Published:Updated:

வாட்ஸ்அப்பில் போட்டோ... கூகுள் பேயில் பணம்... பாலியல் தொழிலில் பள்ளிச் சிறுமி!

பாலியல் தொழிலில் பள்ளிச் சிறுமி!
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் தொழிலில் பள்ளிச் சிறுமி!

ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டும் சர்வீஸ் கொடுப்பேன். புதிதாக வரும் பெண்களின் போட்டோவை அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்புவேன்.

வாட்ஸ்அப்பில் போட்டோ... கூகுள் பேயில் பணம்... பாலியல் தொழிலில் பள்ளிச் சிறுமி!

ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டும் சர்வீஸ் கொடுப்பேன். புதிதாக வரும் பெண்களின் போட்டோவை அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்புவேன்.

Published:Updated:
பாலியல் தொழிலில் பள்ளிச் சிறுமி!
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் தொழிலில் பள்ளிச் சிறுமி!

சுற்றுலா மாநிலமான புதுச்சேரியில் நீண்டகாலமாகவே ஸ்பா, பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. சமீபகாலமாக, சிறுமிகளையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. கடந்த 2015-ல் ரெட்டியார்பாளையத்தில் பாலியல் தொழில் செய்யும் கும்பலிடமிருந்து மூன்று சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்களிடம் வாடிக்கையாளர்களாகச் சென்றதாக எட்டு காவல்துறை அதிகாரிகள் அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல கடந்த 2021-ல் அண்ணா நகரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 17 வயது சிறுமி மீட்கப்பட்டார். அந்த வழக்கில் 40 பேர் மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டு, 20 பேர் கைதுசெய்யப்பட்டார்கள்.

இதேபோல மோகன் நகரில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், ஒரு வீட்டில் கடந்த 13-ம் தேதி போலீஸார் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஓர் இளம்பெண்ணையும், புரோக்கர் பால்ராஜ் (எ) பாலாஜி, வாடிக்கையாளர்களான இரு இளைஞர்களையும் வளைத்துப் பிடித்தனர். அவர்கள்மீது வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டபோதுதான், அந்தப் பெண் வெறும் 15 வயதே ஆன சிறுமி என்பது தெரிந்திருக்கிறது.

வாட்ஸ்அப்பில் போட்டோ... கூகுள் பேயில் பணம்... பாலியல் தொழிலில் பள்ளிச் சிறுமி!

புரோக்கர் பாலாஜியிடம் விசாரித்தபோது, “ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டும் சர்வீஸ் கொடுப்பேன். புதிதாக வரும் பெண்களின் போட்டோவை அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்புவேன். அதைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணிடம் வீடியோ காலிலும் பேசுவார்கள். அப்புறம் ஓ.கே சொல்லிவிட்டு நேரில் வந்து ‘கூகுள் பே’ மூலம் பணம் கொடுப்பார்கள். நானும் என் மனைவியும்தான் மூளைச்சலவை செய்து புதிய பெண்களைத் தொழிலுக்கு அழைத்து வருவோம். இந்தச் சிறுமி என் மனைவியின் ஃப்ரெண்டோட சகோதரி. அந்தப் பெண் சென்னையில் பத்தாவது படித்துக்கொண்டிருந்தாள். ‘படித்து என்ன செய்யப் போகிறாய்... இந்த வேலைக்கு வந்தால் செல்போன், வண்டினு ஜாலியா இருக்கலாம்’ என்று கூறி என் மனைவிதான் இந்தப் பெண்ணை அழைத்து வந்தார்” என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார். அந்தச் சிறுமியிடம் வாடிக்கையாளர்களாகச் சென்ற 22 பேரை போக்சோ வழக்கில் கைதுசெய்திருக்கும் போலீஸார், தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிவருகிறார்கள்.

டி.நகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் பேசினோம். “27 பேர் மீது போக்சோ வழக்கு பதிவுசெய்து அவர்களில் 22 பேரைக் கைதுசெய்திருக்கிறோம். புரோக்கர் பாலாஜியின் மனைவி உமா உள்ளிட்ட மற்றவர்களையும் விரைவில் பிடித்துவிடுவோம். போக்சோ வழக்கு என்பதால் இப்போதைக்கு வேறு எதுவும் பேச முடியாது” என்று முடித்துக்கொண்டார்.

முதலில் இந்த புரோக்கர்களை ஒழித்துக்கட்ட வேண்டும்!