Published:Updated:

சேலம் விமான நிலைய விரிவாக்கப் பிரச்னை... ‘இரட்டை வேடம் போடுகிறதா தி.மு.க அரசு?’

சேலம் விமான நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
சேலம் விமான நிலையம்

- கொதிக்கும் விவசாயிகள்

சேலம் விமான நிலைய விரிவாக்கப் பிரச்னை... ‘இரட்டை வேடம் போடுகிறதா தி.மு.க அரசு?’

- கொதிக்கும் விவசாயிகள்

Published:Updated:
சேலம் விமான நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
சேலம் விமான நிலையம்

சென்னை டு சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத் தில் முடிவெடுக்க முடியாமல் திணறிவரும் தி.மு.க தலைமை யிலான தமிழ்நாடு அரசுக்கு, மேலும் ஒரு சிக்கலாக வந்து சேர்ந்திருக்கிறது சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டம்!

சேலம், காமலாபுரத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந் திருக்கிறது, சேலம் விமான நிலையம். இதை 565 ஏக்கர் நிலப்பரப்புகொண்ட விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. ஆனால், விரிவாக்கத் திட்டத்துக்கு எதிராக காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிப்பாடி என நான்கு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சேலம் விமான நிலைய விரிவாக்கப் பிரச்னை... ‘இரட்டை வேடம் போடுகிறதா தி.மு.க அரசு?’

அண்மையில், இந்தப் பிரச்னைக்காக உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் ஒருவரான கிருஷ்ணனிடம் பேசினோம். “1993-லேயே விமான நிலையம் கட்டப்போவதாகச் சொல்லி, எங்கள் கிராமங்களிலிருந்து 165 ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துக் கொண்டது. அப்போது, நிலத்துக்கான உரிய இழப்பீடு தருவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவ தாகவும் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், விமான நிலையம் கட்டப்பட்டு இத்தனை ஆண்டுக்காலம் ஆகிறது. இன்னும் எங்களில் யாருக்கும் வேலை தரவில்லை. நிலத்துக்குத் தருவதாகச் சொன்ன பணத்தையும் முழுமையாகக் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு, ‘விமான நிலை யத்தை விரிவாக்கம் செய்யப்போறோம். நிலத்தைக் கொடுங்க’ என்று அதிகாரிகள் வந்து கேட்டார்கள். ‘ஏற்கெனவே விமான நிலையத்துக்குக் கொடுத்தது போக மீதமுள்ள இடத்தில்தான் விவசாயம் செய்கிறோம். அதில்தான் ஜீவனம் செய்துகொண் டிருக்கிறோம். இதையும் கொடுத்துட்டா, சாப்பாட்டுக்கு வழி யில்லாம நாங்க சாகவேண்டியதுதான்’ என்று சொல்லி, நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளைத் திருப்பி அனுப்பினோம். ஆனால், அவங்க பதிலுக்கு எங்க நான்கு கிராமங்களிலும் நிலத்தை யாருக்கும் யாரும் விற்க முடியாதபடிக்கு பத்திரப் பதிவையே நிறுத்தி வெச்சுட்டாங்க. இதை எதிர்த்துத்தான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம்’’ என்றார் குமுறலாக.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்
பார்த்திபன்
பார்த்திபன்

இதற்கிடையே, கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நின்ற அன்றைய எதிர்க்கட்சியான தி.மு.க., தற்போது விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தைக் கையகப் படுத்துவதில் ஆர்வம் காட்டிவருவதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து, சேலம் விமான நிலைய ஆணையக் குழுவின் தலைவரும், சேலம் தி.மு.க எம்.பி-யுமான பார்த்திபனிடம் கேட்டோம். “சேலம் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத் தில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்தான். காரணம், விவசாயம் செய்யப்பட்டுவந்த நிலங்களையும் அ.தி.மு.க அரசு கையகப்படுத்த முயன்றது. ஆனால், தற் போதைய தி.மு.க அரசு, விவசாயிகளை பாதிக்காதவாறு தரிசு நிலங்களை மட்டுமே விமான நிலைய விரிவாக்கப் பணிக்காகக் கையகப்படுத்துகிறது. நிலத்துக்கான உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் அரசு தயாராக இருக்கிறது’’ என்றார்.

விவசாயிகளை பாதிக்காத வகையில் நிலங்களைக் கையகப்படுத்தினால், ஏன் அவர்கள் போராடப்போகிறார்கள்?!