Published:Updated:

`துண்டிக்கப்பட்ட கையில எலும்பு வளருது சார்..!' - குழந்தையின் சிகிச்சைக்காகக் கலங்கிய சேலம் பெற்றோர்

``குழந்தை உயிர் பிழைச்சாலே போதும்னு முடிவு பண்ணிட்டோம். ஒன்னரை லட்சம் கடனை வாங்கி சிகிச்சை கொடுத்தோம். அந்த தொகையையே இன்னும் கட்ட முடியல.''

குழந்தை ஜெயப்பிரகாஷ்
குழந்தை ஜெயப்பிரகாஷ்

இடது கை துண்டிக்கப்பட்ட தன்னுடைய மூன்று வயது குழந்தையின் கையில் தசை வளராமல் எலும்பு வளர்வதால் மருத்துவ சிகிச்சை கோரி, சேலம் கலெக்டரிடம் உதவி கேட்டுள்ளனர் பெற்றோர்.

ஜெயப்பிரகாஷ்
ஜெயப்பிரகாஷ்

குழந்தையின் தந்தை வெங்கடேசனிடம் பேசினோம். '' என் மனைவி பேரு கலைவாணி. எங்களுக்கு ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்காங்க. இவன் கடைசிப் பையன். நாங்க தாரமங்கலம் சின்னப்பம்பட்டியில் குடியிருக்கிறோம். நான், பவர்லூம் தறி ஓட்டும் கூலித் தொழிலாளி. தறி ஓட்டினா தான் எங்க வீட்டுல அடுப்பு எரியும். இல்லைன்னா... பட்டினிதான். பெண் பிள்ளைக 2 பேரும் கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சிட்டிருக்காங்க. ஜெயப்பிரகாஷுக்கு இப்ப 3 வயசு ஆச்சு.

கழுத்தை துளைத்த கம்பி... 4 மணி நேரம் ஆபரேஷன்..!- வாலிபருக்கு உயிர் கொடுத்த மதுரை அரசு மருத்துவர்கள்

அவன் 11 மாத குழந்தையா இருந்தப்ப, ஓடிட்டிருந்த பவர்லூம் தறியோட சக்கரத்துல கையை விட்டுட்டான். அதனால இடது கை துண்டாகிடுச்சு. நாங்க அலறியடிச்சுட்டு துண்டான கையைத் தூக்கிட்டு பிரைவேட் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அங்க இருந்து கோயம்புத்தூருக்கு அனுப்புனாங்க. ஆனா துண்டான கையில தறி சக்கரத்தோட கிரீஸ் ஒட்டியிருந்ததால அந்தக் கையைப் பொருத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

11 மாத குழந்தையாக இருந்தப்ப, ஓடிட்டிருந்த பவர்லூம் தறியோட சக்கரத்துல கையை விட்டுட்டான். அதனால இடது கை துண்டாகிடுச்சு.
குழந்தையின் தந்தை

குழந்தை உயிர் பிழைச்சாலே போதும்னு வந்துவிட்டோம். ஒன்னரை லட்ச ரூபாய் வரைக்கும் கடனை வாங்கி சிகிச்சை செய்தோம். அந்தத் தொகையையே இன்னும் கட்ட முடியல. இப்ப, துண்டிக்கப்பட்ட கையில எலும்பு வளருது. தசை வளரலை. டாக்டர்கள்கிட்ட கேட்டா ஆபரேஷன் செஞ்சு வளர்ந்துட்டு இருக்கிற எலும்பைத் துண்டிக்கனும் சொல்றாங்க.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துல பண்ணலாம்னாலும், எங்கிகிட்ட அதுக்கான கார்டு இல்லை. அதனாலதான் உதவி கேட்டு கலெக்டர்கிட்ட மனு கொடுத்திருக்கோம்'' என்றார் கண்ணீருடன்.