விருப்ப ஓய்வு கோரிக்கை! - அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்!

`அரசுப் பணியில் நேர்மையாகப் பணியாற்றுவது என்பது வலிகளும் வேதனைகளும் நிரம்பிய ஒன்று’ - சகாயம் ஐ.ஏ.எஸ்
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு மூன்றாண்டுகள் இருந்த நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருந்தார் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ். `கடந்த ஆறு ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தோடு அவருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. இனியும் அவர் பணியில் நீடிக்க விரும்பவில்லை' என அப்போது தெரிவித்தனர் சகாயம் தரப்பினர்.

கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதியே விருப்ப ஓய்வு கேட்டு மனு அளித்திருந்தபோதும், அது தொடர்பாக முடிவு எடுக்கப்படாமல் இருந்துவந்தது. இந்தநிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
முன்னதாக விருப்ப ஓய்வு முடிவு குறித்து சகாயத்திடம் பேசினோம். `` அரசுப் பணியில் நேர்மையாகப் பணியாற்றுவது என்பது வலிகளும் வேதனைகளும் நிரம்பிய ஒன்று. என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் தெரிவிக்கிறேன்" என்றதோடு முடித்துக்கொண்டார். இந்தச் சூழலில்தான் தற்போது அவரது விருப்ப ஓய்வு கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. சகாயத்தின் அடுத்தகட்ட திட்டம் என்ன என்பது போகப் போகத்தான் தெரியும்!
சகாயத்தின் `விருப்ப ஓய்வு' பின்னணி தொடர்பாக முழுமையாகத் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்...