Published:Updated:

கழிவுநீர் கால்வாய் கட்டியதில் ஊழல்? - சபாநாயகர் தொகுதியில் சர்ச்சை!

அப்பாவு
பிரீமியம் ஸ்டோரி
அப்பாவு

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஏற்கெனவே வேலை செய்த ஒப்பந்ததாரரேதான் இப்போதும் பணி செய்கிறார்

கழிவுநீர் கால்வாய் கட்டியதில் ஊழல்? - சபாநாயகர் தொகுதியில் சர்ச்சை!

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஏற்கெனவே வேலை செய்த ஒப்பந்ததாரரேதான் இப்போதும் பணி செய்கிறார்

Published:Updated:
அப்பாவு
பிரீமியம் ஸ்டோரி
அப்பாவு

சபாநாயகர் தொகுதியில், அவரே தொடங்கிவைத்த ‘கழிவுநீர் கால்வாய் திட்டத்தில் லட்சங்களில் ஊழல்’ நடந்திருப்பதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் வள்ளியூர் வடக்கு ஒன்றியத் தலைவரான அருள்ஜெக ரூபர்ட், “பணகுடி பேரூராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீரெகுநாதபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கடந்த 2016-ம் ஆண்டு 25 லட்சம் ரூபாயில் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் நடக்கவில்லை. இந்த நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டு, 90 லட்சத்தில் பணிகள் தொடங்கப்பட்டன.

போராட்டத்தில் பா.ஜ.க-வினர்...
போராட்டத்தில் பா.ஜ.க-வினர்...

ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட இந்தப் பேரூராட்சியைத் தனது செல்லப் பேரூராட்சி என வர்ணிக்கும் சபாநாயகர் அப்பாவு, பணிகளைத் தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெறாமல், எட்டு பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய ஓடையில் கழிவுநீர் கால்வாயைச் சேர்க்க முடிவு செய்தார்கள். அதற்கு விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே, ‘கழிவுநீரைச் சுத்திகரித்து ஓடையில் சேர்ப்பதாக’ச் சொன்னார்கள்.

இப்படி, தொடக்கம் முதலாகவே குழப்பத்தில் நடந்த இந்தத் திட்டம் முடிவடைந்து ஒப்பந்ததாரருக்குப் பணமும் கொடுத்துவிட்டார்கள். ஆனால், கால்வாயின் வாட்டத்தை கவனத்தில் கொள்ளாமல் கட்டியதால், கழிவுநீர் வெளியேறுவதற்கு பதிலாக எதிர்த்திசையில் உள்ளே வந்து துர்நாற்றம் வீசியது. இதைச் சரிசெய்ய இப்போது 300 மீட்டர் தூரத்துக்கு கால்வாயின் ஆழத்தைக் குறைக்க சிமென்ட் வைத்து அடைக்கிறார்கள்.

அப்பாவு
அப்பாவு

இந்தப் பணிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இனியாவது கழிவுநீர் சரிவர வெளியேறுமா என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. தரமே இல்லாமல் நடந்த இந்தப் பணியில் மட்டும் சுமார் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கக் கூடும்.

எனவே, இந்த ஊழலுக்குக் காரணமான பணகுடி பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர்தாஸ், பொறியாளராக இருந்த விஜயகுமார், ஒப்பந்ததாரர் கருப்பசாமி மற்றும் உடந்தையாக இருந்த தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் காட்டமாக.

அருள்ஜெக ரூபர்ட்
அருள்ஜெக ரூபர்ட்
கிறிஸ்டோபர்தாஸ்
கிறிஸ்டோபர்தாஸ்

இது குறித்து பணகுடி சிறப்புநிலை பேரூராட்சியின் செயல் அலுவலரான கிறிஸ்டோபர்தாஸிடம் விளக்கம் கேட்டதற்கு, ‘‘கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஏற்கெனவே வேலை செய்த ஒப்பந்ததாரரேதான் இப்போதும் பணி செய்கிறார். இந்தத் திட்டத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

‘கால்வாய் நல்லாத்தான் இருக்கு... ஆனா, கழிவுநீர் மட்டும் போகாது!’ என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்.