மத்திய அரசின் சிறு சேமிப்புத் திட்டங்களுள் முதன்மை யானது மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme). ஏனெனில், உலகெங்கும் உள்ள மூத்த குடிமக்களில் எட்டில் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார்.

இரண்டாம் இடத்தில் தமிழகம்..!

இந்தத் திட்டம் 2004-ம் ஆண்டு தொடங்கப்பெற்று கடந்த 12.12.2019-ல் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ள 22,10,343 மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்குகளில் 2,90,703 கணக்குடன் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

குறைந்தபட்சம் ரூ.1,000

இதில் குறைந்தபட்ச டெபாசிட் 1,000 ரூபாயாகவும், அதிகபட்சம் 15 லட்சமாகவும் உள்ள திட்டத்தில் 60 வயது பூர்த்தியான எவரும் கணக்கைத் தொடங்கலாம். பணிபுரிவர்களைப் பொறுத்தவரை, 55 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். சீரமைக்கப்பட்டுள்ள புதிய விதியின்படி, ராணுவத்தினர் 50 வயதானாலே கணக்குத் தொடங்கலாம்.

அதிக வட்டி..!

மூன்று மாதத்துக்கு ஒருமுறை வட்டி வழங்கும் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் சற்றே அதிகமான வட்டி விகிதம் என்பதுதான். அதாவது, அஞ்சலக மாதாந்தர வருமானத் திட்டத்தில் தற்போதைய வட்டி 6.6%; மூத்த குடிமக்கள் திட்டத்தில் 7.4%.ஆனால், இந்தத் திட்டமானது மத்திய அரசின் உத்தரவாதம் கொண்டது என்பதுடன் 0.8% கூடுதல் வட்டியும் தரக்கூடியது. இதனால் ஓய்வு பெற்ற பலரும் இந்தத் திட்டத்தைத் தேடிவந்து முதலீடு செய்கிறார்கள்.

சில வங்கிகள் இந்தத் திட்டத்தின் பணப் பலன்களைக் குறித்து விளக்கமாகத் தெரிவிப்பதில்லை என்ற குறைபாடு உள்ள நிலையில், இந்தத் திட்டத்தின் சமீபத்திய விதி களைக் விளக்கமாகப் பார்ப்போம்.

யார் தொடங்கலாம்?

* மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்கை 55 வயது நிறைந்த ஒருவர் தனியாகவும் தொடங்கலாம்; மனைவி யுடன் இணைந்து கூட்டாகவும் ஆரம்பிக்கலாம்.

* தனிநபர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட கணக்கைத் தொடங் கலாம். என்றாலும், கணக்குகளின் மொத்த டெபாசிட் ரூ.15 லட்சத்துக்கு மேற்படலாகாது.

* தகுதியுள்ள கணவன் - மனைவி இருவரும் தனித்தனியே 15 லட்சம் ரூபாய்க்கு டெபாசிட் செய்யலாம். (தகுதி என்பது வயதைக் குறிப்பதாகும்!)

* பணி ஓய்வு பெற்றவர்கள் 15 லட்சம் ரூபாய் அல்லது அவர்களது ஓய்வுக்காலப் பணப்பலன் தொகை ஆகிய இரண்டில் எது குறைவோ, அதை டெபாசிட் செய்யலாம். ஓய்வுக்காலப் பணப்பலன் என்பது பிராவிடன்ட் ஃபண்ட் கிராஜுவிட்டி பென்ஷன், கம்யுடேஷன் தொகை, விடுப்புச் சம்பளம், சேமிப்புடன் கூடிய இன்ஷூரன்ஸ் திட்டத் தொகை, இறுதி விடுப்புச் ஒப்படைத் தொகை முதலானவை ஆகும்.

வட்டி வருமானம்

* நிறைவடைந்த ஒவ்வொரு காலாண்டுக்கும், அதற்கு அடுத்த நாள் அதாவது, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி மாதம் முதல் நாள் வேலை நாளன்று வட்டி வருமானம் வரவு வைக்கப்படும்.

* ஐந்து வருட நிறைவுக்கு முன்னதாகவே மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இந்தக் கணக்கை நீட்டிக்கலாம். அவ்வாறு முதிர்வுத் தேதிக்கு ஓராண்டுக்கு முன்பே கணக்கை நீட்டிக்க விண்ணப்பித்து விட்டாலும் இந்தத் திட்டத்துக்கு உரிய வட்டி கிடைக்கும்.

* கணக்கு நீட்டிக்கப்படாமலும் முதிர்வுத் தொகையைப் பெறாமலும் இருந்தால் முதிர்வுக் காலத்துக்குப் பிறகு சாதாரண சேமிப்பு கணக்குக்கு உரிய வட்டி அளிக்கப்படும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்கை 55 வயது நிறைந்த ஒருவர் தனியாகவும் துவங்கலாம்; மனைவியுடன் இணைந்து கூட்டாகவும் தொடங்கலாம். அதில், ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்!

முதிர்வுக்கு முன் கணக்கு முடித்தால்...

* டெபாசிட் செய்த நாளிலிருந்து ஓராண்டுக்குள் கணக்கை முடித்துக் கொண்டால், கணக்கை முடிக்கும் நாள் வரை வழங்கப்பட்ட வட்டித் தொகை டெபாசிட்டில் கழிக்கப்பட்டு நிகரத் தொகை கிடைக்கும்.

* ஓராண்டுக்குப் பிறகு, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணக்கை முடித்தால், டெபாசிட் தொகையில் 1.5% கழித்துக் கொள்ளப்படும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடித்துக் கொள்ளப்படும் கணக்குகளுக்கு டெபாசிட் தொகையில் 1% கழிக்கப்படும். இவ்வாறு முன்னதாக முடிக்கப் படும் கணக்குகளுக்கான வட்டி யானது கணக்கு முடிக்கப்படும் முதல் நாள் வரை கணக்கிடப்படும். அதாவது, மேற்கண்ட 1% அல்லது 1.5% தொகையைக் கழித்தது போக மீதித் தொகைக்கே வட்டி கணக்கிடப்படும்.

இறந்துபோனவரின் கணக்கு!

* டெபாசிட் செய்த மூத்த குடிமக்கள் முதிர்வுத் தேதிக்கு முன்பே இறந்துவிட்டாலும் அல்லது முதிர்வுத் தேதிக்குப் பிறகு, மூன்று ஆண்டுகள் கணக்கை நீட்டித்த காலத்தில் இறந்துவிட்டாலும் கணக்கு முடிக்கப்பட்டு, திட்டத்துக்குரிய வட்டியுடன் டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். அது மட்டுமல்ல, இறந்துபோன தேதியிலிருந்து கணக்கு முடிக்கப் படும் தேதி வரை சாதாரண சேமிப்புக் கணக்குக்குரிய வட்டி வழங்கப்படும்.

வரி எவ்வளவு?

இந்தத் திட்டத்தில் செய்யப் படும் முதலீட்டுத் தொகையில் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு வருமான வரிப் பிரிவு 80-சி-யின்கீழ் வரிச்சலுகை உண்டு. ஆனால், முதலீட்டின் மூலமான வட்டித் தொகைக்கு (TDS) வருமான வரி உண்டு. என்றாலும், பிரிவு 80 TTB-யின்படி, ரூ.50,000 வரையிலான வட்டித் தொகை மூத்த குடியினருக்கான வட்டிச் சலுகை பெறும். வருமான வரிச்சலுகைக்கான படிவம் 15H-ஐ சமர்பிப்பதன்மூலம் ரூ.50,000 வரையிலான வட்டிக்கு வரிப் பிடித்தம் செய்வதைத் தடுக்கலாம்!

மூத்த குடிமக்களுக்குப் பல வகையிலும் வரப்பிரசாதமாக இருக்கும் இந்தத் திட்டத்தைப் பரிசீலிக்கலாமே!

வங்கி அபராதத் தொகை விதித்தது சரியா?

இந்தத் திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்திருந்த ஒரு டெபாசிட்தாரர் முதிர்வுத் தேதிக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், அவருடைய முதலீட்டுத் தொகையில் ரூ.9,500 அபராதத் தொகையாகப் பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது தவறு என்று சொல்லி, 45 நாள்களுக்கு மேலாகப் போராடி வங்கியிலிருந்து அந்தப் பணத்தைத் திரும்பப் பெற்றதாக வாட்ஸ்அப்பில் தகவல் உலா வருகிறது. இந்தத் திட்டத்தின் விதிமுறைகள் பற்றி வங்கி அதிகாரிகளும் டெபாசிட்தாரர்களும் நன்கு தெரிந்துகொண்டால், இதுபோன்ற பிரச்னைகளுக்கு அவசியமே இல்லை!