Published:Updated:

சுயநினைவை இழந்த பள்ளி மாணவி... கொரோனா தடுப்பூசி காரணமா?

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவி

``அவளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. தடுப்பூசி போட்டதால் காய்ச்சல் வந்திருக்கும் என நாங்களும் அலட்சியமாக இருந்து விட்டோம். பிறகு அருகில் இருக்கும் தனியார் மருத்துவர்களிடம் காட்டியும், காய்ச்சல் குறையவில்லை. அதோடு நாளுக்கு நாள் உடல்நிலையும் மோசமடைந்தது.’’

சுயநினைவை இழந்த பள்ளி மாணவி... கொரோனா தடுப்பூசி காரணமா?

``அவளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. தடுப்பூசி போட்டதால் காய்ச்சல் வந்திருக்கும் என நாங்களும் அலட்சியமாக இருந்து விட்டோம். பிறகு அருகில் இருக்கும் தனியார் மருத்துவர்களிடம் காட்டியும், காய்ச்சல் குறையவில்லை. அதோடு நாளுக்கு நாள் உடல்நிலையும் மோசமடைந்தது.’’

Published:Updated:
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவி

நெல்லை மாவட்டம் பருத்திப்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன். கூலித் தொழிலாளியான அவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். மகன் பொறியியல் படித்து வருகிறார். மூத்த மகள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்து வருகிறார். இளைய மகளான நல்லதாய் (15 வயது) ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளி மாணவி நல்லதாய்
பள்ளி மாணவி நல்லதாய்

முனைஞ்சிபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில்,சில மாதங்களுக்கு முன்னர் பள்ளி நிர்வாகத்தினர் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளனர். அங்கு படித்து வந்த சிறுமி நல்லதாய்க்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் மாணவியின் பெற்றோர். ஆனால் மாணவியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக சிறுமி நல்லதாயின் தந்தை மகாராஜன் கூறுகையில், ``அரசுப் பள்ளியில் படித்து வந்த என் மகளுக்கு கொரோனா தடுப்பூசி போட பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். தடுப்பூசி போடாவிட்டால் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத முடியாது என்று சொன்னதால் என் மகள் எங்களிடம் கூட சொல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்து சந்தேகம் எழுப்பும் மகாராஜன்
கொரோனா தடுப்பூசி குறித்து சந்தேகம் எழுப்பும் மகாராஜன்

அதன் பின்னர் அவளுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. தடுப்பூசி போட்டதால் காய்ச்சல் வந்திருக்கும் என நாங்களும் அலட்சியமாக இருந்து விட்டோம். பிறகு அருகில் இருக்கும் தனியார் மருத்துவர்களிடம் காட்டியும் காய்ச்சல் குறையவில்லை. அதோடு நாளுக்குநாள் உடல்நிலையும் மோசமடைந்தது. அதனால் ஜூன் 23-ம் தேதி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தோம்.

என் மகளுக்கு, தலையில் காசநோய் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் தலையில் அறுவை சிகிச்சை செய்தார்கள். அதன் பின்னர் அவளுக்கு சுயநினைவு ஏற்பட்டது. எங்களை அடையாளம் தெரிந்துகொண்டு பேசத் தொடங்கினாள். அதனால் ஒரு மாதத்துக்குப் பின்னர் மகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டோம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நல்லதாய்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நல்லதாய்

ஆனால் வீட்டுக்குச் சென்ற சில நாள்களிலேயே மீண்டும் சுயநினைவை இழந்துவிட்டதால் மறுபடியும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். சிகிச்சையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் என் மகளால் எழுந்து நடக்கக் கூட முடியவில்லை. என் மகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பு யாரிடமும் சொல்லவில்லை. ஆசிரியர்கள் செய்த தவறு காரணமாக என மகளின் நிலை இப்படி ஆகிவிட்டது. அதனால் அரசு, என் மகளின் உயிரைக் காக்க உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று வேதனைப்பட்டார்.

சிகிச்சை பெற்றுவரும் சிறுமி நல்லதாயின் சகோதரி அகிலா கூறுகையில், ”என் தங்கை என்னை விடவும் ஆரோக்கியத்தோடு இருந்தாள். கொரோனா தடுப்பூசி போட்ட பிறகுதான் அவளது உடல்நிலை மோசமாகிவிட்டது. பெற்றோரின் அனுமதியில்லாமல் தடுப்பூசி போடவைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என் தங்கை மூன்று மாதங்களாக சிகிச்சையில் இருப்பதால் நானும் அண்ணனும் கல்லூரி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அகிலா, மாணவியின் சகோதரி

என் தங்கை கடந்த மூன்று மாதங்களாகச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பதால் அப்பா வேலைக்குச் செல்லாமல் கூடவே இருக்கிறார். அம்மாவும் மருத்துவமனையிலேயே இருக்கிறார். அதனால் நானும் அண்ணனும் கல்லூரிக்குச் செல்ல முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறோம். பொருளாதார ரீதியில் நாங்கள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கிறோம்” என்றார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரனிடம் கேட்டதற்கு,``சிறுமியின் மூளையில் காசநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, அதை சரிப்படுத்தும் வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிறுமியின் உறவினர்கள்
சிறுமியின் உறவினர்கள்

காசநோய பாதிப்பு காரணமாக சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதே தவிர கொரோனா தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்து மாணவிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படு வருகிறது” என்றார்.

கொரோனா தடுப்பூசியால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.