Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: ஆகவே, அப்டேட் ஆகுங்கள்!

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் மருத்துவர் காமராஜ்

குழந்தைகளுக்குப் புதிதாக ஏற்பட்டுள்ள சைபர் புல்லியிங் பிரச்னை பற்றிக் கடந்த இதழில் பேசியிருந்தேன். அதாவது எலெக்ட்ரானிக் மீடியா மூலம் நிகழ்கிற வன்முறை. இந்தப் பிரச்னையில் சிக்கிக்கொள்கிற குழந்தைகளை எப்படி அணுக வேண்டும் என்று பெற்றோர்களுக்குச் சில விஷயங்களைச் சொல்லியிருந்தேன். அதைப் படித்துவிட்டு ஒரு வாசகர் பேசினார். ‘நாங்க எல்லாம் டெக்னாலஜி தெரியாத அந்தக் காலத்து மனுஷங்க. நாங்க எப்படிப் பிள்ளைங்களோட பிரச்னைகளைக் கண்டுபிடிக்க முடியும்? அவங்க உலகத்துக்குள்ளே போறதெல்லாம் நடக்கற காரியமா...' என்று கேட்டார். தவிர, `குழந்தையின் மொபைலைப் பிடுங்கிவைப்பது தீர்வாகுமா...' என்றும் கேட்டிருந்தார்.
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: ஆகவே, அப்டேட் ஆகுங்கள்!

ன்னும் எத்தனை நாள்களுக்கு இப்படியே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்கள் பெற்றோர்கள்?

பிள்ளைகளுக்கு இணையாகப் பெற்றோர்களும் சில விஷயங்களில் அப்டேட் ஆக வேண்டிய காலம் இது.

தொழில்நுட்ப விஷயங்களில் பின்தங்கி இருக்காதீர்கள். குழந்தைகள் உபயோகிக்கும் கேட்ஜெட்ஸைப் பற்றி உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். குழந்தைகள் ஸ்மார்ட்போன் உபயோகிக்கும்போது நீங்கள் மட்டும் பழைய போன் உபயோகித்துக்கொண்டிருந்தால் ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் பிரச்னைகள் வரலாம், ஆபத்துகள் வரலாம் என்று உங்களுக்குத் தெரியாமலே போய்விடும். எனவே, உடனடியாக அப்டேட் ஆகுங்கள் பெற்றோர்களே...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கம்யூனிகேஷனை வெளிப் படையாக வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் சொல்லும் ரகசியங்களைக் காதுகொடுத்துக் கேளுங்கள். கோபம், தர்மசங்கடம், மன அழுத்தம் போன்றவை குழந்தைகளுக்கு வரலாம். மற்ற குழந்தைகளுடன் ஒட்டாமல் தனிமைப்படுத்திக்கொள்ளலாம். இதன் பின்னணியில் சைபர் புல்லியிங் இருக்கிறதா எனக் கண்டுபிடியுங்கள். அது தெரியவந்தால் குழந்தையைக் குறைசொல்வதைத் தவிருங்கள். அவர்கள் தரப்பையும் கேளுங்கள்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பல பெற்றோரும் முதலில் குழந்தைகளிடமிருந்து மொபைலைப் பறித்துவிடுவார்கள். இப்படிச் செய்தால் யாரோ உங்கள் குழந்தையிடம் தவறாக நடந்துகொண்டதற்கு நீங்கள் உங்கள் குழந்தைக்குத் தண்டனை கொடுப்பது மாதிரி ஆகிவிடும். ஆரம்பத்திலிருந்தே கொடுக்காமல் இருப்பது வேறு. கொடுத்துப்பழக்கிவிட்டு. திடீரெனப் பிடுங்குவது சரியானதல்ல.

சரி, அடுத்த விஷயத்துக்கு வருவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டீன்ஏஜில் அடியெடுத்துவைக்கும்போது பெரும்பாலான பிள்ளைகளும் பெற்றோரிடமிருந்து கொஞ்சம் விலகத் தொடங்குவார்கள். அவர்களுக்குப் பருவ வயதுக்கான உடல், மன மாற்றங்கள் ஆரம்பித்திருக்கும். மனம்கொள்ளாமல் குழப்பங்களும் கேள்விகளும் இருக்கும். அவற்றுக்கெல்லாம் பெற்றோரிடம் விளக்கங்களையோ, விடைகளையோ எதிர்பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவர்களைக் கையாள்வது பெற்றோருக்குப் பெரிய சவால். ஆனாலும் அதை அவர்கள் சந்தித்துதானாக வேண்டும்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பெற்றோரின் முறையான வழிகாட்டுதல் தவறிப்போனால் பிள்ளைகள் தடம் மாறும் அபாயமும் இருக்கிறது. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள பொறுப்பைப் போலவே பிள்ளைகளுக்கும் இந்த விஷயத்தில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. உடல், மனக் கிளர்ச்சிகளின் தூண்டுதல்கள் ஏற்படுத்தும் குழப்பங்களுக்குத் தவறான நபர்களிடம் விளக்கங்களை எதிர்பார்ப்பது ஆபத்தானது. பெற்றோர் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு அவர்களிடமே சந்தேகங்களுக்குத் தெளிவு பெறுவதுதான் பாதுகாப்பானது.

சரி, இனி பதின்ம வயதுப் பிள்ளைகளுக் கான பாலியல் கல்வி எப்படியிருக்க வேண்டும் எனப் பார்க்கலாம்.

பெண் குழந்தைகளுக்கான விஷயங்களைச் சொல்லித் தரும்போது அவர்களின் உடல், மன மாற்றங்களைப் பற்றிப் பேச வேண்டியது அவசியமாகிறது.

குழந்தைகளே எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களின் உடலிலும் மனத்திலும் பலவித மாற்றங்களை, உணர்வுத் தடுமாற்றங்களை உணரத் தொடங்குவார்கள். குழந்தையாக இருந்தவள், வளர்ந்த பெண்ணாக மாறும் இடைப்பட்ட காலத்தில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்றன.

10 வயதிலிருந்து 13 வயதுக்குள்ளாக பெண் குழந்தைகள் பருவமடைகிறார்கள். முதல் மாதவிடாய் வருகிறது. எல்லாப் பெண்களுக்கும் ஒரே வயதில் அது நிகழ்வதில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு வயதில் வரலாம்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பல பெண் குழந்தைகளுக்கும் எது சரி, எது தவறு என்ற குழப்பம் இருக்கிறது. முதல் விஷயம் உடல்ரீதியான வளர்ச்சி.

முதலில் மாதவிடாய் வருகிறது. அடுத்தது எடை அதிகரிப்பு. திடீரென பெண் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கும். இடை பெருக்கும். மார்பகங்கள் பெரிதாகும்.

கர்ப்பப்பை குழந்தையைத் தாங்குவதற்காக அதன் உட்சுவர் வளர்ந்து ஒவ்வொரு மாதமும் தயாராகும். கரு அங்கே வராதபட்சத்தில் அது உடைந்து ரத்தமாக வெளியேறும். இதே நேரத்தில் சினைமுட்டைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிவந்து கருத்தரிப்பதற்கு ஏதுவாகக் காத்திருக்கும். இந்தச் சுழற்சி ஹார்மோன்களின் அடிப்படையில் நிகழ்வது. 28 நாள்களுக்கொரு முறை நிகழும். மாதவிலக்கு ஆபத்தானது என்ற பார்வையில் உலவும் கட்டுக்கதைகளைக் குழந்தைகளுக்குக் கடத்திவிடாமல், விஞ்ஞானரீதியில் அதைப் பற்றிச் சொல்லித்தர வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. மாதவிடாய் என்பது இயல்பான ஒரு நிகழ்வு, அதில் எந்த அசிங்கமோ, ஆபத்தோ கிடையாது என்பதைப் புரியவைக்க வேண்டும்.

அடுத்து உடலில் வளரும் ரோமங்கள். அக்குள், பிறப்புறுப்பைச் சுற்றியெல்லாம் முடி வளர்வதும் இயல்பானது எனச் சொல்லித் தர வேண்டும். முகப்பருக்களும் அப்படித்தான். குழந்தைகள் தம் உடல் தொடர்பான எந்தவிதமான அசௌகர்யங்களையும் உணரக் கூடாது. ஆண் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட அசௌகர்யங்கள் நிறைய இருப்பதைப் பார்க்கலாம். மாதவிடாய் என்ற விஷயத்தின் அடிப்படையில் பெண் குழந்தைகளும் அப்படி உணர்வதற்கு இடமளிக்கக் கூடாது.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

நடிகைகள், மாடல்கள் மற்றும் பிற துறைப் பிரபலங்களின் உடலமைப்புகளோடு தம் உடலமைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்துப் பெண் குழந்தைகள் தவறான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறார்கள். ஆண் குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தக் குழப்பங்களை வளரவிடாமல் தெளிவடையச் செய்ய வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இருக்கிறது.