Published:Updated:

தட்டிப்பறித்த குஜராத்... ஏமாந்ததா மகாராஷ்டிரா?

தட்டிப்பறித்த குஜராத்... ஏமாந்ததா மகாராஷ்டிரா?
பிரீமியம் ஸ்டோரி
தட்டிப்பறித்த குஜராத்... ஏமாந்ததா மகாராஷ்டிரா?

இந்தத் திட்டத்துக்காக அம்பாலே என்ற கிராமத்தில் 1,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

தட்டிப்பறித்த குஜராத்... ஏமாந்ததா மகாராஷ்டிரா?

இந்தத் திட்டத்துக்காக அம்பாலே என்ற கிராமத்தில் 1,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

Published:Updated:
தட்டிப்பறித்த குஜராத்... ஏமாந்ததா மகாராஷ்டிரா?
பிரீமியம் ஸ்டோரி
தட்டிப்பறித்த குஜராத்... ஏமாந்ததா மகாராஷ்டிரா?

பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத மகாராஷ்டிர அரசியலில் இப்போது விவாதப் பொருளாகியிருப்பது, வேதாந்தாவின் ‘செமிகண்டக்டர்’ தொழிற்சாலை. ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்தத் தொழிற்சாலை மகாராஷ்டிராவுக்கு வரவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தட்டிப்பறித்திருக்கிறது, குஜராத்.

செல்போன் முதல் கார் வரை பயன்படும் மின்னணுச் சாதனமான செமிகண்டக்டர்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில், கடந்த ஆண்டு டிசம்பரில் 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டிலான சிறப்புத் திட்டத்தை அறிவித் தார் பிரதமர் மோடி. உடனடியாக வேதாந்தா நிறுவனம் ரூ.1.5 லட்சம் கோடியில் செமிகண்டக் டர் தயாரிப்புத் தொழிற்சாலை தொடங்கப் போவதாக அறிவித்தது.

அந்தத் தொழிற்சாலையை மகாராஷ்டிரா -வுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முந்தைய சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசு செய்தது. அதற்குள் சிவசேனா அரசு கவிழ்ந்து பா.ஜ.க ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வரானார். இப்போது இந்தத் திட்டம் குஜராத் மாநிலத்துக்கு மாற்றப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தட்டிப்பறித்த குஜராத்... ஏமாந்ததா மகாராஷ்டிரா?

இது குறித்து மகாராஷ்டிரா மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான டாக்டர் அன்பழகனிடம் பேசினோம். “செமிகண்டக்டர் நிறுவனத்தை புனேயிலுள்ள தாலேகாவ் என்ற இடத்தில் தொடங்க முடிவுசெய்து வேதாந்தா நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அந்தத் தொழிற்சாலை குஜராத்துக்குப் போய்விட்டது” என்றார்.

இந்தத் திட்டத்துக்காக அம்பாலே என்ற கிராமத்தில் 1,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது. இது குறித்து வருவாய்த்துறை அலுவலர் மோகன் கோலப் கூறுகையில், “வேதாந்தா நிறுவன அதிகாரிகளும், எம்.ஐ.டி.சி அதிகாரிகளும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே மூன்று முறை வந்து இந்த இடத்தைப் பார்வையிட்டார்கள். இது தொழிற்சாலை அமைக்கச் சரியான இடமாக முடிவானதால் ஒரு ஏக்கருக்கு ரூ.73 லட்சம் இழப்பீடு கொடுத்து நிலத்தைக் கையகப்படுத்தினார்கள். இதனால் மாநில அரசுக்கு இரட்டை இழப்பு” என்றார்.

“இந்தத் திட்டத்தை மகாராஷ்டிராவுக்குக் கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவைத்திருந்த நிலையில், தற்போதைய பா.ஜ.க கூட்டணி அரசு கோட்டைவிட்டுவிட்டதால் குஜராத்துக்குப் போய்விட்டது” என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால், அங்கு ஓட்டு வாங்குவதற்காக மத்திய பா.ஜ.க அரசு வேண்டுமென்றே இந்தத் திட்டத்தைப் பறித்துச் சென்றுவிட்டதாகக் குமுறுகின்றனர் எதிர்க்கட்சியினர். அதை மறுத்துள்ள மாநில தொழில்துறை அமைச்சர் உதய் சாவந்த், “முந்தைய அரசு இந்த விவகாரத்தைச் சரியாக முன்னெடுக்க வில்லை. அதனாலேயே திட்டம் கையை விட்டுச் சென்று விட்டது” என்கிறார்.

‘தேர்தலை மனதில்வைத்துச் செயல்படாதீர்கள்’ என்று சமீபத்தில் மேயர்களுக்கு அறிவுரை சொன்னார் மோடி. ஊருக்குத்தான் உபதேசமா?!