Published:Updated:

நீலகிரி: தேயிலைத் தோட்டத்தில் தாக்கிய மின்னல் - பள்ளி மாணவி உயிரிழப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடியிருப்பு பகுதிகளில் ஒளி கீற்றுகளுடன் தோன்றிய மின்னல்
குடியிருப்பு பகுதிகளில் ஒளி கீற்றுகளுடன் தோன்றிய மின்னல்

பந்தலூர் பகுதியில் மின்னல் தாக்கியதில் கோகிலா என்ற 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். அவரது உறவினரான ஜீவப்பிரியா என்ற மாணவி மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெல்லியாளம் பகுதியில் உள்ள அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணியாளராக இருப்பவர் ராமகிருஷ்ணன். பந்தலூர் அம்மன்காவு பகுதியில் தனியார் தோட்டம் ஒன்றை குத்தகைக்கு வாங்கி பராமரித்து வருகிறார்.

வழக்கம்போல இன்றும் தேயிலை‌ பறிப்பதற்காக ராமகிருஷ்ணன் அவரது மனைவி மற்றும் உறவினர்களுடன் தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது இவரது மகள் கோகிலா மற்றும் உறவினர் மகள் ஜீவப்பிரியா ஆகிய இருவரும் உடன் சென்றுள்ளனர்.

உயிரிழந்த கோகிலா
உயிரிழந்த கோகிலா

மற்றவர்கள் தேயிலை பறித்துக்கொண்டிருக்க இவர்களும் தேயிலைத் தோட்டத்தில் இருந்துள்ளனர். திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் துவங்கியுள்ளது. அருகில் இருந்த ஷெட்டில் ஒதுங்குவதற்காக கோகிலாவும், ஜீவப்பிரியாவும் நின்றுள்ளனர். அப்போது அதிக வெளிச்சத்துடன் மின்னல் தாக்கியது. அதில் இருவருமே மயங்கி கீழே விழுந்தனர்.

இதனைப் பார்த்த உறவினர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியிலியே கோகிலா பரிதாபமாக உயிரிழந்தார். ஜீவப்பிரியா மயங்கிய நிலையில் வயநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு... எப்படிப் போக்குவது?

இது குறித்து நம்மிடம் பேசிய பந்தலூர் பகுதி மக்கள்,`` பள்ளிகள் விடுமுறை என்பதால் இரண்டு சிறுமிகளும் தோட்டத்துக்கு சென்றுள்ளனர். இந்த ஒரு வாரமாகவே அவ்வப்போது இடி மின்னலுடன் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று மாலையும் நல்ல மழை பெய்தது. சிறுமிகள் நின்றிருந்த ஷெட்டின் மீது மின்னல் பாய்ந்துள்ளது. இதில் கோகிலா உயிரிழந்தார். இவர் அம்பலமூலா பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். மின்னல் தாக்கியதில் காயமடைந்த மற்றொரு மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்"என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு