Published:Updated:

`ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ங்கிறது நாய்களுக்கும்தான்...!

சசிலேகா - தீபு
பிரீமியம் ஸ்டோரி
சசிலேகா - தீபு

பயிற்சியாளர்கள் லேகா-தீபு தம்பதியர்

`ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ங்கிறது நாய்களுக்கும்தான்...!

பயிற்சியாளர்கள் லேகா-தீபு தம்பதியர்

Published:Updated:
சசிலேகா - தீபு
பிரீமியம் ஸ்டோரி
சசிலேகா - தீபு

‘நாய் வளர்க்கப்படும் வீடு எப்போதும் தனிமையை உணர்வதில்லை’ என்றொரு பொன்மொழி உண்டு. அனுபவித்தவர்களுக்கு அதன் அருமை தெரியும். சும்மா வளர்க்கும் நாய்களுக்கே இப்படி என்றால் சொன்னதை எல்லாம் கேட்கும் நாய்களை வளர்க்கும்போது அந்த உணர்வு எப்படியிருக்கும்?

‘`இந்தக் காலத்துல பெத்த பிள்ளைங்களே சொல்பேச்சு கேட்கறதில்லை, இதுல நாய் கேட்குமாக்கும்...” என்பவர்களுக்கு சென்னையைச் சேர்ந்த சசிலேகா - தீபு தம்பதியரிடம் பதில் இருக்கிறது. விலையுயர்ந்த வெளிநாட்டு இன நாய்கள் முதல் நம்மூர் நாட்டு நாய்கள் வரை பயிற்சி அளிப்பவர்கள் இவர்கள். 'விகாஸ் கென்னல் டாக் டிரெயினிங் சென்டர்' என்ற பெயரில் நாய்களுக்கான டிரெயினிங் சென்டரும், போர்டிங் ஹாஸ்டலும் நடத்துகிறார்கள்.

உரத்த குரலில் ஒலிக்கும் இவர்களின் உத்தரவு ஒவ்வொன்றையும் அப்படியே பின் பற்றுகின்றன நாய்கள். பீகெல் இன நாய்க் குட்டிக்குப் பயிற்சி கொடுத்து முடித்துவிட்டு நம்மிடம் பேசத் தொடங்கினார் சசிலேகா.

 ‘நெற்றிக்கண்’ ஸ்கூபியுடன் சசிலேகா...
‘நெற்றிக்கண்’ ஸ்கூபியுடன் சசிலேகா...

‘`எம்.எஸ்ஸி சைக்காலஜியும், லேப், எக்ஸ்ரே டெக்னீஷியன் கோர்ஸும் முடிச்சிட்டு, கண் மருத்துவமனையில சர்ஜரி கவுன்சலிங் துறையில வேலை பார்த்திட்டிருந்தேன். உடம்புக்கு முடியாமப் போனதால அந்த வேலையை விட்டேன். என் கணவர் தீபு, நாய் களுக்கான பயிற்சியாளர். கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் நாய், பூனைக் குட்டிகளைத் தூக்கினதோ, வளர்த்ததோ இல்லை. வேலையை விட்டு வீட்டுல இருந்தபோது, பொழுதுபோக்கா என் கணவர் கூட அவர் நாய்களுக்கு டிரெயினிங் கொடுக்குற இடங்களுக்குப் போக ஆரம்பிச் சேன். வாயில்லா ஜீவன்கள்னு சொல்றோம். ஆனா, அதுங்க நாம சொல்ற விஷயங்களை எப்படிக் கேட்டு நடக்குதுங்கன்ற விஷயம் ஆச்சர்யமா இருந்தது. என் கணவர்கிட்டருந்து நானும் நாய்களுக்கான பயிற்சிகளைக் கத்துக்கிட்டுப் பண்ண ஆரம்பிச்சேன்’’ என்கிற லேகா, எஸ்.சி., எஸ்.டி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவிலும் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

‘`வெட்டினரி டாக்டர்ஸ் மூலமாதான் எங்க கிட்ட நாய்க்குட்டிகளை டிரெயினிங் கூட் டிட்டு வருவாங்க. ‘ஆசையா வாங்கி வளர்க்க ஆரம்பிச்சோம். ஆனா ரொம்ப அடம் பிடிக்குது, சொல்பேச்சு கேட்க மாட்டேங்குது, சாப்பிட மாட்டேங்குது’னு கூட்டிட்டு வரு வாங்க. அவங்கவங்க வீட்டுக்கே போய்தான் டிரெயினிங் கொடுப்போம். டிரெயினிங் கொடுக்கப் போறபோது அந்த நாய்களுக்கு நாங்க புதுமுகங்கள் என்பதால கத்தும், குரைக் கும், கடிக்க வரும். அதை சமாளிச்சு, அதுங் களைப் பழக்கறதுதான் எங்க வேலையே.

குரல்தான் எங்களுக்கு முதல் ஆயுதம். ஹைபிட்ச்ல உறுதியான குரல்ல அதுங்களுக் கான கமாண்ட்ஸை கொடுத்துப் பழக்குவோம். நாய்களைக் கட்டிப் போடற கயிற்றை ‘லீஸ்'னு சொல்வோம். அதைக் கையாள்றதுதான் முக்கியமே. நாய்களுக்கு எட்டு வகுப்புகள். ஒவ்வொரு வகுப்பும் ஒரு மணி நேரம் நடக்கும். அந்த எட்டு வகுப்புகள்ல நாய், எங்கப் பேச்சைக் கேட்கக் கத்துக் கும். வளர்க்கிறவங்க பேச்சைக் கேட் காது. அதனால நாயை எப்படிக் கையாளணும்னு வளர்க்கிறவங்களுக்கு ஆறு வகுப்புகள் எடுப்போம்.

நாய்களுக்கான டிரெயினிங்னு சொன்னதும் பலரும் ஃபாரின் வீடியோஸ்ல பார்க்குற மாதிரி நாய்க்கு வீட்டு வேலைகளை எல்லாம் செய்யக் கத்துக்கொடுப்போம்னு நினைக்கி றாங்க. அப்படியில்லை. வளர்ப்புநாய், வீட்டுல அடம்பிடிக்காம, வீட்டுல உள்ள வயசானவங்ககிட்ட பிரச்னை பண்ணாம இருக்கணும்ங்கிறதுக் கானதுதான் இந்தப் பயிற்சி. சுருக்கமா சொல்லணும்னா, இது நாய்களுக்கான கீழ்ப்படிதல் பயிற்சி. வெளியாட்கள் யாராவது வேணும்னே விஷமோ, மயக்க மருந்தோ கலந்த சாப்பாட்டைக் கொடுத்தா சாப்பிடாம இருக்கறதுக்காக, சிலர் தங்களுடைய நாய்க்கு ‘ஃபுட் ரெஃப்யூசல்’ பயிற்சி கொடுக்கச் சொல் வாங்க. வளர்க்கிறவங்க ‘சாப்பிடு'னு சொன்னாதான் சாப்பிடும். வேற யார், எப்போ, என்ன கொடுத்தாலும் சாப்பிடாதபடி பயிற்சி கொடுப்போம். பெரிய பங்களாக்கள், பண்ணை வீடுகள்ல வளர்க்கிற நாய்களுக்கு ‘கார்டிங்’ பயிற்சி கொடுக்கச் சொல்வாங்க. அதாவது அறிமுகமில்லாத, சந்தேகத்துக்கிடமான நபர்கள் வந்தா அட்டாக் பண்றதுக்கான பயிற்சி அது. இந்தப் பயிற்சிகள்தான் அடிப்படை....’’ பயிற்சி விவரங்கள் சொல்பவர், பயிற்சிக்கான காலத்தையும் வலியுறுத்து கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ங்கிறது நாய்களுக்கும்தான்...!

‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ங்கிறது நாய்க்குட்டிகளுக்கும் பொருந்தும். நாய்க்குட்டிகள் பிறந்து அஞ்சு முதல் ஏழு மாசங்களுக்குள்ள பயிற்சி கொடுத்தா, ஒன்றரை மாசத்துல அதுங்க எல்லாத் தையும் கத்துக்கும். ஆனா, பலரும் ஒரு வயசு, ரெண்டு வயசுல பயிற்சி கொடுக்கச் சொல்லிக் கேட்கறாங்க. அந்த வயசுல அது நம்ம சொல்பேச்சைக் கேட்கறது கஷ்டம். அதே மாதிரி சிலர் ரெண்டு மாசம், மூணு மாசக் குட்டிக்கெல்லாம் டிரெயினிங் கொடுக்கச் சொல்வாங்க. நாய்களை அடிபணியவைக்க அடிக்க வெல்லாம் தேவையே இல்லை. அன்பாயுதமே போதும்’’ என்று சொல்லும் இவர்களிடம் பயிற்சி பெற்ற நாய்கள் படங்களிலும் நடிப்பதுண்டு.

‘`படங்கள்ல நாங்க நேரடியா வொர்க் பண்றதில்லை. எங்ககிட்ட பயிற்சி எடுத்துக்கிட்ட நாய்கள் படங்கள்ல நடிச்சிருக்கு. இந்த ப்ரீடுல, இந்த வயசுல நாய் வேணும்னு பட கம்பெனிகள் எங்ககிட்ட கேட்பாங்க. நாங்க பயிற்சி கொடுத்ததுல பொருத்த மான நாய்களைச் சொல்லிவிடுவோம். அப்படித்தான் நாங்க டிரெயின் பண்ணின ஸ்கூபி, ‘கூர்கா’ படத்துல யோகிபாபு கூட நடிச்சான். அடுத்து நயன்தாரா கூட ‘நெற்றிக்கண்’ படத்துலயும் நடிச்சிட்டான். படத்துக்காக ஸ்பெஷலா எந்த டிரெயினிங்கும் இருக்காது. நாங்க சொல்லிக் கொடுக்கிற பயிற்சிதான் படத்துலயும் உதவும்’’ என்பவர்கள், நடிகை ஆண்ட்ரியா, நடிகர் விஷால், நடிகர் அதர்வா, நடிகை கனிகா என பிரபலங்களின் நாய்க் குட்டிகளுக்கு டிரெயினிங் கொடுத்திருக்கிறார்கள்.

எல்லாவற்றையும்விட நிறைவாக அவர்கள் முன்வைக்கும் ஆலோசனை/வேண்டுகோள் மிகமிக முக்கியமானது. அது... ‘`சிலர் காசு கொடுத்து ஆசையா நாய்க்குட்டி வாங்கியிருப்பாங்க. கொஞ்ச நாள் வளர்த்ததும் அது ரொம்ப துறுதுறுன்னு இருக்கு, சொல்பேச்சு கேட்கறதில்லைனு தெருவுல விட்டுடறாங்க. தயவுசெய்து அதை மட்டும் செய்யாதீங்க.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism