Published:Updated:

தேனி: இட ஒதுக்கீட்டில் அதிருப்தி; அ.தி.மு.க-வுக்கு எதிராக சீர்மரபினர் நலச்சங்கம் பிரசாரம்

வீடுகளில் கறுப்புக்கொடி

அ.தி.மு.க-வுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுப் போட வேண்டாம் எனக் கூறி, சீர்மரபினர் நலச்சங்கத்தினர், வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி பிரசாரம் செய்துவருகின்றனர்.

தேனி: இட ஒதுக்கீட்டில் அதிருப்தி; அ.தி.மு.க-வுக்கு எதிராக சீர்மரபினர் நலச்சங்கம் பிரசாரம்

அ.தி.மு.க-வுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுப் போட வேண்டாம் எனக் கூறி, சீர்மரபினர் நலச்சங்கத்தினர், வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி பிரசாரம் செய்துவருகின்றனர்.

Published:Updated:
வீடுகளில் கறுப்புக்கொடி

1978-ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப்போல, தமிழகத்திலுள்ள 68 சமுதாய மக்களை பழங்குடியின சீர்மரபினர் (DNT) என அறிவிக்க, கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதை, சீர்மரபினர் நலச்சங்கம் கையில் எடுத்து, போராட்டங்கள் மூலம் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. கடந்த 2019-ம் ஆண்டு, DNC சான்றிதழ் மூலம் தமிழக அரசின் சலுகைகளையும், DNT சான்றிதழ் மூலம் மத்திய அரசின் சலுகைகளும் சீர்மரபினர் சமூதாய மக்கள் பெறலாம் எனத் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இந்த இரட்டைச் சான்றிதழ் முறையை எதிர்த்துவந்த சீர்மரபினர் நலச்சங்கம், DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் முறைக்கான ஆணை வழங்க தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது.

வீடுகளில் கறுப்புக்கொடி
வீடுகளில் கறுப்புக்கொடி
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமீபத்தில், வன்னியர் சமுதாய மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 10.5% உள் இட ஒதுக்கீடு அறிவித்தது தமிழக அரசு. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த இட ஒதுக்கீட்டு சட்டம் தற்காலிகமானது என்றும், ஆறு மாதங்களுக்கு பின், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திய பின் தேவைப்பட்டால் மாற்றியமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

ராமமூர்த்தி
ராமமூர்த்தி

வன்னியர் சமூகத்துக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும்போது, சீர்மரபினருக்கு 7% உள் இட ஒதுக்கீட்டையும் அறிவித்தது தமிழக அரசு. இந்தநிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், அ.தி.மு.க அரசு தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் கூறி, சீர்மரபினர் நலச்சங்கத்தினர், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி, அ.தி.மு.க-வுக்கு வரும் தேர்தலில் ஓட்டுப்போடக் கூடாது என பிரசாரம் செய்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டி கிராமத்தில் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டப்பட்டிருக்கிறது.

சீர்மரபினர் நலச்சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி கூறும்போது, ``கடந்த ஆறு வருட காலமாக, DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் எனப் பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். அ.தி.மு.க அரசு எங்களைக் கண்டுகொள்ளவில்லை. 7% உள் இட ஒதுக்கீடு எனக் கூறி, 68 சமுதாய மக்களையும் ஏமாற்றியிருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டு, மத்திய அரசின் சலுகைகளைப் பெறும்போது, தமிழக அரசு மட்டும் எங்களை வஞ்சிக்கும்விதமாக நடந்துகொள்கிறது.

அதனால்தான், எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும்விதமாக, வீடுகளில் கறுப்புக்கொடி கட்டியிருக்கிறோம். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க-வைப் புறக்கணிக்க, 68 சமுதாய மக்களும் தயாராகிவருகிறோம். வீடு வீடாகச் சென்று அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்காதீர்கள் என பிரசாரம் செய்துவருகிறோம். தென் மாவட்டம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும்” என்றார்.