Published:Updated:

தி.மு.க-வினரை பழிவாங்கும் ‘பஞ்சாயத்து’ - காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் தண்ணீர்!

தாடிக்காரனூர் ஊராட்சி
பிரீமியம் ஸ்டோரி
தாடிக்காரனூர் ஊராட்சி

இப்போது பஞ்சாயத்துத் தலைவராக இருக்கிற விஜயாவின் கணவரும், பா.ம.க பிரமுகருமான தங்கராஜ்தான் 10 வருடங்களுக்கு முன்பு பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார்.

தி.மு.க-வினரை பழிவாங்கும் ‘பஞ்சாயத்து’ - காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் தண்ணீர்!

இப்போது பஞ்சாயத்துத் தலைவராக இருக்கிற விஜயாவின் கணவரும், பா.ம.க பிரமுகருமான தங்கராஜ்தான் 10 வருடங்களுக்கு முன்பு பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார்.

Published:Updated:
தாடிக்காரனூர் ஊராட்சி
பிரீமியம் ஸ்டோரி
தாடிக்காரனூர் ஊராட்சி

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்குட்பட்டது தாடிக்காரனூர் ஊராட்சி. இந்த ஊராட்சியின் பெரியபொண்ணுகாட்டுவளவு கிராம மக்களுக்காக 10 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இதுவரை பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது. இதன் பின்னணியில், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் தங்கராஜின் அரசியல் பழிவாங்கல் இருப்பதாகச் சொல்லி குமுறுகின்றனர் கிராம மக்கள்.

தங்கராஜ்
தங்கராஜ்

“இப்போது பஞ்சாயத்துத் தலைவராக இருக்கிற விஜயாவின் கணவரும், பா.ம.க பிரமுகருமான தங்கராஜ்தான் 10 வருடங்களுக்கு முன்பு பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். அப்போது நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின்போது, தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர், பா.ம.க தங்கராஜைக் கண்டுகொள்ளாமல் அவமானப்படுத்திவிட்டார். தி.மு.க-வினரான எங்கள் தூண்டுதலினால்தான் எம்.எல்.ஏ அப்படி நடந்துகொண்டார் என தங்கராஜ் நினைத்துக்கொண்டார். இதற்குப் பழிவாங்கும் வகையிலேயே எங்கள் பகுதிக்குக் குடிநீர் கிடைக்கவிடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருகிறார். அதனால் 5 கி.மீ தூரம் போய் குடிநீர் எடுக்கவேண்டியிருக்கிறது” என்கின்றனர் தி.மு.க-வைச் சேர்ந்த இளங்கோவன் மற்றும் சுதாகர்.

தி.மு.க-வினரை பழிவாங்கும் ‘பஞ்சாயத்து’ - காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் தண்ணீர்!

‘‘25 வருஷமா தெருக்குழாயில் வந்த மேட்டூர் - காவிரி தண்ணீரையும் தங்கராஜ் ‘கட்’ பண்ணிட்டாரு. தெருவில் இருந்த அடிபம்ப்பையும் கழற்றி எடுத்துட்டுப் போயிட்டார். எங்க வார்டு மெம்பர் இது விஷயமா தங்கராஜ்கிட்ட பேசுனதுக்கு, ‘அவங்க எல்லாரும் தி.மு.க-காரங்க. அவங்க ஏற்கெனவே எனக்குப் பலவிதத்துல இடைஞ்சல் செஞ்சுருக்காங்க. என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாத்தான் அவங்களுக்குத் தண்ணீர் கிடைக்கும்’னு எகத்தாளமா சொல்லியிருக்கார். அதிகாரிகளும்கூட, ‘உங்க ஊர் பஞ்சாயத்துத் தலைவர் சொல்லாம நாங்க எதுவும் செய்ய முடியாது’னு சொல்லி அனுப்பிட்டாங்க” என்கிறார் பெருமாயி எனும் பெண்.

பெருமாயி
பெருமாயி

புகார் குறித்து முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும், இன்றைய தலைவர் விஜயாவின் கணவருமான தங்கராஜிடம் பேசினோம். ‘‘முன்பிருந்த அதிகாரிகளும், பஞ்சாயத்துத் தலைவரும் நீர்த்தேக்கத் தொட்டி கட்டியபோது, தனியார் இடத்திலும் சேர்த்துக் கட்டிவிட்டார்கள். அதனால், சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் தொட்டியில் தண்ணீர் ஏற்றவிடாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார். எனவேதான் எங்களால் குழாய் பதிக்கும் பணியைச் செய்ய முடியவில்லை. தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாகக் குடி தண்ணீர் கொடுக்கவில்லை என்பதில் துளியும் உண்மை கிடையாது” என்றார்.

மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துசாமியோ, “மக்களின் குடிநீர்த் தேவை தொடர்பாக பஞ்சாயத்துத் தலைவரிடம் பேசியிருக்கிறேன். அந்தப் பகுதியில் அடி பம்பு அமைத்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். குடிநீர்த் தொட்டிக்கான குழாய் பதிக்கும் பணிக்கு சர்வேயர் வந்து நில அளவை செய்யவேண்டியதிருப்பதால், தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் அந்தப் பகுதி மக்களுக்கு, தற்காலிகமாக தொட்டி அமைத்து, குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.