Published:Updated:

ஊழல் புகாரில் திருவண்ணாமலை நகராட்சி!

அரசு கட்டித்தரும் கழிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
அரசு கட்டித்தரும் கழிப்பறை

அனைவருக்கும் கழிப்பறை திட்டம்

ஊழல் புகாரில் திருவண்ணாமலை நகராட்சி!

அனைவருக்கும் கழிப்பறை திட்டம்

Published:Updated:
அரசு கட்டித்தரும் கழிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
அரசு கட்டித்தரும் கழிப்பறை

த்திய அரசின் ‘தூய்மை பாரதம்’ திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ‘அனைவருக்கும் கழிப்பறை’ திட்டத்தில், திருவண்ணாமலை நகராட்சி கோடிக்கணக்கில் ஊழல் செய்திருக்கிறது என்று புகார் கிளம்பியிருக்கிறது.

திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் 1,868 கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ‘இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை இருக்க வேண்டும்’ என்று கலெக்டர் உத்தர விட்டிருப்பதால், வேகமாகப் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் பணிகளை முறையாகச் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது.

செப்டிக் டேங்க் இல்லை..., அரசு கட்டித்தரும் கழிப்பறை
செப்டிக் டேங்க் இல்லை..., அரசு கட்டித்தரும் கழிப்பறை

இதுகுறித்து நம்மிடம் பேசிய பவளக்குன்று மலை அடிவாரப்பகுதி மக்கள், “பச்சையம்மன் கோயில் பகுதி யிலிருந்து ரமணர் ஆசிரமம் வரையிலான மலையடிவாரப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு, ‘கழிப்பறை கட்டித் தரு கிறோம்’ என்று சொன்னார்கள். ஆனால், இரண்டு அடிக்கு மூன்று அடி அளவில் மிகவும் சிறிய அளவில் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். செப்டிக் டேங்க் கட்டித் தரவில்லை. செப்டிக் டேங்க் குறித்துக் கேட்டதற்கு, ‘அதெல்லாம் கட்டித் தர முடியாது. உங்கள் சொந்தப் பணத்தைப் போட்டுக் கட்டிக்கொள்ளுங்கள்’ என்கிறார்கள். வசதி இருப்பவர்கள், செப்டிக் டேங்க் கட்டிக்கொண்டதோடு, கழிப்பறையையும் கொஞ்சம் பெரிதாகக் கட்டிக்கொண்டனர். வசதியில்லாத வர்கள் அப்படியே விட்டுவிட்டார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கழிப்பறையை 8,000 ரூபாய்க்குக் கட்டியதாகக் கணக்கு காட்டியிருக்கிறார்கள். ஆனால், அதில் பாதி அளவுகூட செலவாகியிருக்காது. ஒப்பந்ததாரர்களும் ஆளும் கட்சிக்காரர்களாக இருப்பதால், எங்களால் தட்டிக் கேட்க முடியவில்லை. கணக்குக் காட்டுவதற்குத்தான் கட்டியிருக்கிறார்களே தவிர, மக்கள் பயன்பாட்டுக்காகக் கட்டவில்லை. இன்னமும் திறந்த வெளியில் மலம் கழிக் கும் சூழ்நிலைதான் தொடர்கிறது. இத்திட்டத்தில், நகராட்சி பெருமளவுக்கு ஊழல் செய்துள்ளது” என்றனர்.

நகராட்சிப் பொறியாளர் சுரேந்திரனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “ஒரு கழிப்பறை கட்டுவதற்கான திட்ட மதிப் பீடு 12 ஆயிரம் ரூபாய். அதில் 8,000 ரூபாய் அரசு நிதி. மீதித்தொகையைப் பயனாளிகள்தான் கொடுக்க வேண்டும். அரசு பணம் கொடுத்தும், பயனாளிகள் கழிப் பறை கட்ட முன்வராததால், நாங்களே ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டி வருகிறோம். இதில் எந்த முறைகேடும் நடக்க வில்லை” என்றார்.

மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டுசென்றோம். ‘‘ஒப்பந்ததாரர்கள் மூலமாகக் கட்டுவதும், செப்டிக் டேங்க் கட்டித் தராமல் இருப்பதும் நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

நடவடிக்கை எடுத்தால் சரிதான்!