Published:Updated:

கூவம் நீரையும் இனி குடிக்கலாம்... முன்னுதாரணமான அமைச்சர் வேலுமணி!

கழிவுநீர் சுத்திகரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
கழிவுநீர் சுத்திகரிப்பு

கழிவுநீர் சுத்திகரிப்பில் தமிழகத்தின் சாதனை பயணம் தொடக்கம்...

கூவம் நீரையும் இனி குடிக்கலாம்... முன்னுதாரணமான அமைச்சர் வேலுமணி!

கழிவுநீர் சுத்திகரிப்பில் தமிழகத்தின் சாதனை பயணம் தொடக்கம்...

Published:Updated:
கழிவுநீர் சுத்திகரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
கழிவுநீர் சுத்திகரிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் வேலுமணி உட்பட அங்கு இருந்த அமைச்சர்களுக்கு ஆளுக்கொரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் தரப்படுகிறது. ‘கிரிஸ்டல் கிளியர்’ ஆக இருக்கிறது அந்தத் தண்ணீர். வேலுமணி, மடக்கென்று அந்த டம்ளர் தண்ணீரை காலிசெய்தார். அவர் குடித்த தண்ணீர் எது தெரியுமா? சென்னையின் கூவம் உட்பட பல்வேறு சாக்கடைகளிலிருந்து சேகரித்த கழிவுநீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்தான்!

இந்தியாவில் கழிவுநீரைச் சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு வழங்குவதே நடைமுறையில் உள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக, கழிவு நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலை சென்னை கொடுங்கையூரில் தொடங்கப்

பட்டுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதைத் தொடங்கிவைத்த நிகழ்வுதான், மேலே இருக்கும் அந்தத் தண்ணீர் குடிக்கும் காட்சி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னை மாநகரின் ஒரு நாள் தண்ணீர்த் தேவை, 1,300 மில்லியன் லிட்டர். பல்வேறு குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்தினாலும் சென்னையின் குடிநீர்த் தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்ய இயலவில்லை. அதனாலேயே தமிழக அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறது.

கூவம் நீரையும் இனி குடிக்கலாம்... முன்னுதாரணமான அமைச்சர் வேலுமணி!

இதுகுறித்து நம்மிடம் பேசிய மெட்ரோ வாட்டர் அதிகாரி ஒருவர், “சென்னையில் 265 பம்பிங் ஸ்டேஷன்களுக்கு கழிவுநீர் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் 12 சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது. அவற்றிலிருந்து கிடைக்கும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர், வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நாள் ஒன்றுக்கு 36 மில்லியன் லிட்டர்வீதம் வணிகரீதியில் வழங்கப்படுகிறது. 1974-ம் ஆண்டில் சிறிய அளவில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், இன்று 727 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திட்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. மாநகராட்சியின் பூங்காக்கள், நீரூற்றுகளுக்கும் இந்த நீர்தான் வழங்கப்படுகிறது.

இதன் அடுத்தகட்டமாகவே கொடுங்கையூரில் கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீராக்கும் மூன்றாம் நிலைத் திட்டம், 380 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை, பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனம் செயல்படுத்துகிறது. கழிவுநீரில் உள்ள திடக்கழிவுகளை அப்புறப்படுத்தி, முதல்கட்டமாக குளோரின் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து மூன்றுகட்ட சுத்திகரிப்புகள் மூலம் 0.00001 மைக்ரான் அளவுக்கும் குறைவான நுண்துகள்கள் நீக்கப்படுகின்றன. பிறகு கார்பன், கரிமப்பொருள்கள் நீக்கப்பட்டு, தொற்று நீக்கியாக ஓசோன் சேர்த்த பிறகு பயன்பாட்டுக்காக அனுப்பப்படுகிறது” என்றார்.

கொடுங்கையூர் சுத்திகரிப்பு ஆலை தொடக்க விழாவில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் “சமீபத்தில் முதல்வருடன் அமெரிக்கச் சுற்றுப்பயணம் சென்றிருந்தோம். கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு மாநகராட்சியில், கழிவுநீரை மூன்று நிலைகளில் சுத்திகரித்து குடிநீர், விவசாயம், தொழிற்சாலைகளுக்குப் போக மீதி நீரை ஏரியில் நிரப்புகிறார்கள். இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. கழிவுநீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மேம்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒரு பெரிய பயணத்துக்கு அடித்தளம் அமைத்துள்ள திட்டம் இது” என்றார்.

கூவம் நீரையும் இனி குடிக்கலாம்... முன்னுதாரணமான அமைச்சர் வேலுமணி!

விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட நீர்வள ஆதார மற்றும் பாதுகாப்பு மேலாண்மை இயக்கத்தின் மூலம் மழைநீரைச் சேமிப்பது, குடிமராமரத்துப் பணிகள் செய்வது, நிலத்தடி நீரைச் செறிவூட்டுவது, மறுசுழற்சி மூலம் இயற்கையான நன்னீர் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தின் மற்ற மாநகரங்களிலும் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்” என்றார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களில் 15,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.25 லட்சம் நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிக அளவில் 99.1 சதவிகித மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவது தமிழகம் மட்டுமே. கொடுங்கையூர், கோயம்பேட்டில் செயல்படுத்தப்படவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்தால், சென்னை மாநகரின் 20 சதவிகித கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படவுள்ளது. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு மூலம், கழிவுநீரை தூய்மையாகச் சுத்திகரித்து நம்மால் பருகவும் முடியும். அந்தத் தண்ணீரைத்தான் நானே குடித்துக் காட்டினேன். விரைவில் கூவம் கழிவு நீரையும் இதேபோல் சுத்திகரித்து குடிநீராக மாற்றுவோம். கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம் மூலம் தினமும் 870 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கிடைக்கும். பருவமழை பொய்த்தாலும், தண்ணீர் பற்றாக்குறையை நம்மால் சமாளிக்க முடியும்” என்றார்.

தண்ணீர்பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்தும் இந்தத் திட்டம் நம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கிறது. தொடரட்டும் தமிழக அரசின் இந்த நற்சேவைகள்!