Published:Updated:

இரண்டாம் திருமணம் செய்தவருக்கு செருப்பு மாலை; சிறுநீர் குடிக்கச் சொல்லி பஞ்சாயத்தில் கொடுமை!

திருமணம் ( மாதிரி படம் )

இரண்டாம் திருமணம் செய்த நபருக்கும், அவரின் மனைவிக்கும் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்கள் இருவரின் கழுத்திலும் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். அத்துடன் நிற்காமல், சிறுநீரை குடிக்க வேண்டுமென்று கூறி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இரண்டாம் திருமணம் செய்தவருக்கு செருப்பு மாலை; சிறுநீர் குடிக்கச் சொல்லி பஞ்சாயத்தில் கொடுமை!

இரண்டாம் திருமணம் செய்த நபருக்கும், அவரின் மனைவிக்கும் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்கள் இருவரின் கழுத்திலும் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். அத்துடன் நிற்காமல், சிறுநீரை குடிக்க வேண்டுமென்று கூறி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

Published:Updated:
திருமணம் ( மாதிரி படம் )

ராஜஸ்தானில் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரண்டாவதாகத் திருமணம் செய்த நபருக்கு, பஞ்சாயத்தினர் செருப்பு மாலை அணிவித்தும், சிறுநீரை குடிக்க வற்புறுத்தவும் செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலை செய்த ஐந்து நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருமணம்
திருமணம்
சித்திரிப்புப் படம்

ராஜஸ்தான் மாநிலம், காபி பஞ்சாயத்தில் மாதேஜபுரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு 2006-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. 9 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், 2015-ம் ஆண்டு அவரின் மனைவி வரதட்சணைக் கொடுமை நடப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான பிரச்னை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த நபர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்திருந்தார். இந்நிலையில், அந்தக் கணவரின் இரண்டாவது திருமணத்தால் கோபமடைந்த முதல் மனைவியின் சகோதரர்கள், ஆகஸ்ட் 22 அன்று பியாடி குக்கிராமம் அருகே, அவரை அழைத்தனர்.

இதனிடையே, அந்த நபரின் முதல் மனைவியின் அம்மாவும் மற்றும் சிலரும், அந்தத் தம்பதியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் வலுக்கட்டாயமாக மாதோராஜ்புராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மதோராஜ்புராவில் பஞ்சாயத்து நடந்தது. அதில் இரண்டாம் திருமணம் செய்த நபருக்கும், அவரின் மனைவிக்கும் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்கள் இருவரின் கழுத்திலும் செருப்பு மாலை அணிவித்துள்ளனர்; அத்துடன் நிற்காமல், சிறுநீரை குடிக்க வேண்டுமென்று கூறி கட்டாயப்படுத்தியுள்ளனர். பஞ்சாயத்து முடிவில், தம்பதிக்கு ரூ.45,000 அபராதம் விதிக்கப்பட்டது. மனிதாபிமானமற்ற இச்சம்பவத்தின் வீடியோ வைரலாகப் பரவியதையடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 Police
Police

முதலில் இதுகுறித்து காவல்நிலையத்தில் அந்தப் பெண் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், இந்த வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனதைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததுடன், வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.