Published:Updated:

ஆளும் இல்லை... நிதியும் இல்லை... அல்லாடும் எஸ்.சி., எஸ்.டி ஆணையம்!

எஸ்.சி., எஸ்.டி ஆணையம்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.சி., எஸ்.டி ஆணையம்

தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையம் முறையாகச் செயல்படவில்லை என்றுதான், மாநிலத்துக்கென ஆணையம் அமைக்கப் பட்டது. ஆனால், ஆணையத்துக்கான அதிகாரம் என்ன என்பதைக்கூட அரசு இன்னும் வெளியிடவில்லை.

ஆளும் இல்லை... நிதியும் இல்லை... அல்லாடும் எஸ்.சி., எஸ்.டி ஆணையம்!

தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையம் முறையாகச் செயல்படவில்லை என்றுதான், மாநிலத்துக்கென ஆணையம் அமைக்கப் பட்டது. ஆனால், ஆணையத்துக்கான அதிகாரம் என்ன என்பதைக்கூட அரசு இன்னும் வெளியிடவில்லை.

Published:Updated:
எஸ்.சி., எஸ்.டி ஆணையம்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.சி., எஸ்.டி ஆணையம்

பட்டியலின மக்களைப் பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள்மீதான சாதிரீதியான தாக்குதல்களைத் தடுக்கவும், அது குறித்து தன்னிச்சையாக விசாரணை நடத்தவும் தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையம் செயல்படுகிறது. ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே ஆணையத்தால் விரைவான தீர்வைக் கொடுக்க முடியாது என்பதால், உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாநில அளவில் ‘தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்தை’ அமைத்தார் முதல்வர் ஸ்டாலின். ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சிவகுமார், துணைத் தலைவராக புனித பாண்டியன் மற்றும் ஆறு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு, அக்டோபர் 15-ம் தேதி அமைக்கப்பட்ட இந்த ஆணையத் துக்கு, டிசம்பர் மாதம்தான் தேனாம்பேட்டை தாட்கோ அலுவலகத்தில் இடமே ஒதுக்கப்பட்டது. ஆணையம் அமைத்து ஒரு வருடம் நெருங்கும் நிலையில், நிதி ஒதுக்கீடோ, பணியாளர்கள் நியமனமோ இல்லாமல் அல்லாடுகிறது ஆணையம்.

ஆளும் இல்லை... நிதியும் இல்லை... அல்லாடும் எஸ்.சி., எஸ்.டி ஆணையம்!
ஆளும் இல்லை... நிதியும் இல்லை... அல்லாடும் எஸ்.சி., எஸ்.டி ஆணையம்!

இது குறித்து டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி., எஸ்.டி பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிமை தாஸிடம் கேட்டபோது, “தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையம் முறையாகச் செயல்படவில்லை என்றுதான், மாநிலத்துக்கென ஆணையம் அமைக்கப் பட்டது. ஆனால், ஆணையத்துக்கான அதிகாரம் என்ன என்பதைக்கூட அரசு இன்னும் வெளியிடவில்லை. ஓர் ஆணையத் துக்கான அடிப்படையாக இருக்கும் இணையதளம், பணியாளர்கள், தனி அலுவலகம் என எதுவுமே இங்கில்லை. தாட்கோ பணியாளர்கள் ஆறு பேரை இந்த அலுவலகத்துக்கு மாற்றினார்கள், அவ்வளவுதான். ஆணையமும் அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. சமீபத்தில் சில அரசு அதிகாரிகள் துறை சார்ந்து தங்களின் பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க ஆணையத்தை அணுகியிருக்கிறார்கள். ஆனால், இது அரசுக்கு எதிராக இருப்பதாகப் புகாரைப் பெற ஆணையம் மறுத்திருக்கிறது. அரசு அதிகாரி ஒருவரை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதிரீதியாகப் பேசியதை தேசிய ஆணையம் விசாரித்துவருகிறது. இதேபோல, தமிழ்நாட்டில் நடக்கும் சாதிரீதியான பிரச்னையை மூடிமறைக்கவே மாநில ஆணையத்தை அமைத்திருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது” என்றார்.

கயல்விழி செல்வராஜ்
கயல்விழி செல்வராஜ்

இது குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் கேட்டபோது, “ஆணையம் அமைத்து 10 மாதங்கள் தான் ஆகின்றன. அதன்படி, ஆணையத்துக்காக நிரந்தரப் பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். அதுவரை பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே தாட்கோவிலிருந்து பணியாளர்கள் மாற்றப்பட்டனர். சென்னை அண்ணாசாலையில் ஆணையத்துக்குத் தனி அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 27 லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் நடக்கின்றன. பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும். அதுவரை தாட்கோவில் இயங்கும். ஆணையம் சிறப்பாக இயங்குகிறது. போதுமான நிதியும் வழங்கப்படுகிறது. பணியில் எந்தத் தாமதமும் இல்லை. பிற ஆணையங்களைப்போல ஊதியம் மற்றும் படித்தொகைகள் வழங்குவதற்கான பணிகளும் நடந்துவருகின்றன” என்றார்.

மகிமை தாஸ்
மகிமை தாஸ்

பட்டியலின மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க அமைக்கப்பட்ட ஆணையத்திலேயே ஆயிரம் பிரச்னைகள்!