மீண்டும் ஸ்ரீநகருக்குத் திரும்பினோம். வழியில் ஜீலம் நதியைப் பார்த்தேன். பாகிஸ்தானை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. மோடி சொன்னது நினைவுக்கு வந்தது. `இந்தியாவுக்குச் சொந்தமான நீர் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தடுப்பேன்’ என்பதே அது!

ஜீலம் நதியை உற்றுப் பார்த்தேன். இயற்கை யாகவே அது பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. மோடி சொன்னபடி இதைத் தடுத்து நிறுத்தி அணை கட்டினால் காஷ்மீர் பள்ளத்தாக்கு தாங்குமா?

உள்ளூர் பத்திரிகை ஒன்றை வாங்கிப் படித்தால் தகவல் கிடைக்கும் என நினைத்து, கடை ஒன்றில் விசாரித்தேன். திறந்திருக்கும் கடைகளே குறைவு. அதிலும் பத்திரிகை இருக்கிறதா என்று விசாரித்தால், மேலும் கீழும் பார்க்கிறார்கள். மூன்று மணி நேரம் கடை கடையாக ஏறி இறங்கியும் நாளிதழ், வார இதழ் எதுவுமே கிடைக்கவில்லை. இணையதள வசதியும் இல்லை... பத்திரிகைகளும் கிடைப்ப தில்லையென்றால், மக்களை செய்திகள் எப்படிச் சென்றடையும்?

``காலையில் ஒரு மணி நேரம்... அதுவும், முக்கிய மார்க்கெட் பகுதியில் மட்டும் கிடைக்கும்’’ என்றார்கள். அப்படி அலைந்து திரிந்து வாங்கிய பத்திரிகை, ‘காஷ்மீர் டைம்ஸ்’ ஆங்கிலப் பத்திரிகை. காஷ்மீரின் பிரபல நாளிதழ் இது. காஷ்மீர் விடுதலையை ஆதரிக்கும் கட்டுரைகளே அதில் பிரதானமாக இடம்பெறுகின்றன. உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. அதில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டேன். நம்மைச் சந்திக்க நேரம் ஒதுக்கிய அதன் ஆசிரியர் பிரபோத் ஜம்வால், ‘‘இங்கே வரும் முன், ஸ்ரீநகர் பத்திரிகையாளர்கள் செய்தி அனுப்புவதற்கான மீடியா சென்டரைப் பார்வையிட்டு வாருங்கள்’’ என்றார்.

இதற்கு முன்பு சன்வார் ஏரியாவில் இயங்கிவந்த மீடியா சென்டர், அன்றுதான் மாநில அரசின் செய்தித்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. புகைப்படம் அனுப்புவதற்கு தனிக்கூட்டம், நியூஸ் அனுப்ப தனிக்கூட்டம் என நிரம்பி வழிந்தது. அங்கே பத்து கம்ப்யூட்டர்கள் இருந்ததுதான் ஒரே ஆறுதல். நீண்ட நேரமாகக் காத்திருந்த நிருபர்கள், தங்கள் நிலைமையை என்னிடம் சோகத்துடன் சொன்னார்கள்.
.இரும்புத்திரை காஷ்மீர்! - 8 - பதுங்குக்குழி... பக்கத்தில் பாகிஸ்தான் ராணுவ முகாம்!.இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர்- 7 - “நீ இந்திய ராணுவத்தின் கண்ணா... காதா?”.
பி.பி.சி (உருது) நிறுவனத்தைச் சேர்ந்த சீனியர் பத்திரிகையாளரான யூசுப் ஜமீல், ‘‘அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், மீடியாக்கள் செயல்படு வதற்கே இங்கே கஷ்டப்படுகின்றன. அரசின் உயர் அதிகாரிகளுக்குத் தெரியப் படுத்தியும் நிலைமை சரியாக வில்லை’’ என்று புலம்பினார்.

அங்கிருந்து, பிரஸ் காலனி இருக்கும் ஏரியாவுக்குச் சென்றேன். காஷ்மீரின் முக்கிய பத்திரிகை அலுவலகங்கள் அங்கேதான் இருக்கின்றன. திருவல்லிக்கேணி போல் குறுகலான தெரு அது. காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகை அலுவலகமும் அங்கேதான் இருக்கிறது. நமக்காகக் காத்திருந்த ஆசிரியர் பிரபோத் ஜம்வால், சூடான தேநீர் கொடுத்து உபசரித்தார்.

பத்திரிகை வாங்க அலைந்து திரிந்த விஷயத்தைச் சொன்னதும், ‘‘பத்திரிகையை விற்பதற்கே இத்தனை சிக்கல் என்றால், அதைத் தயாரிப்பதற்கும் செய்தி சேகரிப்பதற்கும் நாங்கள் படும் சிரமங்களை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இத்தனை நாள்களாக, இந்த மாநிலத்தில் ஸ்ரீநகரைத் தவிர்த்து மற்ற ஊர்களில் உள்ள நிருபர்களிடம் போனில்கூட பேச முடியாத நிலை இருந்தது. பிறகு செய்தி சேகரிப்பது எப்படி? இப்போதுதான் அதற்கான தடையே நீங்கியிருக்கிறது. இன்னும் இன்டர்நெட் தடை நீங்கவில்லை. அச்சடித்த பத்திரிகையை எடுத்துச் செல்ல வாகனங்கள் கிடைப்பதில்லை.

நீங்கள் மீடியா சென்டர் போனீர்களா? ரேஷன் கடையைவிட அதிகமாக அங்கே கூட்டம் நிற்கும். எல்லோரும் அவரவர் பத்திரிகைக்கு நியூஸ், போட்டோஸ் அனுப்ப க்யூவில் நிற்பார்கள். காரணம், அங்கு மட்டும்தான் இன்டர்நெட் வசதி இருக்கிறது. இதைவிட்டால் டெல்லிக்கு நேரில் சென்றுதான் செய்திகளைப் பதிவேற்றம் செய்யவேண்டும். இதுதான் எங்கள் நிலைமை’’ என்றார்.

அவரிடம், ‘‘பாகிஸ்தானை நோக்கிச் செல்லும் ஆறுகளைத் தடுத்து நிறுத்த முடியுமா?’’ என்றேன்.

பலமாகச் சிரித்தார்.

“அடைமழைக் காலத்தில் கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் செல்லாமல் தடுத்தால் என்ன ஆகும்? அந்த மாநிலமே வெள்ளத்தில் மூழ்குமல்லவா? அதேபோல்தான், பூகோள அமைப்பில் இந்தியாவிலிருந்து ஆறுகள் பாகிஸ்தானுக்குள் செல்கின்றன. அவற்றின் ஓட்டத்தை எங்கேயும் தடுத்து நிறுத்தவே முடியாது. இதை ஒரு பிரதமரே சொல்வதுதான் துரதிருஷ்டம்.

கடல்மட்டத்திலிருந்து 5,200 அடி உயரத்தில் ஸ்ரீநகர் இருக்கிறது. 1,070 அடி உயரத்தில் ஜம்மு இருக்கிறது. பாகிஸ்தான் செல்லும் நதி நீரைத் தடுத்தால் காஷ்மீர் பள்ளத்தாக்கு 24 மணி நேரத்தில் தண்ணீரில் மூழ்கிவிடும். பிரதமர் பேச்சு நடைமுறைக்கு ஒத்துவராது என்பது இங்கு உள்ள காஷ்மீர் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஜம்மு பகுதியில் ஜீனாப் ஆறு ஓடுகிறது. ஜம்முவிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் ஓடும் அதைத் தடுத்தால் என்னவாகும்? அதேபோல், ஜம்மு சிட்டியையொட்டிச் செல்கிறது தவி ஆறு. அதையும் தடுக்க முடியாது. லடாக், லே பகுதியில் ஓடும் ஆறுகளை நிறுத்தினால், அந்தப் பகுதிகள் நீரில் மூழ்கிவிடும். பாகிஸ்தானின் ஒரு பகுதி, பஞ்சாப்பின் ஒரு பகுதி ஆகியவை நீருக்கு அடியில் சென்றுவிடும். மேக வெடிப்பு என்பார்களே... அதுபோல் பெரிய மழை 2014-ம் ஆண்டில் பெய்தது. 14 நாள்கள் தண்ணீரில் மிதந்தோம். டால் ஏரியின் உயரம் ஐந்தடி உயர்ந்துவிட்டது. இப்படி இருக்கும்போது, பிரதமர் சொல்வது சாத்தியமே இல்லாதது’’ என்றார்.

சிறிய அமைதிக்குப் பிறகு, ‘‘1947-ம் ஆண்டில் காஷ்மீரின் மொத்த பரப்பளவு 2,22,000 சதுர கிலோமீட்டர். அதைத்தான் இந்தியாவிடம் ஒப்படைத்தோம். இன்று எவ்வளவு இருக்கிறது தெரியுமா? ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர்தான். நம்பித்தானே ஒப்படைத்தோம். கொடுத்ததில் பாதியை இழந்து நிற்கிறீர்களே?’’ என்றார் கோபமாக.

காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானும் இன்னொரு பகுதியை சீனாவும் பிடித்துவிட்டன. மீதம் இருப்பதுதான் தற்போதைய காஷ்மீர். இது இந்தியாவின் தோல்வி என்பது அவருடைய வாதம்.

‘‘சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டிய அவசியம் என்ன... மத்திய அரசின் திட்டத்தின் உள்நோக்கம் என்ன?’’ என்றேன்.

‘‘இங்கு உள்ள கனிமவளங்களைச் சூறையாடுவதுதான் மத்திய அரசின் நோக்கம். காஷ்மீரில் இதுவரை எடுக்கப்படாத கனிமவளங்கள் நிறைய இருக்கின்றன. என் வீட்டுக்குக் கீழே கிரானைட் கற்கள் இருந்தால், அது எனக்குச் சொந்தம். ஜிப்சம் இருந்தால், அதுவும் எனக்குச் சொந்தம். இப்போது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், எங்களின் உரிமை பறிபோகிறது. இன்னும் சொல்லப்போனால் பெண்கள், குழந்தைகளுக்குச் சொத்தை மாற்றினால், இதுவரை ஒரு பைசா செலவில்லை. இனி, அதற்கும் வரி கட்ட வேண்டிவரும். இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது?

அரிய வகை நீலக்கற்கள் (sapphire) சுரங்கமே ஜம்முவில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதை குறைந்த விலையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு லீஸுக்கு விடுவதற்கான முன்னேற்பாடுதான் 370-வது பிரிவை நீக்கியது’’ என்றவரிடம், ‘‘காஷ்மீரை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்கிறீர்களா?’’ என்றேன்.

‘‘ஓர் உதாரணம் சொல்கிறேன். எங்கள் மாநிலத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட் இரண்டு ரூபாய்க்கு மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. மின் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் எங்களுக்கு 3.50 ரூபாய்க்கு விற்கிறது’’ என்றவர், சற்று நிறுத்தி, ‘‘இதைவிட இங்கே இன்னோர்அநியாயம் நடக்கிறது தெரியுமா?’’ என்றார்.

அவர் சொன்ன அந்த விஷயம்...

(திரை விலகும்)