Published:Updated:

நீலகிரி: விடுமுறை நாளில் இடிந்து விழுந்த அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்! - தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

இடிந்து விழுந்த அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்
News
இடிந்து விழுந்த அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள கரியசோலை உயர்நிலைப் பள்ளியின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. விடுமுறை நாளென்பதால் அதிர்ஷ்ட வசமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

நெல்லையில் பள்ளிசுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆபத்தான நிலையில் இருக்கும் பள்ளி கட்டடங்களை இடித்து அகற்றும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 21 பள்ளி கட்டடங்கள் கண்டறியப்பட்டது. அவற்றை இடிக்கும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

இடிந்து விழுந்த அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்
இடிந்து விழுந்த அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்

இந்த நிலையில், பந்தலுார் அருகில் உள்ள கரிய சோலை அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒருபகுதி திடீரென நேற்று இடிந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள், "இந்த வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர் நிலைப்பள்ளி ஆகிய இரண்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் 210 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு பள்ளி வளாகத்தைச் சுற்றி தடுப்பு சுவர் கட்டப்பட்டது. சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட இந்த சுவரின் 50 மீட்டர் நீள சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இடிந்து விழுந்த அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்
இடிந்து விழுந்த அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்

மிகவும் தரக்குறைவான முறையில் கட்டப்பட்டதே விபத்து ஏற்பட காரணம். கட்டட இடிபாடுகளில் சிக்கி 2 கோழிகள் உயிரிழந்தன. பள்ளி வேலை நாளாக இருந்திருந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இடிந்து விழும் நிலையில் இருக்கும் தடுப்புச் சுவரின் மற்றொரு பகுதியையும் இடித்துத் தள்ளிவிட்டு தரமான முறையில் புதிய தடுப்பு சுவரை கட்டிக்கொடுக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து இருக்கிறோம். இது போல எந்த பள்ளியிலும் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்" என்றனர்.

இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``மாவட்டம் முழுவதிலும் பள்ளி வளாகங்களில் பலவீனமாக இருக்க கூடிய கட்டடங்கள் தடுப்பு சுவர்கள் போன்றவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.