Published:Updated:

ஆசிய வலுதூக்கும் போட்டி: வெண்கலம் வென்று, காமன்வெல்த் போட்டிக்குச் செல்லும் திமுக எம்.எல்.ஏ!

ஆசிய வலுதூக்கும் போட்டியில் வென்ற ராஜா எம்.எல்.ஏ
News
ஆசிய வலுதூக்கும் போட்டியில் வென்ற ராஜா எம்.எல்.ஏ

அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே வலுதூக்கும் போட்டிகளில் ஆர்வம் காட்டிவந்தார். தற்போது ஆசிய வலுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், ஈ.ராஜா. வழக்கறிஞரான இவர் நீண்டகாலமாகவே வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுவருகிறார். அதனால் முழுநேர அரசியல்வாதியான பின்னரும்கூட, தனக்குப் பிடித்தமான வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்பதை ராஜா வழக்கமாக வைத்திருக்கிறார்.

வெண்கலப் பதக்கம் வென்ற ராஜா எம்.எல்.ஏ
வெண்கலப் பதக்கம் வென்ற ராஜா எம்.எல்.ஏ

கடந்த அக்டோபர் 10-ம் தேதி சென்னையில் தமிழக வலுதூக்கும் கூட்டமைப்பின் சார்பாக நடந்த போட்டியில், சட்டமன்ற உறுப்பினரான ராஜா, 100 கிலோ, 120 கிலோ ஆகிய எடைப் பிரிவுகளில் பங்கேற்றார். அதில் அவர் முதல் பரிசைக் கைப்பற்றினார். அதன் மூலம் நவம்பர் 18-ம் தேதி கோவாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். அதில் 120 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பெற்றதால், துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த ஆசியப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆசிய போட்டிக்கு ராஜா தேர்வானதை அறிந்த தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்த நிலையில், இஸ்தான்புல் நகரில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பாக ராஜா எம்.எல்.ஏ பங்கேற்றார்.

ஆசிய வலுதூக்கும் போட்டி
ஆசிய வலுதூக்கும் போட்டி

140 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அவர், புள்ளிகளின் அடிப்படையில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய வலுதூக்கும் போட்டி வெற்றியின் மூலம் நியூசிலாந்து நாட்டில் அடுத்ததாக நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கேற்கும் வாய்ப்பு ராஜாவுக்குக் கிடைத்திருக்கிறது.