Published:Updated:

சாத்தான்குளம் விவகாரம்... கதறும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்... சிறையில் நடந்தது என்ன?

ஸ்ரீதர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதர்

‘நான் நிரபராதி, மற்ற எட்டுப் பேரும் சேர்ந்து தாக்கியதில்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தார்கள்

சாத்தான்குளம் விவகாரம்... கதறும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்... சிறையில் நடந்தது என்ன?

‘நான் நிரபராதி, மற்ற எட்டுப் பேரும் சேர்ந்து தாக்கியதில்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தார்கள்

Published:Updated:
ஸ்ரீதர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதர்

தமிழகம் மட்டுமல்லாமல் மொத்த தேசத்தையுமே உலுக்கிய ‘சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலை’ வழக்கு விசாரணை, எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்துவருகிறது. அண்மையில், இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகக் கருதப்படும் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ‘சிறைக்குள் என்னைக் கொல்ல சதி’ என நீதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதமும், அதன் பின்னணித் தகவல்களும் திகில் கிளப்புகின்றன!

சாத்தான்குளம் விவகாரம்... கதறும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்... சிறையில் நடந்தது என்ன?

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் (ஜெயராஜ் - பென்னிக்ஸ்) இருவரும் கொடூரமாகத் தாக்கப்பட்டு இறந்துபோனது தொடர்பான வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் கைதான முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், முன்னாள் எஸ்.ஐ-களான பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட காவலர்கள் ஒன்பது பேரும் 20 மாதங்களுக்கும் மேலாக மதுரை மத்தியச் சிறையில் உள்ளனர்.

வழக்கில் சாட்சிகள் விசாரணை வேகம் பிடித்துள்ள நிலையில், காவல்துறையினருக்கு எதிரான சாட்சியங்கள் உறுதியாக இருப்பதால், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட பிற காவல்துறையினர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்கின்றனர் சி.பி.ஐ தரப்பினர். இந்த நிலையில் வழக்கின் முதல் குற்றவாளியான ஸ்ரீதர், சிறையின் கண்காணிப்பாளர் வழியாக நீதிபதிக்கு எழுதிய கடிதம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

சாத்தான்குளம் விவகாரம்... கதறும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்... சிறையில் நடந்தது என்ன?

ஸ்ரீதர் எழுதிய கடிதத்தில், ‘நான் நிரபராதி, மற்ற எட்டுப் பேரும் சேர்ந்து தாக்கியதில்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் பற்றிச் சிறைக்குள் இருக்கும்போது ‘ஏன் அப்படிச் செய்தீர்கள்?’ என அவர்களிடம் நான் கேட்டதால், ஜெயராஜ், பென்னிக்ஸை அடித்துக்கொன்றதுபோல என்னையும் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால் எனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என நான்கு பக்கத்துக்கு விரிவாக எழுதியிருக்கிறார்.

இந்தக் கடித விவகாரத்தின் பின்னணி குறித்து சிறைத்துறையினரிடம் பேசியபோது, “சாத்தான்குளம் வழக்கில் தொடர்புடைய ஸ்ரீதருக்கும் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மற்ற எட்டுப் பேருக்குமிடையே கடந்த சில மாதங்களாகவே சிறைக்குள் பிரச்னை இருக்கிறது. ஆரம்பத்தில் எல்லோருமே ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். ஒருகட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஸ்டேட்டஸ் பிரச்னை வந்துவிட்டது. தனக்கு சல்யூட் அடித்தவர்களோடு ஒரே அறையில் இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டதே என நினைத்த அவர், அதை அவர்களிடமே பலமுறை சொல்லிக்காட்டியிருக்கிறார். அதனால் அதிருப்தியடைந்த மற்றவர்கள், ‘நீங்க சொன்னதால்தான் நாங்க அடிச்சோம். உங்களால்தான் நாங்களும் இந்த கேஸ்ல மாட்டிக்கிட்டோம். உங்களாலதான் எங்க வாழ்க்கையே வீணாப்போயிருச்சு’ எனக் கடுமையாகப் பேசியிருக்கிறார்கள். இதன் பிறகு இவர்கள் இரு குழுக்களாக மாறிவிட்டதால், விசாரணைக்காக நீதிமன்றத்துக்குப் போகும்போதும் வரும்போதும் வாக்குவாதம், கைகலப்பு எனப் பலமுறை நடந்திருக்கிறது. இதுபோல கைதிகளுக்குள் பிரச்னை வந்தால், ஒரு தரப்பை வேறு சிறைக்கு அல்லது வேறு பிளாக்குக்கு மாற்றுவார்கள். ஸ்ரீதர் விவகாரத்தில் அதுவும் நடக்காததால், நேரடியாக நீதிபதிக்குக் கடிதமே எழுதிவிட்டார்” என்கிறார்கள்.

ராஜீவ் ரூபஸ்
ராஜீவ் ரூபஸ்

ஸ்ரீதர் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கு விசாரணையின்போது சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ ரவிச்சந்திரன், ஸ்ரீதரின் ஜீப் டிரைவர் ஜெயசேகர் உள்ளிட்ட பலரும் அளித்துள்ள சாட்சியம் ஸ்ரீதருக்கு எதிராகவே இருக்கிறது. அதனால் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலேயே அவர் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இது குறித்து ஜெயராஜ், பென்னிக்ஸ் தரப்பின் வழக்கறிஞரான ராஜீவ் ரூபஸிடம் பேசினோம். “இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஆய்வாளர் ஸ்ரீதர் எழுதியுள்ள கடிதம் பொதுவெளிக்கு வந்திருப்பதால், வழக்கு விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ‘அடித்தது நான் இல்லை, மற்ற எட்டு பேரும்தான் சேர்ந்து அடித்துக் கொன்றதாக’ ஸ்ரீதரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அதனால், இந்த வழக்குக்கு ஸ்ரீதரின் கடிதம் ஒரு பலமான ஆவணமாக அமையும்” என்கிறார்.

உண்மை ஒருபோதும் உறங்காது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism