Published:Updated:

இரும்புத்திரை காஷ்மீர்! - 11 - உள்ளாட்சித் தேர்தல் என்னும் நாடகமேடை!

இரும்புத்திரை காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
News
இரும்புத்திரை காஷ்மீர்

மினி தொடர்

நிர்தோஷ் உப்பால், காஷ்மீர் பிரச்னையின் பல்வேறு பரிணாமங்களை அறிந்தவர். இவரது சி.பி.ஐ (எம்.எல்) லிபரேஷன் கட்சியின் பொலிட்டிக்கல் பீரோ உறுப்பினர், கவிதா கிருஷ்ணன். டெல்லியைச் சேர்ந்த கவிதா கிருஷ்ணன், ஆகஸ்ட் 9-ம் தேதியன்று உண்மை அறியும் குழுவினருடன் ரகசியமாக காஷ்மீர் சென்று, அங்கு நடந்ததாகக் கூறப்படும் பல்வேறு மனித உரிமை மீறல்களை வெளியுலகுக்குத் தெரிவித்தார். ‘காஷ்மீர் கூண்டுக்குள்’ என்ற தலைப்பில் அந்த உண்மை அறியும் குழுவினர் வெளியிட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வலம்வருகின்றன. இப்போதைய விஷயத்துக்கு வருவோம்...

இரும்புத்திரை காஷ்மீர்! - 11 - உள்ளாட்சித் தேர்தல் என்னும் நாடகமேடை!

காஷ்மீரில், கடந்த அக்டோபர் மாதம் 8, 10, 13, 16 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் இந்தமுறை உள்ளாட்சித் தேர்தல் மூன்று ஆண்டு களுக்கும்மேலாக இழுத்தடிக்கப்பட்டு, இப்போதுதான் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் தேதிகளை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பல்வேறு முட்டுக்கட்டைகள் நீடிக்கின்றன. இதுவே இந்திய அரசியல மைப்புச் சட்டத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். ஒரு விஷயம் தெரியுமா? காஷ்மீரில் 13 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலே நடத்தப்படவில்லை. அங்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் மட்டுமல்ல, மொத்த ஜனநாயகமும் கேள்விக்குறி யாக்கப்பட்டது. அங்கு இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இதில் பங்கு இருக்கிறது.

காஷ்மீரில் சிறப்பு அதிகாரத்தை நீக்கி, ஆளுநர் ஆட்சியைப் பிரகடனப்படுத்திய ஒரு மாதத்திலேயே அங்கு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டுவிட்டன. ‘அடடே, அருமை... அருமை! இத்தனை ஆண்டுகளாகச் சாதிக்காததை பா.ஜ.க ஆட்சியின்மூலம் காஷ்மீர் மாநில தேர்தல் ஆணையம் சாதித்துவிட்டதே’ எனத் தோன்றுகிறதல்லவா... கூடவே, ‘ஜனநாயகத்தையும் காந்தி வலியுறுத்திய பஞ்சாயத்து ராஜ்ய தத்துவத்தையும் மோடியின் அரசு நிலைநிறுத்திவிட்டதே’ என்றும் தோன்றுகிறதல்லவா! நிர்தோஷ் போட்டு உடைக்கும் உண்மைகளைப் பார்த்தால், இப்படியெல்லாம் உங்களுக்குத் தோன்ற வேண்டும் என்பதற்காகவே காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது. உண்மையில், அங்கு நடந்து முடிந்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல் வெளி உலகுக்காக நடத்தப்பட்ட நாடகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த அக்டோபர் மாதம் காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியின்கீழ் உள்ளாட்சித் தேர்தல் சுமுகமாக நடந்ததாக ஆளுநர் மாளிகை, தேர்தல் கமிஷன், மத்திய அரசு என மூன்று தரப்பும் பகிரங்கமாக அறிவித்தன. காஷ்மீரின் முக்கிய தலைவர்களான ஃப்ரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா உட்பட பலரும் வீட்டுச் சிறையில் இருந்தனர். அரசியல் கட்சிகளின் கீழ்நிலை நிர்வாகிகள் வரை சிறையிலும் கடும் கண்காணிப்பிலும் வைக்கப் பட்டிருக்கிறார்கள். சமூகச் செயற்பாட்டாளர்களும் செயல்பட முடியவில்லை. அங்கே யாருக்கும் எந்தவிதமான சுதந்திரமும் அளிக்கப்பட வில்லை. கடைகளே சில மணிநேரம் மட்டுமே திறக்கப் பட்டன. மக்களும் பெரும்பாலும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.

இரும்புத்திரை காஷ்மீர்
இரும்புத்திரை காஷ்மீர்

இப்படி இருக்க, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் அங்கே எப்படி பிரசாரம் செய்திருக்க முடியும், யாரிடம் அந்தப் பிரசாரம் சென்று சேர்ந்திருக்கும், யாரெல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டிருப்பார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வந்து எப்படி ஓட்டு போட்டிருப்பார்கள்? இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

அரசு அளித்திருக்கும் தரவுகளின்படி, காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கை சுமார் 17 லட்சத்தைத் தொடும். வாக்குப்பதிவும் மிகக் குறைவாகவே நடந்தது. ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் மட்டும் மக்கள் ஓரளவுக்கு வெளியே வந்து ஓட்டு போட்டார்கள். மொத்தத்துக்கும் சேர்த்து

35.1 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின. உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள பதவிகள் 598. இதில் 231 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வுசெய்யப் பட்டனர். 181 பதவிகளுக்கு யாரும் போட்டியிட வில்லை. ஆகமொத்தம், அங்கே போட்டி என்பதே இல்லை அல்லது போட்டியாளர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டார்கள். பிறகு எதற்கு ஜனநாயகரீதியிலான தேர்தல்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையெல்லாம் நம்மிடம் அம்பலப் படுத்தினார் நிர்தோஷ். “சர்வாதிகார ஆட்சி காஷ்மீரில் நடைபெறுகிறது என்பதை உள்ளாட்சித் தேர்தல்மூலம் மக்கள் நன்றாகவே உணர்ந்துகொண்டனர். பெரும்பாலான மக்கள் வாக்குச்சாவடிக்கே போகவில்லை. அவை வெறிச்சோடிக் கிடந்தன. அரசியல் கட்சியினரும் மக்களும் ஒருசேர இந்தத் தேர்தலைப் புறக்கணித்தனர். இவையெல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், நடக்காத தேர்தல்களை நடந்ததாகக் கூறி ஆவணங்களில் தில்லுமுல்லு செய்து தேர்தல் ஜனநாயகத்தையே சிதைத்துக் கூறுபோட்டு விட்டது மத்திய பா.ஜ.க அரசு.

கவிதா கிருஷ்ணன், நிர்தோஷ் உப்பால்
கவிதா கிருஷ்ணன், நிர்தோஷ் உப்பால்

உண்மையைச் சொல்லப்போனால், தேர்தலில் பா.ஜ.க மட்டுமே போட்டியிட்டது. எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தபோது, பல இடங்களில் அவர்களை மிரட்டியும் ஆசைவார்த்தை கூறியும் அவரவர் பெயரில் மனுத்தாக்கல் செய்யவைத்தனர். எதிரியே இல்லாமல் போட்டியிட முடியாதல்லவா... அதனால் இந்த வேலையைச் செய்தார்கள். மீதம் உள்ள இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதாகக் கூறினார்கள். அவர்கள் அனைவரும் பா.ஜ.க சார்ந்த வேட்பாளர்கள்.

உதாரணமாக, ஸ்ரீநகர் மாநகராட்சியில் 74 வார்டுகளில் தேர்தல் நடந்தது. அவற்றில் 35 வார்டுகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். வேறு சில இடங்களில் நடந்த கூத்தை, இந்தியத் தேர்தல் வரலாறு இதுவரை சந்தித்தே இருக்காது. சில வார்டுகளில் யாருமே ஓட்டு போடப் போகவில்லை. அங்கு வேட்பாளரின் சொந்த ஓட்டைவைத்தே அவர் வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டார்கள். எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், காஷ்மீருக்கு வெளியே இருந்தெல்லாம் வேட்பாளர்களை அழைத்துவந்து நிறுத்தி, கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். இப்படியாக காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்ட மாதிரியான பொய்யான தோற்றத்தைத் திட்டமிட்டே ஏற்படுத்தினார்கள். இந்த நிலையில், எப்படி அவர்கள் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்ததாகச் சொல்ல முடியும்?” என்றார் ஆவேசமாக.

தொடர்ந்து மத்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர் நம்மை தொடர்புகொண்டார்கள். அவர்கள் சொன்ன விஷயங்களோ, வேறு மாதியாக இருந்தன.

(அடுத்த இதழில் நிறைவடையும்)