Published:Updated:

திவாகரன் மகன் திருமணம்... உறவுகளுக்குத் தடை போட்டாரா சசிகலா?

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் திவாகரனைப் பார்க்க தவம் கிடப்பார்கள்.

மார்ச் 5-ம் தேதி சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்துக்கும், சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரனின் மகள் டாக்டர் ஜெயஸ்ரீக்கும் மன்னார்குடியில் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தில் உறவினர்கள் பலரும் மிஸ்ஸிங்! `சசிகலா தரப்பினர்தான், திருமணத்துக்கு யாரும் செல்லக் கூடாது எனத் தடைவிதித்தனர்’ என்று கூறப்படும் தகவலே இன்றைய அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்!

மணமக்களுடன் பாஸ்கரன்
மணமக்களுடன் பாஸ்கரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தன் ஒரே மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்த வேண்டும் என நினைத்த திவாகரன், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு பட்டுவேட்டி, பட்டுச்சட்டை, பட்டுப்புடவை ஆகியவற்றை தாம்பூலத்தில் வைத்து அழைப்பிதழை வழங்கியிருந்தார். பண்ணைவீட்டில் பிரமாண்ட அரங்கம், தடபுடலான விருந்து என ஏகத்துக்கும் அமர்க்களப்படுத்தியிருந்தார். ஆனால், திருமணத்துக்கு சசிகலா வரவில்லை. அவரின் உறவினர்களும் கலந்துகொள்ளாததால் கடும் மனக் குமுறலுடன் நடந்து முடிந்திருக்கிறது திருமணம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சிதறிக் கிடக்கும் சசிகலா குடும்பத்தினர், ஜெயானந்தின் திருமணத்தில் ஒன்றுகூடிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றம்தான் மிஞ்சியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுகுறித்து சசிகலாவின் உறவினர் வட்டாரத்தில் பேசினோம். “ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் திவாகரனைப் பார்க்க தவம் கிடப்பார்கள். அந்தளவுக்கு பவர்ஃபுல்லாக இருந்தார். அதேபோல் திவாகரன் என்ன சொன்னாலும் செய்யும் அளவுக்கு அவர்மீது பாசம் வைத்திருந்தார் சசிகலா. ஆனால், தினகரன் திட்டமிட்டு திவாகரனை ஓரங்கட்டிவிட்டார். சில மாதங்களுக்கு முன் சிறையில் சசிகலாவை ஜெயானந்த் சந்தித்தபோது, ‘திருமணத்துக்கு நிச்சயம் வருகிறேன்’ என்று சொல்லியிருந்தார். ஆனால், திருமணத்துக்கு சில நாள்களுக்கு முன்னதாக, ‘யாரும் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சசிகலா சொல்லியிருக்கிறார்’ என அ.ம.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது” என்றார்கள்.

சசிகலா - திவாகரன்
சசிகலா - திவாகரன்

அதேசமயம் இன்னும் சில உறவினர்களோ, “சிறையிலிருந்து வெளியே வந்தால், விடுதலையாகித்தான் வர வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார். நன்னடத்தை விதிகளின்கீழ் விடுதலை செய்யக்கோரி சிறைத்துறையிடம் கடிதம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்த நேரத்தில் பரோலில் வந்தால் விடுதலையாவது தள்ளிப் போகலாம் என்றுதான் ஜெயானந்தின் திருமணத்தைத் தவிர்த்துள்ளார். ஆனால், உறவுகளைக் கலந்து கொள்ளக் கூடாது என்று கிளப்பிவிட்டவர் தினகரன்தான்” என்றனர்.

தினகரன் தரப்பினரிடம் பேசினோம். “அரசியல்ரீதியாக இப்போது நடக்கும் பல பிரச்னை களுக்கு திவாகரன்தான் காரணம். தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்ட திருமணத்துக்குச் சென்றிருந்த திவாகரன், ‘அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்’ என்றரீதியில் புகழ்ந்து பேசினார். இதனால், சசிகலா கடுங்கோபத்தில் இருக்கிறார். அதனால்தான் திருமணத்தில் கலந்துகொள்ள உறவினர்களுக்குத் தடைவிதித்தார்” என்கிறார்கள்.