Published:Updated:

திறன் வளர்ப்பு... உலக நாடுகளிடமிருந்து கற்கவேண்டிய பாடங்கள்!

திறன் வளர்ப்பு...
உலக நாடுகளிடமிருந்து கற்கவேண்டிய பாடங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
திறன் வளர்ப்பு... உலக நாடுகளிடமிருந்து கற்கவேண்டிய பாடங்கள்!

ரீஸ்கில்லிங் பற்றிய தொடர் - 16

திறன் வளர்ப்பு இந்தியா மட்டும் எதிர்கொள்ளும் ஒரு சவால் அல்ல. மற்ற நாடுகளும் தங்கள் குடிமக்களை டிஜிட்டல் யுகத்திற்கு எப்படித் தயார் செய்யலாம் என்று யோசித்து, பல முயற்சிகள் எடுத்துவருகின்றன. அந்த முயற்சிகளில் நம் நாட்டிற்குப் பொருந்தும் விஷயங்களை, தேவைப்படும் மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று யோசிக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிறு நகரங்களுக்கு முன்னுரிமை

லண்டன் வணிகப் பல்கலைக்கழகத்தின் (London Business School) பேராசிரியர் லிண்டா க்ரேட்டன், ‘‘வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் புதுத் திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்; எல்லா வேலையிலும் புதிய தொழில்நுட்பங்கள் இருக்கும்’’ என்கிறார். அவரின் யோச‌னைகளில் ஒன்று, எதிர்பாராத இடங் களில் திறன் வளர்ப்பது. உதாரணத்திற்கு, மைக்ரோசாஃப்ட் அதன் க்ளவுட் துறையை வளர்க்கப் பார்த்தபோது, புதிய‌ டேட்டா சென்டர்கள் நிறுவவேண்டியிருந்தது.

திறன் வளர்ப்பு...
உலக நாடுகளிடமிருந்து கற்கவேண்டிய பாடங்கள்!

அவற்றை நிர்வகிக்க நிபுணர்கள் தேவை. பெரிய நகரங்களில் அவற்றை நிறுவாமல், சிறிய ஊர்களில் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி யளித்து, அவர்களை வைத்து நடத்தினர். மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் அமைந்தது. அதிக செலவு இல்லாமல் இவற்றைத் தொடங்கவும் முடிந்தது. இதைப்போல, நம் ஊரிலும் செய்யலாமே?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஜிட்டலின் தழுவல்

சமூகவியலில் ஆராய்ச்சி நடத்தும் ப்ரூக்கிங்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் வேலைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு ஊடுருவியிருக்கின்றன என்று தங்கள் கண்டுபிடிப்பை வெளியிட்டது. அவர்கள் எடுத்துக்கொண்டது, 2001-ல் தொடங்கி 90% தொழில்கள் - மொத்தம் 545 வகை வேலைகள்.

சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute
சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute

ஒவ்வொரு வேலைக்கும் 100 வரை ஒரு டிஜிட்டல் மதிப்பெண் வழங்கப்பட்டது. இதைக்கொண்டு வேலைகளை அதிகம், குறைவு அல்லது நடுத்தரம் என்று மூன்றாகப் பிரித்தனர். 60 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் இருந்தால், அவை அதிக டிஜிட்டல் வேலைகள். 2002-லிருந்து 2016 வரை பார்த்தபோது டிஜிட்டல் திறன்கள் தேவைப்படும் வேலைகள் வளர்ந்துள்ளன. அதிக டிஜிட்டல் திறன் வேலைகள் 5% முதல் 25% வரை நான்கு மடங்காக வளர்ந்துள்ளன‌. குறைவான டிஜிட்டல் திறன் உள்ள வேலைகள் பாதியாகக் குறைந்துள்ளன. அதிக மற்றும் குறைவான டிஜிட்டல் வேலைகளில் சம்பளமும் வேலை வகைகளும் அதிகரிக்கும் அதே நேரத்தில் நடுத்தர வேலைகள் சுருங்கிக்கொண்டிருக்கின்றன.

பொருளாதார உதவியைவிட, குறிப்பாக‌ச் சமூகப்பார்வை மாறவேண்டும். மருத்துவர், வக்கீல், பொறியாளர் போன்றவர்களை மட்டுமல்லாமல், அனைத்து வகையான வேலை செய்பவர்களையும் சமமான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.

இந்தக் கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் ஆதிக்கத்தையே காட்டுகின்றன. அரசியல் மற்றும் தொழில் தலைவர்களும் கொள்கை வகுப்பவர்களும் வளரும் தொழில்நுட்பங்களின் தழுவலால் வேலைவாய்ப்பில், ஊதியத்தில், பொருளாதார‌ வசதி ‘இருப்பவர்கள்‍ - இல்லாதவர்கள்’ என்ற‌ பாகுபாடு அதிகரிக்காமல், அனைவரும் பயனடையும் வகையில் எடுத்துச்செல்ல வேண்டும். சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் இவற்றால் பயனடைய வேண்டும்.

ஐந்து பரிந்துரைகள்

புளூம்பெர்க் நிறுவனம் ரோபோக்கள், க‌ணினியிடமிருந்து மனிதர்கள் தங்கள் வேலையைப் பாதுகாத்துக்கொள்ள ஐந்து பரிந்துரைகளைக் கூறியுள்ளது. அவை, 1) புதுத்திறன் வளர்த்துக் கொள்ள விருப்பம், 2) ஆயுட்காலப் படிப்பு, 3) ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளுதல் (Communication), 4) அடிப்படை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்துறைகளில் (STEM education) விழிப்புணர்வு, 5) அரூபமான சிந்தனை (Abstract Thinking). அரூபமான சிந்தனை என்பது குறிப்பிட்ட சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் பதில்களைக்கொண்டு, பலருக்கும் பயன்ப‌டும் தீர்வுகள் காண்பது.

திறன் வளர்ப்பு...
உலக நாடுகளிடமிருந்து கற்கவேண்டிய பாடங்கள்!

அமெரிக்காவில் மற்றோர் ஆராய்ச்சித் திறன்களை மூன்று வகையாக வகைப்படுத்தியது. அவை கைவினை (Motor), அறிவு (Cognitive) மற்றும் மக்கள் சார்ந்த திறன்கள். சமீப‌‌காலத்தில் அறிவு மற்றும் மக்கள் திறன்களே அதிக முக்கியத்துவம் அடைந்துள்ளன. அவற்றில்தான் வேலைவாய்ப்பும் உள்ளது. நகரங்கள் இந்த வகை திறன்களின்படி, இரண்டு வகைகளாகப் பிரிகின்றன. 80-களில் தொடங்கி கைவினைத் திறனை மட்டும் நம்பியிருக்கும் துறைகளில் வேலையின்மை அதிகமாக, குறிப்பாகப் பொருளாதார மந்தநிலைகளின்போது காணப்பட்டது. இதுபோன்ற நிகழ்வை நம் நாட்டிலும் பார்க்கலாம். டிஜிட்டல் மற்றும் மக்கள் திறன் சார்ந்த திறன்களை வளர்த்த நகரங்கள் கைவினையை மட்டுமே நம்பி இருந்த ஊர்களைவிட வேகமாக வளர்ந்துள்ளன.

கல்வித் துறையில் சீர்திருத்தம்

ஐ.பி.எம் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜின்னி ராமெட்டியும் மற்ற தொழில் தலைவர்கள் குழுவும் எதிர்கால வேலைவாய்ப்புப் பற்றி அமெரிக்க அரசாங்கத்திடம் கொடுத்த பரிந்துரைகளில் முக்கியமானது கல்விச்சீர்திருத்தமே. அமெரிக்கா போன்ற நாடுகளில் முறையான பல்கலைக்கழகப் படிப்பிற்கு ஆகும் செலவு அதிகம். அதனால் இந்தக் குழு அரசாங்கத்திற்குக் கொடுத்த பரிந்துரைகள் இவை. ‍வகுப்பறையில் மட்டும் உட்கார்ந்து கல்வி கற்காமல் வெளியே சென்று தனியார் நிறுவனங்களில் வேலை செய்து நடைமுறைக்குத் தேவையான திறன்கள் கற்பது மற்றும் வேலையிலிருந்துகொண்டே படிக்கும் அனைத்து வகையான படிப்புகளுக்கும் கடன் மற்றும் மானியம் வழங்குவது.

திறன் வளர்ப்பு...
உலக நாடுகளிடமிருந்து கற்கவேண்டிய பாடங்கள்!

நம் நாட்டில் பொருளாதார உதவியைவிட, குறிப்பாக‌ச் சமூகப்பார்வை மாறவேண்டும். மருத்துவர், வக்கீல், பொறியாளர் போன்றவர்களை மட்டுமல்லாமல், அனைத்து வகையான வேலை செய்பவர்களையும் சமமான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.

சமீப‌த்தில் 63 நாடுகள் பங்குபெற்ற உலக அளவு தொழில்முறைத் திறன் போட்டியில் இந்தியாவும் கலந்துகொண்டது. அதில் பேசிய திறன் வளர்ப்புத்துறை மந்திரி பாண்டே, ‘‘இனிவரும் பத்து ஆண்டுகளில் வேலை செய்யக்கூடிய இளைஞ‌ர்கள் மிக அதிகம் இருக்கும் நாடு இந்தியாவாக இருக்கும்’’ என்று பேசினார். ஜப்பான் நாட்டுடன் இரு அரசாங்கங்கள் சேர்ந்து எடுத்துள்ள முயற்சி ஓர் உதாரணம். இதுபோன்ற கூட்டுமுயற்சிகள் மேலும் பல நாடுகளுடன் பொதுவான திறன் சார்ந்த தரக் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளது. இவற்றால் திறன் படைத்த இளைஞ‌ர்கள் சுலபமாக நாடு விட்டு நாடு சென்று வேலை செய்யமுடியும். எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யப் பயன்படுத்தும் அளவுகோல் மக்களின் திறனாக மாறும்பட்சத்தில் இதுபோன்ற உலக அளவிலான திறன் சார்ந்த தரக் கட்டுப்பாடுகள் உதவியாக இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக Change management என்று அழைக்கப்படும் மக்களின் மனமாற்றம்; இது ஒரு கலாசார மாற்றம் (Cultural transformation) நிகழவேண்டும். பல வருடங்களாக ஒரு குறிப்பிட்ட வழியில் செய்துவந்த ஒரு வேலையை வேறு ஒரு புதிய வழியில் செய்யச் சொன்னால், அது உடனே நடக்காது. முதலில், சற்று எதிர்ப்பு இருக்கும். ஒரு பெரிய நிறுவனத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்மூலம் வரும் மாற்றத்தைச் சமாளிப்பதே ஒரு பெரிய சவால்.

புதுத் திறன் வளர்ப்பு பற்றிய புத்தகத்திற்கு நடத்திய ஆய்வில், தொழில் தலைவர்களிடம் கேட்ட ஒரு கேள்வி, திறன் வளர்க்க அவர்களுக்கு எது மிகப் பெரிய சவால் என்பது. அது நிர்வாகத்திடம் ஒப்புதல் வாங்கி, நிதி திரட்டுவதிலோ அல்லது இதன் தாக்கத்தை அளப்பதிலோ இல்லை. 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் கூறிய மிகப் பெரிய சவால் இந்த மக்கள் சார்ந்த மாற்றமே. தொழில்நுட்பங்கள் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்தாலும் அவற்றை ஒரு நிறுவனத்திற்கோ சமுதாயத்திற்கோ தாக்கத்தை ஏற்படுத்துவதை மனிதர்களான நாம் அவற்றைத் தழுவி, மாற்றத்தை ஏற்று,

நல்ல வழியில் பயன்படுத்துவதன்மூலம் மட்டுமே செய்ய முடியும்.

(திறன் வளர்ப்போம்)

ரோபோக்கள் உதவியுடன் ரயில் பெட்டி தயாரிப்பு...

கலக்கும் இந்தியா!

ரோபோக்களின் பயன்பாடு வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பத்திரிகைக‌ளில் வந்த ஒரு செய்தியின்படி, ரேபரேலியில் உள்ள நவீன ரயில் பெட்டி செய்யும் தொழிற்சாலையில் ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன. 44 ரோபோக்கள் கொண்டு வருடத்திற்கு 1000 பெட்டிகளே செய்யக்கூடிய அங்கு உலகத் தரத்திற்கு 1,500 பெட்டிகள் செய்யப்பட்டது ஆச்சர்யம். நிர்வாகத்தின் கனவு வருடத்திற்கு 5,000 பெட்டிகள் செய்து, உலகின் மிகப் பெரிய ரயில் பெட்டி செய்யும் தொழிற்சாலை ஆவதே.