Published:Updated:

``தமிழ்த்தாய் தன் மகனை இழந்துவிட்டாள்’’ - நெல்லை கண்ணன் வீட்டில் கண்ணீர் வடித்த சீமான்

நெல்லை கண்ணன் மகனிடம் துக்கம் விசாரிக்கும் சீமான்

நெல்லை கண்ணன் வீட்டில் துக்கம் கேட்க வந்த சீமான், ``அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழ் அள்ளிப் பருகுபவர்களாக இல்லை. அதனால் அவர்களுக்குத் தமிழறிஞர்களின் அருமை தெரிவதில்லை" என்றார். 

பட்டிமன்றப் பேச்சாளரும், இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், நெல்லைக்கு வருகை தந்தார். நெல்லை கண்ணன் வீட்டுக்குச் சென்ற அவர், துக்கத்தில் இருந்த நெல்லை கண்ணனின் மகன்களைக் கட்டித் தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

நெல்லை கண்ணன் குடும்பத்தினருடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”தமிழினம் சார்ந்து நின்றவர் நெல்லை கண்ணன். தமிழ்த்தாய் தன் செல்ல மகனை, அன்பு மகனை இழந்துவிட்டாள் என்பதுதான் உண்மை.

சீமான்
சீமான்

இந்தத் தலைமுறை தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமல் வளர்ந்துவரும் சூழலில், நெல்லை கண்ணன் போன்ற தமிழ் ஆளுமைகள் இனி வர முடியுமா என்பதே சந்தேகம்தான். தமிழறிஞர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவரும் நிலையில் வைரமுத்து, வைகோ போன்ற சில ஆளுமைகள்தான் இப்போது இருக்கிறார்கள்.

தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர்கள் தொண்டு செய்திருக்கும் அளவுக்குத் தமிழர்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழ் அள்ளிப் பருகுபவர்களாக இல்லை. அதனால் தமிழறிஞர்களின் அருமை அவர்களுக்குத் தெரிவதில்லை” என்று சீமான் பேசினார்.