Published:Updated:

`பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து நின்றவன்!' - குழந்தைகள் தினத்தில் சிறுவன் பாஜியை நினைவுகூர்ந்த சேவாக்

சேவாக், பாஜி ரூத்

இந்திய சுதந்திரப்போராட்டத்தின் இளைய தியாகியான ஒடிசாவின் நிலகந்த்பூரைச் சேர்ந்த பாஜி ரூத்தை (Baji Rout) அறிய வேண்டிய நேரம் இது.

`பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து நின்றவன்!' - குழந்தைகள் தினத்தில் சிறுவன் பாஜியை நினைவுகூர்ந்த சேவாக்

இந்திய சுதந்திரப்போராட்டத்தின் இளைய தியாகியான ஒடிசாவின் நிலகந்த்பூரைச் சேர்ந்த பாஜி ரூத்தை (Baji Rout) அறிய வேண்டிய நேரம் இது.

Published:Updated:
சேவாக், பாஜி ரூத்

நவம்பர் 14, இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் குழந்தைகள் தினத்தன்று சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்த இளம் வீரர் பாஜி ரூத்தின் நினைவுகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

`குழந்தைகள் தினமான இன்று இந்திய சுதந்திரப்போராட்டத்தின் இளைய தியாகியான ஒடிசாவின் நிலகந்த்பூரைச் சேர்ந்த பாஜி ரூத்தை (Baji Rout) அறிய வேண்டிய நேரம் இது' என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

சேவாக்
சேவாக்

`12 வயதான பாஜி ரூத் (Baji Rout) இந்தியப் படகுகளுக்கு பாதுகாவலராக இருந்தார். அங்கு வந்த பிரிட்டிஷ் படைகள் நதியின் மற்றொரு கரைக்குத் தங்களை அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டது. பிரிட்டிஷ் படைகளின் கோரமுகங்கள் பாஜிக்கு தெரிந்திருந்தது. கிராமங்களில் இருக்கும் அப்பாவி பொதுமக்களை அவர்கள் கொன்று குவித்துக்கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் படைகளை அக்கரைக்கு அழைத்துச் சென்றால் கிராம மக்களுக்கு அதேநிலைதான் என்பது பாஜிக்குத் தெரிந்திருந்தது. எனவே பிரிட்டிஷ் படைகளை அக்கரைக்கு அழைத்து செல்ல அவர் மறுப்பு தெரிவித்தார்.

`சிறுவன்தானே மிரட்டினால் அஞ்சிவிடுவான்' என பிரிட்டிஷ் படைகள் நினைத்தன. அவர்களது எண்ணத்தை பொய்யாக்கினான். `நீ அக்கரைக்கு எங்களை அழைத்துச் செல்லவில்லையென்றால் கொன்றுவிடுவோம்' என மிரட்டியுள்ளனர். மிரட்டல்களுக்கு அஞ்சாத பாஜி தன் முடிவில் நிலையாக இருந்தான். இரக்கமற்ற பிரிட்டிஷ் படைகள் துப்பாக்கிகளைக் கொண்டு சிறுவனின் தலையில் கடுமையாகத் தாக்கின. தலையில் பலமான காயமடைந்த நிலையில் பாஜி கீழே விழுந்தான். அந்தப் பிஞ்சுக் குழந்தை தன்னிடம் இருந்த வலிமையை ஒன்று திரட்டி பிரிட்டிஷ் படைகள் முன்பு எழுந்து நின்றான். இந்தமுறை சத்தமாக, `உயிர் இருக்கும்வரை அக்கரைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டேன்' என்றான்.

View this post on Instagram

On this #ChildrensDay it's time we know about Shaheed Baji Rout ,from Nilakanthpur in Orissa ,the youngest Martyr of India's freedom struggle. At the age of 12,this young boy was on guard of a country boat and was ordered by the British troop to ferry them across river Brahamani . Baji who had already heard details of the brutality of the troop which had killed innocent people in the village understood if the British troops were to be obstructed,then they needed to be stopped from going across to the other bank. He therefore refused to ferry them across. The troop threatened to kill him if he did not ferry them across immediately. Baji however rejected their orders. One of the British soldiers hit Baji's head with his gun butt that fractured his skull severely​. Baji collapsed,, but he rose again gathering whatever little strength and courage was left with him, and raising his voice to the highest pitch beyond even his strength, warned the British troops not to ferry them till alive. A soldier pierced his bayonet into the soft skull of Baji, Another British soldier started firing ruthlessly. While one of the bullets hit Baji and he lay dead, his other friends Laxman Malik,Fagu Sahoo, Hrushi Pradhan & Nata Malik were also killed. India's youngest martyr definitely deserves more recognition.Salute to one of he bravesrt child.

A post shared by Virender Sehwag (@virendersehwag) on

சிறுவனின் பேச்சால் ஆத்திரமடைந்த பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த ஒருவன், துப்பாக்கியால் சுட்டான். பாஜியின் உடலை துப்பாக்கித் தோட்டா துளைத்தது. அப்படியே தரையில் வீழ்ந்தான். பாஜியின் நண்பர்களான லட்சுமண் மாலிக், சாகு, குர்ஷி, மாலிக் ஆகியோரும் கொல்லப்பட்டனர். அந்தத் தைரியமான குழந்தையை இந்நாளில் தலைவணங்குவோம்' எனப் பதிவிட்டுள்ளார் சேவாக்.

இந்தச் சம்பவம் நடந்தது 1939-ம் வருடம். பாஜி ரூத் அக்டோபர் 5-ம் தேதி 1926-ம் ஆண்டு ஒடிசாவின் நிலகந்த்பூர் கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலே தன் தந்தையை இழந்துவிட்டார். பாஜியின் குடும்பம் வறுமையான சூழலில்தான் இருந்துள்ளது. பல்வேறு வீடுகளில் வேலை செய்துதான் அவரின் தாய் பாஜியைக் கவனித்து வந்ததாக ஒடிசா அரசின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.