Published:Updated:

“இப்படியே எல்லாரையும் கொன்னுடுவாங்களா அந்தம்மா?” - கதறும் பள்ளிச் சிறுவனின் தாய்!

காரைக்கால்
பிரீமியம் ஸ்டோரி
காரைக்கால்

அவங்க பொண்ணைப் படிப்புல முந்திட்டான்னு இன்னைக்கு என் பிள்ளையைக் கொன்னுடுச்சு அந்தம்மா

“இப்படியே எல்லாரையும் கொன்னுடுவாங்களா அந்தம்மா?” - கதறும் பள்ளிச் சிறுவனின் தாய்!

அவங்க பொண்ணைப் படிப்புல முந்திட்டான்னு இன்னைக்கு என் பிள்ளையைக் கொன்னுடுச்சு அந்தம்மா

Published:Updated:
காரைக்கால்
பிரீமியம் ஸ்டோரி
காரைக்கால்

“சாமி... யாராச்சும் சாப்பிட எதுவும் கொடுத்தா, சாப்பிட்டுறாதய்யா... பொல்லாத உலகம்யா” என்று ஒவ்வொரு தாயும் தன் பிள்ளையை மடியில் இருத்தி பதற்றத்தோடு சொல்லவைத்துவிட்டது காரைக்கால் சம்பவம். படிப்பில் தன் மகளை முந்திவிட்டார் என்ற ஒரே காரணத் துக்காக, 13 வயது சிறுவனை விஷம் கொடுத்துக் கொன்ற கொடூரப் பெண்ணைப் பற்றியே ஊரெல்லாம் பேசுகிறது!

பாலமணிகண்டன்
பாலமணிகண்டன்

இறந்த சிறுவனின் பெயர் பாலமணிகண்டன். தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த அவன், படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ளவனாகவும் திகழ்ந்தான். கடந்த 2-ம் தேதி பள்ளி ஆண்டுவிழா முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவன், வயிற்றுவலியில் துடித்தான். காரைக்கால் அரசுப் பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவன் இறந்தேபோனான்.

வாட்ச்மேன் கொடுத்த கூல்டிரிங்ஸைக் குடித்த பின்னரே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக பாலமணி கண்டன் கூறியதால், பள்ளியிலுள்ள சிசிடிவி காட்சி களை ஆராய்ந்தனர் போலீஸார். பாலமணிகண்ட னுடன் படிக்கும் மாணவியின் தாய் சகாயராணி, கூல்டிரிங்ஸைக் கொடுத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில் பாலமணிகண்டனுக்கும், ஒரு மாணவிக் கும் ‘வகுப்பில் முதலிடம் பெறுவது யார்?’ என்பதில் போட்டி இருந்ததாகவும், இதனால் பாலமணிகண்டன் மீது அந்த மாணவியின் தாய் சகாயராணி விரோதப் போக்கைக் கடைப் பிடித்துவந்ததும் தெரியவந்தது. ஆண்டுவிழா கலை நிகழ்ச்சி யில், பாலமணிகண்டன் பங்கேற்கக் கூடாது என்றெண்ணிய சகாயராணி, கூல்டிரிங்ஸில் எலி மருந்து கலந்து கொடுத்து, பாலமணிகண்டனைக் கொலைசெய்ததும் உறுதியானது.

“இப்படியே எல்லாரையும் கொன்னுடுவாங்களா அந்தம்மா?” - கதறும் பள்ளிச் சிறுவனின் தாய்!

இதற்கிடையே, பாலமணிகண்டனுக்கு அரசு மருத்துவர்கள் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று அவனுடைய உறவினர்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர். இந்து முன்னணியினருடன் சேர்ந்து, சென்னை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இறந்த பையனின் தாய் மாலதி, “அவங்க பொண்ணைப் படிப்புல முந்திட்டான்னு இன்னைக்கு என் பிள்ளையைக் கொன்னுடுச்சு அந்தம்மா. இப்படியே ஒவ்வொரு பரீட்சைக்கும் ஒரு பையனைக் கொல்வாங்களா அந்தம்மா?” என்று கதறிக்கொண்டே கேட்டது, முதல் ரேங்குக்காக தன் பிள்ளைகளையும், மற்றவர்களையும் இம்சிக்கும் ஒவ்வொரு பெற்றோரையும் செருப்பால் அடிப் பதுபோல் இருந்தது.

சகாயராணி
சகாயராணி

சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி சுப்பிரமணியத் திடம் பேசியபோது, “குளிர்பானத்தில் எலி மருந்து விஷத்தைக் கலந்து மாணவனுக்குக் கொடுத்ததை சகாயராணி ஒப்புக்கொண்டார். எனவே அவரைக் கொலை வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். வாட்ச்மேன் தேவதாஸ் தெரிந்தே தவற்றுக்குத் துணை போனாரா என்பது பற்றியும் விசாரித்துவருகிறோம்” என்றார்.

‘ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்க வேண்டும்’ என்று எண்ணும் குழந்தைகளும், பிள்ளைகள் தோற்கவே கூடாது என்று எண்ணும் பெற்றோரும்தான் சமூகப் பிரச்னைகளுக்கு பாதிக் காரணம்!