மேலாளர் இவருடைய தேவைகளைச் சரி வரச் செய்ய, இவரும் இந்தச் செளகர்யத்தை மனதில் வைத்து எல்லா சேமிப்புகளையும் அதே வங்கியில் தொடர்கிறார்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

இதில் உள்ள ஆபத்துகளைப் புரிந்துகொள்வோம்.

இதைப் பற்றிக் கேட்கப்படும் கேள்விக்குச் சாதாரணமாக நமக்குக் கிடைக்கும் பதில், `சேமிப்புக் கணக்குகளைத் தனியார் வங்கிகளிலோ, வெளிநாட்டு வங்கிகளிலோ போடவில்லை. தேசிய வங்கி ஒன்றில்தான் போட்டிருக்கிறேன்' என்பதாகத்தான் இருக்கும். காரணம், தேசிய வங்கிகளின் பின் அரசாங்கம் நம் பாதுகாப்புக்கு இருக்கும் என்ற நம்பிக்கைதான். ஆனால், இங்கு தெரிந்துகொள்ள வேண்டியது, இந்த வங்கி திவாலாகிப்போனால் நம் பணம் நமக்குக் கிடைக்குமா என்பதுதான். இங்குதான் DICGC (Deposit Insurance And Credit Guarantee Corporation) என்ற நிறுவனம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். முழுவதுமாக அரசின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம்தான் நாம் மேலே கூறியுள்ள வங்கி திவாலாகிப்போகும்போது நம் பாதுகாப்புக்கு கைகொடுக்கும். இந்த நிறுவனம் ஒருவருக்கு ஒரு வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் வரையில்தான் பாதுகாப்பு அளிக்கும். அதாவது, நம் கணக்கில் ஒரு கோடி சேமிப்பு இருந்தாலும், அந்த வங்கி திவாலாகிப் போய்விடும்போது நமக்குக் கிடைக்கும் பணம் ஐந்து லட்ச ரூபாய் மட்டுமே.

நாம் எந்த வங்கியில் நம் சேமிப்பை வைத்திருந்தாலும் இந்தப் பாதுகாப்பு கிடைக்கும். சேமிப்பு என்பதில் அனைத்துவித கணக்குகளும், சேவிங்ஸ், ரெக்கரிங், க்யூமிலேட்டிவ் என்று எல்லாம் இணைத்து அதில் ஐந்து லட்ச ரூபாய்க்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்தப் பாதுகாப்பு எல்லையை மனதில் கொண்டு இவ்வாறு நம் பணத்தைப் பாதுகாத்துக்கொள்ளலாம். இந்த உயர்ந்தபட்ச பாதுகாப்பு ஒரு வங்கியில் உள்ள ஒருவரின் கணக்குக்குத்தான். ஆகையால், நாம் ஐந்து லட்ச ரூபாய்வரை பல வங்கிகளில் பிரித்துப்போடும்போது நம் முழு தொகைக்கும் பாதுகாப்பு கிடைத்து விடுகிறது. ஒரே வங்கியில் பல்வேறு கிளைகள் என்பது சரி வராது. காரணம், அவை அனைத்தும் ஒரு வங்கியாகவே கருதப்படும்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

அடுத்து, ஒருவருக்கு என்பதால், ஒரே வங்கியில் ஜாயின்ட் கணக்குகளாக வைக்கும்போது, அவை தனித்தனி நபர் கணக்குகளாக கருதப்படும். இவ்வாறு கணவன் மனைவி பெயரில் இணைந்து கணக்குகளைத் தொடங்கலாம்.

நாமினியின் எல்லை எதுவரை?

வங்கிகளில் வைப்பு கணக்குகளைத் திறக்கும்போது நாமினேஷன் தேவையா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. பல வங்கிகளில் இதைக் கட்டாய தேவையாகவும் கருதத் தொடங்கி விட்டார்கள். நாமினேஷன் என்றால் என்ன என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பலர் இவ்வாறு செய்வதன் மூலம் தனக்குப் பின் பணம் யாருக்குப்போய்ச் சேர வேண்டுமோ அவரிடம் சரியாகப் போய்ச் சேர்ந்துவிடும் என்றே நம்புகிறார்கள். பலர் மனைவியை நாமினியாகப் போடுவதன் மூலம் தன் இறப்புக்குப் பின் பிள்ளைகளிடமிருந்து மனைவியைப் பாதுகாப்பதற்கு இது போதும் என்றே நினைக்கிறார்கள்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

இந்த நினைப்பு மிகத் தவறு. காரணம் நாமினேஷன் என்பது சட்டத்தில் ஒருவருக்குச் சொத்தின் மீது பாதுகாப்பு அளிக்கும் விஷயம் அல்ல. இதன் உபயோகம் பணத்தைக் கொடுப்பவருக்குப் பாதுகாப்பு அளிப்பதே. அதாவது, வங்கிகள் நம்மை நாமினேஷன் செய்ய வற்புறுத்துவது, நாளை அவர்கள் யாருக்கு இறந்தவரின் கணக்கில் உள்ள தொகையைக் கொடுத்தால் அவர்களுக்குச் சட்டத்தில் பாதுகாப்பு இருக்கும் என்பதற்காகவே. இவ்வாறு நாமினேஷன் இல்லாது போனால், அவர்களின் பொறுப்புகள் கூடும். வாரிசுச் சான்றிதழ், வாரிசுகளிடம் இருந்து நோ அப்ஜெக்‌ஷன் படிவம் என்று பல தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆகவே, ஒருவரை நாமினியாகப் பரிந்துரைக்கும்போது அவருக்குப் பணத்தைப் பெறுவதற்கு மட்டுமே சட்டம் உரிமை கொடுக்கிறது. பணத்துக்கு அவரைச் சொந்தமாக்குவதில்லை. ஆகவே, மனைவிக்கு அந்தப் பணம் போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அவரை ஜாயின்ட் ஹோல்டராகத் தேர்வு செய்யுங்கள். அப்போது அவர் பணத்துக்குச் சொந்தக்காரர் ஆகிறார்.

நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருக்கிறீர்களா... கவனம்!

நம்மில் பலர் நகைகளை வீட்டில் வைத்துப் பாதுகாப்பதற்குப் பயப்படுகிறோம். காரணம், பல வீடுகளில் கணவன் மனைவி இவருமே வேலைக்குச் செல்கின்றனர். அதனால் பாதி நேரம் வீடு பூட்டியேதான் கிடக்கிறது. நகை திருட்டுப்போய்விடுமோ எனும் பயத்தில் வங்கிகளில் இருக்கும் பாதுகாப்புப் பெட்டகத்தில் இவற்றை வைக்கிறோம். இதற்கென வருடம் தவறாமல் கட்டணமாக ஒரு பெரிய தொகையைக் கட்டுகிறோம்.

இவ்வாறு வைக்கப்படுவது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்று கேட்டால் வீட்டுக்கு வரக்கூடிய திருடர்கள் வங்கிகளுக்கு வராத வரையில்தான். காரணம், வங்கிகளின் பெட்டகத்தில் வைக்கப்படும் பொருள்களுக்குக் காப்பீடு கிடையாது. சில வருடங்களுக்கு முன் வரை இவற்றுக்கும் காப்பீடு இருந்தது. ஆனால், பல நேரங்களில் உள்ளே வைக்கப்படும் பொருள்கள் பற்றிய விவரம் வங்கிகளுக்குத் தெரியாததால், காப்பீட்டுத் தொகை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இன்ஷூரன்ஸ் நிறுவனம் லாக்கர்களுக்கு காப்பீடு பாதுகாப்பு கிடையாது என்று கூறிவிட்டது.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையில் பல பெட்டகங்கள் உடைக்கப்பட்டு பொருள்கள் களவாடப்பட்டன. அதேபோல் 2015-ம் ஆண்டு பெய்த மழையின்போது, பல வங்கிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வங்கி லாக்கர்களில் பலர் அவர்கள் வீட்டுப் பத்திரங்களை வைத்திருந்தனர். அவை அனைத்தும் உள் புகுந்த நீரால் பாழாகிப்போயின. இவை எதற்கும் காப்பீடு கொடுக்கப்படவில்லை. ஆனால், நாம் நம் வீட்டுப்பொருள்களுக்கு காப்பீடு செய்யும்போது, அங்கு வைக்கப்படும் நகைகளையும் அதே போல் உடலில் அணியும் நகைகளையும் இணைக்கலாம். ஆனால், ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இவற்றுக்கான பிரீமியம் தொகை மிக மிக அதிகம்.

தங்கத்தை வைத்துக் கடன் வாங்கலாமா?

தங்கம் பல கஷ்டமான தருணங்களில் கைகொடுக்கக்கூடிய ஒரு சேமிப்பாக இருக்கிறது. கொரோனா இடர் காலத்தில், பலர் வேலையிழந்து, வருமானம் கிடைக்காமல் சிரமப்பட்டபோது, அவர்களின் தங்க நகைகள்தான் உதவிக்கு வந்தன. ஆனால், பலர் நகைகளை விற்காமல் அவற்றின் மீது கடன் எடுத்து தேவையைச் சமாளிக்கின்றனர். காரணம், நகையின் மீது உள்ள பற்றுதல். ஆனால், இது எந்த அளவு சரியானது?

உங்கள் பணத்தை நீங்கள் உபயோகிக்க வட்டி கொடுக்கிறீர்கள். இதே போல்தான் டெபாசிட்டுகளின் மீது கடன் வாங்குவதும்.இதை எப்போது செய்யலாம் என்று பார்ப்போம்.

உங்கள் பணத்தேவை மிகக்குறுகிய காலத்துக்கு மட்டும்தான் என்றால் மற்றும் இந்தத் தேவைக்குப் பின் வாங்கிய கடனை கட்டி முடிப்பதற்கு உங்களுக்குத் தேவைப்படும் பணம் கைகளில் கிடைக்கும் என்றால் மட்டுமே தங்கக்கடன் அல்லது டெபாசிட்டுகளின் மீது கடன் எடுப்பது லாபம். அப்படி இல்லாமல், கடன் முடிவுறும் காலம் வரையில் வைத்திருக்க வேண்டி வரும் என்றால், வைப்புத் தொகையையோ, நகைகளையோ விற்று விட்டு முழுத்தொகையையும் கைகளில் பெறுவதே புத்திசாலித்தனம்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

வட்டி இல்லா தங்கக்கடன் பற்றியும் நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நாம் இருப்பது தொழில் உலகத்தில். இங்கு யாரும் நஷ்டத்துக்குத் தொழில் செய்ய மாட்டார்கள். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், நாம் அடுத்து வைக்கப்போகும் அடி சரியானதாகவே இருக்கும். கடன் கொடுப்பதன் அடிப்படை நோக்கம் அதிலிருந்து வட்டியாக நாம் பெறக்கூடிய லாபத்தை மனதில் வைத்துதான். அப்படி என்றால் வட்டி இல்லா நகைக் கடன் எவ்வாறு சாத்தியம்?

இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த வகை நகைக் கடன் திட்டத்தில், நாம் கொடுக்கும் தங்கத்தின் மதிப்பில் 70 சதவிகிதம் மட்டுமே கடனாகக் கொடுக்கப்படும். மற்ற நகைக் கடன்களைப்போல, இங்கும் நகையில் பதித்துள்ள கற்களுக்கு மதிப்பு கிடையாது. நாம் கொடுக்கும் நகை தங்கமாக உருக்கப்பட்டு அன்றைய தங்கத்தின் விலையில் மதிப்பீடு செய்யப்படும். இந்தத் தொகையில் 70 சதவிகிதம் கடனாக அளிக்கப்படும்.

கடன் கொடுக்கப்பட்ட கால இறுதியில் நாம் முழுவதுமாக இந்தக் கடன் தொகையைச் செலுத்த வேண்டும். அப்போது நாம் கடனுக்காகக் கொடுத்துள்ள அதே அளவு தங்கத்துக்கு அந்தக் கடையிலேயே வேறு நகை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கடன் கொடுப்பது நிறுவனத்துக்கு எந்த வகையில் லாபம் என்று பார்த்தால், அவர்களுக்கு தினசரி வணிகத்துக்குத் தேவையான தங்கம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. மதிப்பில் 70 சதவிகிதம்தான் கடன் தொகை. இதே அளவு தங்கத்தை அவர்கள் மார்க்கெட்டில் வாங்க வேண்டும் என்றால் முழுத்தொகையையும் கொடுக்க வேண்டும். இந்த வொர்க்கிங் காப்பிடலுக்கு அவர்கள் வங்கிகளுக்கு வட்டியும் செலுத்த வேண்டும்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

இதில் நமக்கு ஆபத்து எங்கே வருகிறது என்று பார்ப்போம். நமக்குக் கடனாகக் கிடைத்த தொகை 70 சதவிகிதம் மட்டுமே. கடன் முடிந்த உடன் முழு மதிப்புக்குத் தங்கம் கிடைத்துவிடும். இங்கே நமக்கு சேதாரம், செய்கூலி போன்றவை இரண்டு முறை நஷ்டமாகும். முதலில் நம் பழைய நகையை உருக்கும்போது, அடுத்து புது நகை வாங்கும்போது. இதைத்தவிர, அந்த நகைக்கடை மூழ்கிப்போய்விட்டால்? கேஎஃப்ஜே நிறுவனம்தான் இந்தத் திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. ஆனால், நிறுவனம் மூடப்பட்டபோது, இந்த வகை நகைக்கடன் வாங்கிய பலர் செய்வதறியாது நின்றனர். இவர்களுக்கு வர வேண்டிய பாக்கி 30 சதவிகிதம் கிடைக்காமல் போயிற்று. அதேபோல், கடன் காலம் முடியும்போது முழுத்தொகையையும் கட்டி கடனை முடிக்காவிட்டாலும் நமக்கு நம் தங்கமும் கிடைக்காது, இந்த 30 சதவிகிதமும் கிடைக்காது.

இதற்கு ஒரே வழி, நமக்குத் தேவை எனில், தங்கத்தை விற்று விடுவதே சரி. கைகளில் பணம் சேரும்போது மறுபடியும் வாங்கிக் கொள்ளலாம். மாத வட்டி கட்ட தேவை இல்லை எனும் சௌகர்யத்தில், ஆழம் தெரியாமல் கால்களைப் பள்ளத்தில் விட வேண்டாம்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

களவு போகும் கடவுச் சொற்களும்வங்கித் தகவல்களும்!

இன்றைய காலகட்டத்தில் இந்த வகை பாதுகாப்பு மிக அவசியமாகிப்போகிறது. காரணம், தற்போதுள்ள கோவிட் இடரால் நம்மால் முன்புபோல் வெளி இடங்களுக்கு, முக்கியமாக வங்கிகளுக்குச் செல்ல முடிவதில்லை. நாம் முழுவதுமாக இணையச் சேவைகளுக்கு மாறிவிட்டோம். வங்கிக் கணக்குகளை ஆன்லைன் மூலம் செயல்படுத்த முடிகிறது. வாங்குவதும் விற்பதும் ஆன்லைனிலேயே முடிந்துவிடுகிறது. ஆனால், பல நேரங்களில் இத்துடன் நம்மை நெருங்க வரும் அபாயங்களை நாம் உணர்வதில்லை. நாம் யாரிடமும் சொல்லாமல் வெகு ஜாக்கிரதையாக வைத்திருக்கும் பல தகவல்கள் நம் தொலைபேசி மூலமே கசிந்து போகும் அபாயம்தான் இது. இப்படி ஒரே நிமிடத்தில் வங்கிக் கணக்கில் இருந்து பணம் மாயமாகிப்போன பல உதாரணங்கள் உண்டு.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

இது எப்படி நடக்கிறது?

இப்போது நாம் எதிர்பார்த்திராத வகையில் நடைபெறும் ஒரு சைபர் அட்டாக்கைப் பற்றிப் பார்க்கலாம். நாம் நெடும்தூரப் பயணம் ஒன்றில் இருக்கிறோம். பேருந்து, ரயில் அல்லது விமானம் எதுவாக இருந்தாலும் கதை ஒன்றுதான். அப்போது நம் கைகளில் உள்ள செல்போனில் சார்ஜ் குறைந்துவிடுகிறது. நமக்குப் பதைபதைப்பு அதிகமாகிறது. காரணம், பயணத்தின் நடுவில் வீட்டுக்கு போன் செய்து பயணத்தைப் பற்றிச் சொல்லத் தேவை இருக்கலாம். இறங்கிய உடன் கால் டாக்ஸி கூப்பிட தொலைபேசி தேவை இருக்கலாம். முக்கியமான மெயிலை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டி இருக்கலாம். இப்படிப் பல காரணங்களின்போது செல்போன் சார்ஜ் இழந்து மந்தமாயிருப்பது நமக்குச் சரியாக வராது. இந்தக் காரணத்தால் ஏர்போர்ட்டிலோ, பேருந்து அல்லது ரயில் நிலையத்திலோ இருக்கும் பொது USB charger ஒன்றில் நம் செல்போனை உடனே சார்ஜில் போடுகிறோம்.

இப்போதுதான் நாம் ஹாக்கர்களுக்கு நம் கருவியை நாமே திறந்து வரவேற்பு வைக்கிறோம்.

காரணம் இப்படி உள்ள பொது சார்ஜர்களில் நாம் செல்போனை சார்ஜுக்குப் போடும்போது, பவர் மட்டு மல்ல, நம் கைப்பேசியில் உள்ள தகவல்கள் அனைத்தும் பரிமாற்றப்படுகின்றன. நம் இ-மெயில், மெசேஜ், போட்டோ, கான்டாக்ட்ஸ்... இவை அனைத்தும் இப்போது மூன்றாம் நபர் கைகளில். தவிர, இப்படி பொது மின்னேற்றியில் நாம் நம் கருவியை வைத்த மூன்றே நிமிடங்களில், இந்த USB போர்ட் வழியே நம் கருவிக்குள் வைரஸ் புகுந்துவிடும். இதற்குத் தீர்வு, இது போன்று பொது இடங்களில் உள்ள போர்ட்டில் (port) போனை சார்ஜ் செய்ய வேண்டாம்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

உங்கள் பாதுகாப்பு... உங்கள் கைகளில்...

கைப்பேசிகளின் ஹோம் திரையை லாக் செய்து வையுங்கள். மூன்றாம் நபர்கள் அதில் உள்ளவற்றைப் பார்ப்பது தடுக்கப்படும்.

பொது இடங்களில் கைப்பேசியை சார்ஜ் செய்யாதீர்கள். முடிந்தால் பவர் பாங்க் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளவும்.

இரண்டு வழி அங்கீகாரம் (two factor authentication) முறையை நடைமுறைப்படுத்துங்கள். இது சற்றே சிரமமாக இருக்கும். இருந்தாலும் பாதுகாப்பு அதிகம்.

மென்பொருள்களை அவ்வப்போது மேம்படுத்திக்கொள்ளவும்.

ப்ளூ டூத்தை தேவை இல்லாதபோது அணைத்து வைத்திருக்கவும்.

சைபர் அட்டாக் என்பது இவ்வளவுதானா என்றால், இல்லை. ஸ்மார்ட் பொருள்கள் அல்லது கருவிகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கே எல்லாம் இந்த வகை தாக்குதல்கள் நடக்கின்றன.

உதாரணத்துக்கு நீங்கள் வீட்டில் அதிகம் உபயோகிக்கும் அலெக்சா அல்லது கூகுள் ஹோம். இவை இரண்டும் நம் வீட்டில் நம் அன்றாட தேவைகளுக்கு உதவி செய்யும் கருவிகள். வெளியே கிளம்பும் முன் குடை எடுத்துச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை இவை கூறும். அலெக்சா இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்ற ஒரு கேள்விக்கு வானிலை அறிக்கை பாலசந்திரனுக்குச் சற்றும் குறையாமல் நிலவரத்தைத் தெளிவாகச் சொல்லும். அதேபோல் இவை வழியே விளக்குகளை ஆன் ஆஃப் செய்ய முடியும், நாம் வருவதற்கு முன்னே சாப்பாட்டைச் சூடுசெய்ய முடியும், கார் கராஜ் கதவை, ஏன் வீட்டுக்கதவைக்கூட இவற்றை வைத்து திறந்து மூட இயலும்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

ஆனால், பல வருடங்களாக இவற்றின் மூலமாக இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் நாம் பேசுவதைப் பதிவு செய்கின்றன எனும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, அது அப்படி நடப்பதில்லை எனும் பதில் இந்த நிறுவனங்களால் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டறிதல், கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் வழியே ஹாக்கர்களின் ஊடுருவல் நடக்கிறது என்பதுதான். இவர்கள் சாதாரணமாக ஒட்டுக்கேட்பது மற்றும் ஃபிஷிங் முதலியவற்றைச் செய்கிறார்களாம்.

இது எப்படிச் சாத்தியப்படுகிறது?

இந்த நிறுவனங்களின் வாய்ஸ் அஸிஸ்டன்டுடன் உபயோகப்படுத்தும் மூன்றாம் தரப்பு... அதாவது, தேர்டு பார்ட்டி மென்பொருள்கள் மூலமாகத்தான் இவை நடக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள். உதாரணத்துக்கு, அலெக்சாவுக்கு ஜாதகம் பார்க்கும் திறமையை ஏற்படுத்த இதைப்போன்ற ஒரு மூன்றாம் தரப்பில் தயாரிக்கப்பட்ட ஒரு மென்பொருளைத்தான் நாம் உபயோகிக்க வேண்டும்.

இந்த மென்பொருள், நாம் நம் அன்றைய நாள் கணிப்பைக் கேட்டு முடித்துவிட்டு, அலெக்சாவை நிறுத்தச் சொல்கிறோம். நம்மைப் பொறுத்தவரையில் நாம் மறுபடியும் அழைக்கும் வரை அலெக்சா செயலற்ற நிலையில்தான் இருக்கும் என்று நம்புகிறோம்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

ஆனால், SR Labs ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டுபிடிப்பு, அலெக்சா நாம் நிறுத்தச் சொன்ன பிறகுகூட நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது கேட்பதோடு நிறுத்துவதில்லை. அவை அனைத்தும் எங்கோ டிரான்ஸ்மிட் செய்யப்பட்டு பின் பதிவும் செய்யப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல்களை முன்வைக்கிறது.

இதனால் என்ன... எனும் கேள்வி எழுகிறதா? உதாரணத்துக்கு வீட்டில் இருக்கும்போது மிகச் சர்வசாதாரணமாக நாம் வங்கி எண் சிவிவி எண், பெட்டகம் எண், ஏடிஎம் பாஸ்வேர்டு போன்ற பல உயர் பாதுகாப்பு தேவைப்படும் விஷயங்களை உரையாடலில் பலத்துக் கூறுகிறோம். இவை அனைத்தும் இந்தக் கருவிகள் மூலம் யாரோ முகம் தெரியாத மூன்றாம் நபர் கைகளுக்குப் போய் விடுகின்றன. இதன் அபாயத்தை இங்கே தனியாகக் கூறத் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

கார்டு வழி பரிவர்த்தனைகளில் கவனம்!

கார்டுவழியில் பரிவர்த்தனை செய்யும்போது பல நேரங்களில் அன்றைய தேதியில் மிகச் சுலபமாகக் கிடைக்கக்கூடிய தொகையை மட்டுமே மனதில் கொண்டு பல பொருள்களை வாங்கி விடுகிறோம். ஆனால், நடைமுறையில் சிலவற்றை நாம் கடைப்பிடிக்காதபோது ஏற்படக்கூடிய பாதிப்புகளை பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். அவை.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

நம் கார்டின் பேமென்ட் பீரியடை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மாத ஸ்டேட்மென்ட்டில் காட்டப்படும் தொகையை முழுவதுமாகச் செலுத்தி முடிக்க வேண்டும்.

எப்போது அப்படிச் செய்யாமல் அதில் காட்டப்படும் குறைந்தபட்ச தொகையைக் கட்டுகிறோமோ, அப்போதிலிருந்தே நமக்குக் கொடுக்கப்படும் 50 நாள்கள் வட்டி இல்லா கடன் இல்லாமல் போகிறது.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

கார்டு மூலம் எடுக்கப்படும் பணத்துக்கு இந்த 50 நாள்கள் சலுகை கிடையாது. எடுத்த நாளிலிருந்து அதற்கு வட்டி 40.2%. தவிர, அதிகபட்ச வர்த்தக கட்டணமாக ரூபாய் 300 வரை செலுத்த வேண்டும். இந்த வட்டி மற்றும் கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும். இதை முதலிலேயே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

உரிய தேதியில் பணம் செலுத்தாவிட்டால், ஒவ்வொரு முறையும் லேட் பேமென்ட் கட்டணம் உண்டு.

காசோலை மூலமாகப் பணம் செலுத்தப்பட்டால் அந்தக் காசோலை கிளியரிங்குக்காக எடுக்கும் நாள்களைக் கவனத்தில் கொள்ளவும்.

பொலிவிழந்த, உடைந்த நகைகளைவிற்கலாமா, வைத்திருக்கலாமா?

திடீரென கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலி அறுந்து போகும். கை வளையல்கள் நசுங்கி அல்லது கைகளுக்கு சிறியதாகப் போய்விடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒன்று நாம் அவற்றைப் புதிய நகையாக மாற்றுவோம். அல்லது கல்யாணத்துக்கு மகள் இருந்தால் அவற்றை அப்படியே லாக்கரில் வைத்துவிடுவோம். காரணம் நகையாகச் செய்யும்போது செய்கூலி, சேதாரம் என்று நமக்கு நஷ்டம் ஆகிறது.

மகளின் திருமணம் பல ஆண்டுகளுக்குப் பின்னரே வரப்போகிறது எனும்போது அவளுக்குப் பிடித்தது போன்ற நகையை அந்த நேரத்தில் வாங்கலாம் எனும் நினைப்போடு உடைந்த அல்லது பொலிவிழந்த நகைகளை அப்படியே லாக்கரில் வைத்துவிடுவோம். அப்படி வைக்கப்படும் தங்கம் நமக்கு எந்த வித வருமானமும் பெற்றுத் தராது. ஆனால், அப்படி இல்லாமல் அவற்றை வருமானம் பெற்றுத்தரும் முறைக்கு மாற்ற முடிந்தால்? அதற்குத் தீர்வு?

தங்கத்தைப் பணமாக்கும் திட்டம்
(Gold Monetisation Scheme)


Gold Deposit Scheme 1999-க்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டது இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், நம் கைவசம் இருக்கும் தங்கத்தை Collection and Purity Centers ( CPC ) – BIS (Bureau of Indian Standards ) அங்கீகாரம் பெற்று, மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் .995 தரமாக உருக்கப்பட்டு அந்தத் தங்கக் கட்டிகளை, பரிந்துரைக்கப்பட்ட வங்கிகளில் கொடுக்கப்பட வேண்டும்.

திட்ட வகைகள்

1-3 வருடங்கள் - குறுகிய கால வைப்புநிதி திட்டம் (Short Term Bank Deposit (STBD).

5-7 வருடங்கள் - நடுத்தர கால வைப்பு நிதி திட்டம் (Medium Term Bank Deposit (MTBD).

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

12-15 வருடங்கள் - நீண்ட கால வைப்பு நிதி திட்டம் (Long Term Bank Deposit (LTBD).

STBD என்பது வங்கிகளில் போடப்படும் சாதாரண டெபாசிட்டாகவும், (இவற்றுக்கு கிரெடிட் கியாரன்டி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கொடுக்கும் பாதுகாப்பு உண்டு) MTBD, LTBD இரண்டும் கவர்ன்மென்ட் டெபாசிட்டாகவும் கருதப்படும், MTBD, LTBD இரண்டும் கவர்ன்மென்ட் டெபாசிட்டாகவும் (அரசாங்கத்தின் முழு பாதுகாப்பு உண்டு) கருதப்படும்.

முடிவதற்கு முன் பணத்தை எடுக்கும் Premature Withdrawal-க்கு வங்கிகள் தங்களின் விருப்பப்படி அபராதம், குறைந்தபட்ச நாள்கள் (Minimum lock in period) அமைத்துக்கொள்ளலாம் லாக்இன் காலம் முடிந்தபின் எப்போது வேண்டுமானாலும் கணக்கை முடித்துக்கொள்ளலாம்.குறுகிய கால வைப்பு கணக்குக்கு இந்த லாக்இன் பீரியடை வங்கிகளே முடிவு செய்துகொள்ளலாம். நடுத்தர கால வைப்பு கணக்குக்கு மூன்று வருடங்களும், நீண்டகால வைப்பு கணக்குக்கு ஐந்து வருடங்களும் குறைந்தபட்ச லாக்இன் பீரியடாக கூறப்பட்டிருக்கிறது.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

வட்டி

இந்தத் திட்டத்தில் வட்டி Medium Term Bank Deposit 2.25%, Long Term Bank Deposit 2.5%. தங்கம் கட்டிகளாக மாற்றப்பட்டு கொடுத்த நாளிலிருந்து அல்லது 30 நாள்களுக்குள், எது முன்னால் வருகிறதோ, அன்றிலிருந்து கொடுக்கப்படும். இந்த வட்டியும் முதலீடும் தங்கமாகவே கணக்கில் வைக்கப்படும். எடுக்கும்போது அன்று உள்ள தங்கத்தின் விலையில் மாற்றப்படும்.

வரம்பு

குறைந்த பட்ச டெபாசிட்டாக .995 தரம் கொண்ட தங்கம் 30 கிராம். அதிக பட்ச டெபாசிட் வரம்பு ஏதும் இல்லை.

யார் போட முடியும்?

இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் அதாவது தனி நபர்கள, பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர் (Hindu undivided family, அறக்கட்டளைகள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாங்க முடியாது.

எப்படித் தரப்படும்?

முடிவு தேதி அன்று தங்கமாகவோ (கொடுத்த தங்கம் +வட்டி) அல்லது பணமாகவோ மாற்றி வாங்கிக்கொள்ள முடியும்.

எப்படி ஆரம்பிப்பது?

இந்தத் திட்டத்தில் கணக்கை ஆரம்பிக்க ஒரு வங்கிக்கணக்கைத் திறக்க கொடுக்க வேண்டிய அட்ரஸ், ஐடி ப்ரூஃப் கொடுத்தால் போதும்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

நன்மைகள்

பணம் ஈட்டாத தங்கம் இப்போது வட்டி பெற்றுத்தருகிறது.

லாக்கர் செலவு, திருட்டு பயம் இல்லை.

நினைத்தபோது எடுக்கக்கூடிய லிக்விடிடி உண்டு. லாக்இன் காலத்துக்குப்பின் இவற்றை எடுக்க இயலும்

இந்த வட்டிக்கு வருமான வரி கிடையாது.

தங்கத்தின் விலை அதிகரித்து இருந்தாலும் கேப்பிடல் கெயின்ஸ் வரி (Capital gains tax) கிடையாது.

பாதிப்புகள்

நம் தங்கம் .995 தங்கமாக மாற்றப்படும்போது இழப்பு ஏற்படும்.

கற்களும் அகற்றப்பட்டு எடை குறையும் பாதிப்பு உண்டு.

இதற்கு முன்னால் தங்கம் வருமான வரி கணக்கில் காட்டப் பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், கேள்விகள் எழலாம். 50,000 ரூபாய்க்கு மேல் கட்டப்பட்டால், PAN நம்பர் கொடுக்க வேண்டும்.

ஆக, இந்த வகையில் நாம் உபயோகப்படுத்த முடியாத தங்கம் சேமிக்கப்படும்போது நம் எதிர்காலத் தேவையும் கவனிக்கப்படுகிறது, இக்கால தேவைகளுக்கும் வட்டிப்பணம் கிடைக்கிறது.

மருத்துவக் காப்பீடுகள் - மறக்கக் கூடாத விஷயங்கள்

இந்த கோவிட் பேரிடர் காலத்தில் மருத்துவக் காப்பீடுகள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. பல காப்பீடுகள் இந்தப் பேரிடரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் அரசாங்கம் அனைத்து காப்பீடுகளும் இந்த இடரையும் கணக்கில் கொண்டு வர வேண்டும் என்று கூறி இருக்கிறது. உங்கள் காப்பீட்டாளரை அணுகி இதற்கான முயற்சியில் உடனே இறங்குங்கள்.

இப்போது பொதுவாக எடுக்கப்படும் மருத்துவக் காப்பீடுகளில் நாம் கவனிக்காமல் விடக்கூடியவற்றைப் பார்ப்போம்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

நம்மில் பலர், பல நேரம் வருமான வரி குறைப்பதற்கு அல்லது யாரோ முகலாபத்துக்காகக் காப்பீடுகள் எடுக்கிறோம். இது மிகவும் தவறு. காப்பீடுகள் நம் நலனைக் கருத்தில்கொண்டு நம் தேவைக்கு ஏற்றபடி உள்ளதா என்பதை அறிந்துகொண்டு எடுக்கப்பட வேண்டும்.

காப்பீடுகள் பற்றிய விவரத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். நாம் விமானத்தில் ஏறி அமர்ந்த உடன் நமக்கு சுய உதவி பற்றிய ஒரு டெமான்ஸ்ட்ரேஷனை விமானப் பணிப்பெண் எடுக்கத் தொடங்கிவிடுவார். அதேபோல் வீட்டில் உள்ள அனைவருக்கும் எடுத்த காப்பீடு பற்றிய விளக்கம், எங்கே வைத்திருக்கிறீர்கள, என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்லிவிடுங்கள். அவற்றைப் பற்றி குடும்பத்தாரிடம் சொல்வதுடன் உங்கள் வேலை முடிவதில்லை. இவற்றையும் மனதில் கொள்ள வேண்டும்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

ஆஸ்பத்திரிக்குச் சென்று அனுமதிக்கப்படுவதற்கு முன்பே நீங்களோ, உங்கள் குடும்பத்தார் ஒருவரோ உங்கள் காப்பீட்டு பிரதிநிதிக்குத் தெரியப்படுத்திவிடுங்கள்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட காப்பீட்டு இன்ஷூரன்ஸ் கார்டை ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் செல்லவும்.

மெடிக்கல் ரிப்போர்ட் மற்றும் பரிந்துரைகளைப் பத்திரப்படுத்தவும்.

உங்கள் உடல்நிலை பற்றிய தகவல்களை உரிய படிவத்தில் தெளிவாக எழுதி சமர்ப்பிக்கவும்.

இந்த வகை காப்பீடுகளில், பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவது குறிப்பிட்ட ஹாஸ்பிடல்களில் மட்டுமே சாத்தியம். இவை PPN ஹாஸ்பிடல்கள் எனக் கூறப்படுபவை. அதாவது, Preferred Provider Network. அதனால் முன்கூட்டியே உங்கள் வீட்டுக்கு அருகில் இவை எங்குள்ளன என்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஏதோ காரணத்தால் அப்படிச் செல்ல முடியாவிட்டால், இந்த காஷ்லெஸ் என்பது இல்லாமல் போய்விடும். நாம் முதலில் பணம் செலுத்தி பின் காப்பீட்டு நிறுவனத்திடம் வாங்க வேண்டி வரும். இதைத்தவிர எந்த வகை காப்பீடு எடுத்தாலும் மனதில்கொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்...

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

நிறைய காப்பீடுகள் வருமான வரிக்காக அல்லது கடமைக்காக எடுக்கப்படுகின்றன. முக்கியமாகக் காப்பீட்டின் பிரீமியம் தொகை எந்த வகை காப்பீடு என்பதைத் தீர்மானிக்கிறது. அதாவது, எதில் மிக முறைந்த வருட ப்ரீமியமோ அது எடுக்கப்பட்டால், காப்பீடுகளுக்கான தேவையே அடிபட்டுப் போய்விடுகிறது. ஆகவே நம் வயது, நம் வேலை, நம் குடும்ப வரலாறு, நமக்கிருக்கும் நோய்கள் இவற்றைக் கருத்தில்கொண்டு எந்த வகையான காப்பீடு தேவை என்று தீர்மானம் செய்யுங்கள்.

எந்த வகை பாலிசி என்று தீர்மானித்த பிறகு, காப்பீட்டுத் தொகை பற்றிய தீர்மானம் முக்கியம். மருத்துவ செலவுகள் வயதாக வயதாக அதிகரிக்கும். தவிர ஃபேமிலி இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, வயதானவர் யாரோ அவர் வயதுதான் காப்பீட்டு பிரீமியம் தொகையாக நிர்ணயிக்க எடுக்கப்படும்.

எல்லா வகை உடல் உபாதைகளும் காப்பீட்டுகளில் அடங்காது. ஆகவே, எந்த வகை பாதிப்பு எந்தக் காப்பீட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை முதலிலேயே தெரிந்து கொள்ளுங்கள்.

அதேபோல் ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்துக்கும் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கு விதி முறைகள் மாறுபடுவதால், இவற்றைப் பற்றி முன் கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

பேங்க் பேலன்ஸ் முதல் பாஸ்வேர்டு வரை... பத்திரமா பார்த்துக்கோங்க!

மிக முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியவை மருத்துவக் காப்பீடுகள். அவை எடுத்த நாளிலிருந்து கிடைக்காது. கிடைக்கும் ஆனால் கிடைக்காது போலத்தான். இது நமக்குக் காப்பீடு எடுக்கும் முன்பே இருந்த நலக்குறைவுகளுக்குத்தான். அதே போல் மெடர்னடி காப்பீடுகளும் எடுத்த நாளிலிருந்து கிடைக்காது. இவற்றுக்கு சில வருடங்கள் காத்திருப்பு தேவை. அதைப் பற்றி முன்கூட்டியே கேட்டறிந்து கொள்ளுங்கள்.

கடைசியாக மிக முக்கியமான ஒன்றையும் கூறிவிடுகிறேன். இப்போதெல்லாம் நாம் வேலை பார்க்கும் நிறுவனமே நம் மருத்துவக் காப்பீடுகளை எடுத்துக்கொடுத்துவிடுகிறார்கள். நாம் இந்த வேலையை விட்டுவிட்டு வேறு ஒன்றுக்கு மாறும்போது, அவர்களால் எடுக்கப்பட்ட காப்பீடுகளும் நிறுத்தப்பட்டுவிடும். ஆக, காப்பீடுகள் இருக்கின்றன என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், அவை தேவைப்படும் நேரத்தில் தேடும்போது, அவை முந்தைய நிறுவனம் நமக்காகப் போட்டது என்பது நினைவுக்கு வந்து, பரிதவித்து நிற்போம்... உஷார்!

அத்தனையையும் அறிந்துகொள்வோம், புரிந்து கொள்வோம், நம்மைப் பாதுகாத்துக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism