Published:Updated:

பாலியல் புகாரில் ஆதீனகர்த்தர்!

சூரியனார் கோயில் ஆதீன மடம்
பிரீமியம் ஸ்டோரி
சூரியனார் கோயில் ஆதீன மடம்

எங்களுக்கும் தகவல் வந்திருக்கிறது. உரிய விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். விசாரணை முடிவில் ஆவன செய்யப்படும்

பாலியல் புகாரில் ஆதீனகர்த்தர்!

எங்களுக்கும் தகவல் வந்திருக்கிறது. உரிய விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். விசாரணை முடிவில் ஆவன செய்யப்படும்

Published:Updated:
சூரியனார் கோயில் ஆதீன மடம்
பிரீமியம் ஸ்டோரி
சூரியனார் கோயில் ஆதீன மடம்

‘சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், மடத்தை அந்தப்புரமாக்கிவிட்டார். வெளிநாட்டில் இருப்பவரின் மனைவியுடன் தொடர்புவைத்திருப்பதோடு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மடத்தில் பணியமர்த்தி, அவர்களோடு காமக்களியாட்டம் நடத்துகிறார்’ என்று ஆதீனத்தை விரசமான நடையில் விமர்சிக்கும் பாலியல் குற்றச்சாட்டுக் கடிதம் ஒன்று இணையத்தில் பரவி, தஞ்சையைப் பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்
ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்

சைவத் திருமடங்கள் பதினெட்டில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சூரியனார் கோயில் ஆதீன மடமும் ஒன்று. பழம் பெருமை வாய்ந்த இத்திருமடத்தின் ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இருக்கிறார். முந்தைய ஆதீனம் கடந்த ஜனவரி மாதம் பரிபூரணம் அடைந்ததைத் தொடர்ந்து, புதிய ஆதீனமாக இளம் வயதுள்ள இவர் நியமிக்கப்பட்டார். சில மாதங் களிலேயே பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறித்து, அவரோடு இணைத்துப் பேசப்படும் பெண்களிடமே விசாரித்தோம்.

“சாமி ரொம்ப நல்லவங்க. அவங்களோட எங்களை இணைச்சுப் பேசுறது வருத்தமா இருக்கு. மடத்துல வேலை பார்க்குறதை தெய்வத் தொண்டா நினைக்கிறோம். எங்களை அசிங்கப்படுத்தலாமா... எங்களுக்கும் குடும்பம் இருக்கு, புள்ளைங்க இருக்காங்க. இதையெல்லாம் கேள்விப்படும் போது அவங்க மனசு எவ்வளவு வேதனைப்படும்... இப்படிப் பேசுறவங்க, அவங்க குடும்பத்துப் பொம்பளைங்க வேலைக்குப் போனாலும் இப்படித்தான் தப்பாச் சொல்வாங்களா?” என்று கேட்டனர் வேதனையுடன்.

பாலியல் புகாரில் ஆதீனகர்த்தர்!

ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமி களிடமே புகார்க் கடிதம் குறித்து விளக்கம் கேட்டோம். “பி.ஏ எகனாமிக்ஸ் பட்டம் பயின்ற யாம், 31-வது வயதிலேயே இம்மடத்து ஆதீனமாகப் பட்டம் சூட்டப்பட்டுள்ளோம். இந்த மடத்துக்கென்று சிப்பந்திகள் கிடையாது. கணினிமயமாக்கப்பட்ட மடத்து நிர்வாகத்துக்கு சிப்பந்திகளாகச் சிலரை நியமித்துள்ளோம். அனைவருக்குமே மாதச் சம்பள மாக வெறும் மூவாயிரம் ரூபாய்தான் தருகிறோம். அவர்களும் விருப்பமுடன் இப்பணியை ஏற்று மடத் தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அந்த வகையில், நீங்கள் குறிப்பிடும் மூன்று பெண்களுமே எனக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான். அவர்களில் இருவர் இங்கு பணிபுரிகிறார் கள். அவர்களோடு என்னை இணைத்துப் பேசுவது நம் கவனத்துக்கும் வந்தது. பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் இது போன்ற கீழ்த்தரமான விமர்சனங்கள் வருவது சகஜம்தான். இளம் வயதில் துறவு மேற்கொண்டு இறைப் பணிக்காக வாழ் நாளையே அர்ப்பணிக்கிறோம். நம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் மற்ற குடும் பப் பெண்களைத் தவறாகச் சித்திரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்

இவருக்கு ஆதீனகர்த்தராகப் பட்டம் சூட்டிய, திருவாவடுதுறை குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்யரிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டபோது, “எங்களுக்கும் தகவல் வந்திருக்கிறது. உரிய விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். விசாரணை முடிவில் ஆவன செய்யப்படும்” என்றார்.