பென்னிக்ஸ் இறந்து எண்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவரது சாவின் மர்மம் இன்னும் முழுமையாக அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. அவருக்காக ஒலித்த குரல்கள், ஆரம்பிக்கப்பட்ட ஹேஷ்டேகுகள், பேசிக்கொண்டே இருந்த தொலைக்காட்சி விவாதங்கள், முன்பக்கத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்த தலைப்புச் செய்திகள் எல்லாம் வேறு வேறு செய்திகளுக்குத் தாவிவிட்டன. ஆனால் ஓர் ஐந்தறிவு ஜீவன், இன்னமும் பென்னிக்ஸ் வருவார் என்று காத்துக்கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 10 அன்று பென்னிக்ஸின் மொபைல் கடையை மீண்டும் திறந்தபோது நடந்த சம்பவத்தை நம்மிடம் விவரித்தார், அவரின் சித்தி மகன் இம்ரான். ‘‘அன்னிக்கு காலையில 9 மணிக்குக் கடையைத் தொறந்தேன். 10 நிமிஷம்கூட இருக்காது... எங்கிருந்தோ பாய்ச்சலோட கடைக்குள்ளேயே வந்துடுச்சு ஆறு வயசு டாமி. இது அஞ்சு மாசக் குட்டியா இருக்கறப்ப ஃபிரெண்ட் வீட்டுல இருந்து பென்னி தூக்கிட்டு வந்த செல்ல நாய். கடைக்குள்ள வந்ததும் வாலை வேகமா ஆட்டிக்கிட்டு சுத்திமுத்தி பார்த்துச்சு. எப்போதும் பென்னி நிக்குற கண்ணாடி கவுன்டர் மேல எத்துக்காலு போட்டுக்கிட்டு சத்தமா குரைச்சுக்கிட்டே இருந்துச்சு. அந்தச் சத்தத்தைக் கேட்டு பக்கத்துக் கடைக்காரங்க எல்லோரும் ஓடி வந்துட்டாங்க. ஊளைச் சத்தமும் முனகல் சத்தமுமா கண்ணாடி மேல பிராண்டுச்சு. அப்படியே நடுக்கடையில படுத்துக்கிச்சு. அதோட கண்ணுல வடிஞ்ச கண்ணீரைப் பார்த்து கலங்கிப் போயிட்டேன்.

வெளியில ஓடிப்போறதும் கடைக்குள்ள பாய்ஞ்சு வர்றதுமா இருந்துச்சு. பிஸ்கட் போட்டேன்... சாப்பிடல. தண்ணி வெச்சேன்... குடிக்கல. திரும்ப வேகமா பாய்ஞ்சு வெளியே ஓடிச்சு. பதறிக்கிட்டு பின்னாலயே போயி பார்த்தேன். பூட்டியிருந்த பென்னியண்ணன் வீட்டுக் கதவு மேல எத்துக்காலு போட்டுக் குரைச்சது. அப்படியே வாசல்ல படுத்துகிச்சு.

காலையில கடையைத் திறக்கப் போகும்போது கடை முன்னாடி படுத்துக் கிடக்குது. ராத்திரி முழுக்க கடை வாசல்லேயே படுத்துக் கிடக்கிறதா ஆட்டோகாரங்கச் சொல்றாங்க. கடையைத் தொறந்த பிறகு, கொஞ்ச நேரத்துக்கு ஒருக்கா வந்து பார்த்துட்டுப் போகும். தெனமும் அண்ணனைப் பாக்கத் தேடி வந்துட்டு ஏமாந்து போகுறதைப் பார்க்கும்போது மனசு வலிக்குதுங்க” என்றார்.

புளியங்குடியிலுள்ள பென்னிக்ஸின் அக்கா பெர்சியிடம் பேசினோம். “எப்பவுமே பென்னி பைக் நிப்பாட்டுற இடத்துலதான் படுத்திருக்கும். தினமும் காலையில அவன் கூட வாக்கிங் போகும். குளிப்பாட்டுறது, சாப்பாடு வைக்குறது எல்லாமே தம்பிதான் செஞ்சான். `ஏலேய் டாமி’னு கூப்பிட்டா, அடுத்த நிமிஷம் முன்னால வந்து நிற்கும். அவன் கடைக்குக் கிளம்பும்போது பின்னாலயே போகும். கடையைத் திறந்த பிறகு, திரும்ப வீட்டுக்கு வந்துரும்.

தம்பி இறந்த பிறகு, படுத்த இடத்த விட்டு டாமி நகரவே இல்ல. ஒரு வாரத்துக்குப் பிறகு, போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து தம்பியோட பைக்கை என் கணவர் வீட்டுக்கு ஓட்டிக்கிட்டு வந்தப்ப, பைக் சத்தத்தைக் கேட்டு வாசலுக்குப் பாய்ஞ்சோடி வந்துச்சு. பென்னியைக் காணோம்னு திரும்பவும் அதே இடத்துல போயி படுத்துக்கிச்சு.

சாத்தான்குளத்துல இருந்து அம்மாவைக் கூட்டிக்கிட்டு வரும்போதுகூட, குரைச்சுக்கிட்டு காருக்குப் பின்னாலயே ரொம்ப தூரம் ஓடி வந்துச்சு. ‘டாமி வீட்டுக்குப் போ’ன்னு சொன்னப்பகூட, வீட்டுக்குப் போகாம குரைச்சுகிட்டே ஓடி வந்துச்சு. அது, `என்னை விட்டுட்டுப் போறீங்களா’னு கேட்குற மாதிரியே இருந்துச்சு.

மனசுல வலியோடதான் கிளம்பி வந்தோம். தினமும் பக்கத்து வீட்டுக்கு போன் செஞ்சு, ‘டாமிக்கு சாப்பாடு வெச்சியளா, என்ன செய்யுது, எப்படி இருக்கு?’ன்னு அம்மா விசாரிப்பாங்க. டாமி குரைக்குற சத்தத்தை போன்ல கேட்பாங்க. வீட்டுக்கும் கடைக்கும் தம்பியைத் தேடி டாமி அலையுற செய்தியைக் கேட்கும்போது ரொம்ப பாவமா இருக்கு’’ என்றார்.

‘‘பென்னிக்ஸ் இறந்ததுல இருந்து இன்னிக்கு வரைக்கும் அவரோட வீட்டுக்கும் செல்போன் கடைக்குமா அலைஞ்சுகிட்டே இருக்குது அவரோட செல்ல நாய் டாமி. பென்னிக்ஸ் திரும்ப வந்துடுவாருனு எதிர்பார்ப்போட, அவர் கடை வாசல்லேயே ராத்திரி முழுக்க படுத்துக் கிடக்குது. யார் சாப்பாடு வெச்சாலும் ரெண்டு வாய்க்கு மேல சாப்பிடுறது இல்ல. சிங்கக்குட்டி மாதிரி பார்க்குறதுக்குக் கம்பீரமா இருந்த டாமி, உடல் மெலிஞ்சு எலும்பும் தோலுமா இருக்கிறதைப் பார்க்கும்போதே பரிதாபமா இருக்குது’’ என்று மாய்ந்து மாய்ந்து பேசுகிறார்கள் சாத்தான்குளம் மக்கள்!

‘நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா’ என்று கவியரசு சும்மா எழுதவில்லை. தகப்பனை இழந்த பிள்ளையாக டாமி அலைந்தலைந்து கேட்கும் நீதிக்கு.... பென்னிக்ஸ் உயிர்போகக் காரணமாக இருந்தவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்!