Published:Updated:

ஃபாலோ அப்: உயரப் பறந்த தேசியக்கொடி!

கொடியேற்றியபோது...
பிரீமியம் ஸ்டோரி
கொடியேற்றியபோது...

ஆனந்தத்தில் கண்கள் பனிக்கப் பேசிய தமிழரசன், “எங்க ஊர் பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றிய நிகழ்வைப் பெருமிதமாக நினைக்கிறேன்

ஃபாலோ அப்: உயரப் பறந்த தேசியக்கொடி!

ஆனந்தத்தில் கண்கள் பனிக்கப் பேசிய தமிழரசன், “எங்க ஊர் பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றிய நிகழ்வைப் பெருமிதமாக நினைக்கிறேன்

Published:Updated:
கொடியேற்றியபோது...
பிரீமியம் ஸ்டோரி
கொடியேற்றியபோது...

பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒடுக்கப்படுவதாகத் தொடரும் புகார்கள் குறித்து 21-08-2022 தேதியிட்ட ஜூனியர் விகடனில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். ‘ஒடுக்கு றாங்க... மிரட்டுறாங்க... உரிமை கேட்டுக் கதறும் ஊராட்சி மன்றத் தலைவர்கள்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த அந்தக் கட்டுரையில், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேந்தாக்குடி ஊராட்சியின் தலைவரான தமிழரசன், பட்டியல் இனத்தைச் சேர்ந்த தனக்கு, சொந்த ஊரான கீழையூர் அரசுப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றும் உரிமை மறுக்கப்படும் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

ஃபாலோ அப்: உயரப் பறந்த தேசியக்கொடி!

ஜூ.வி-யின் இந்தச் செய்தியின் எதிரொலியாக, தமிழரசனின் கொடியேற்றும் உரிமையை நிலைநாட்டி யிருக்கிறது மாவட்ட நிர்வாகம். கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில், அந்தப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றினார் தமிழரசன்.

ஆனந்தத்தில் கண்கள் பனிக்கப் பேசிய தமிழரசன், “எங்க ஊர் பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றிய நிகழ் வைப் பெருமிதமாக நினைக்கிறேன். இப்படியான வாய்ப்பு கிடைக்காதா என்று பல நாள்களாக ஏங்கி யிருக்கிறேன். இன்றைக்கு மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து, என்னை தேசியக் கொடி ஏற்றவைத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார்” என்றார்.