Published:Updated:

நிறைய மார்க் போட்டுருக்கேன்... ஏதாவது சந்தேகம்னா தனியா வா!

பாலியல் குற்றச்சாட்டு
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் குற்றச்சாட்டு

- அத்துமீறினாரா ஆங்கிலப் பேராசிரியர்?

நிறைய மார்க் போட்டுருக்கேன்... ஏதாவது சந்தேகம்னா தனியா வா!

- அத்துமீறினாரா ஆங்கிலப் பேராசிரியர்?

Published:Updated:
பாலியல் குற்றச்சாட்டு
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் குற்றச்சாட்டு

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ‘துறைத் தலைவர் பாலியல்ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததாக’ எம்.ஏ மாணவி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு, பரபரப்புத் தீயைப் பற்றவைத்திருக்கிறது!

திருச்சி காஜாமலையிலுள்ள பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஆங்கிலத்துறைத் தலைவராக இருப்பவர் ஜெயக்குமார். இவர்மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, கல்லூரி மாணவி ஒருவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு எழுதியுள்ள புகார்க் கடிதத்தில், ‘பேராசிரியர் ஜெயக்குமார் எனக்குப் பாலியல் தொல்லை கொடுக்குறாரு. நான் மட்டுமல்லாமல் மற்ற மாணவிகள், பேராசிரியைகள் சிலரிடமும் தவறாக நடந்திருக்கிறார். அவரால நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கேன். அவர்மேல நடவடிக்கை எடுக்கலைன்னா நான் தூக்கு மாட்டிக்கிட்டு செத்துடுவேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நிறைய மார்க் போட்டுருக்கேன்... ஏதாவது சந்தேகம்னா தனியா வா!

இது சம்பந்தமாக அந்தக் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலரிடம் பேசினோம். “பேராசிரியர் ஜெயக்குமார் கிருஷ்ண கிரியில் வேலை பார்த்தப்போ, தன்கிட்ட படிச்ச மாணவியையே காதலித்து, திருமணம் செஞ்சுக்கிட்டாரு. பொண்ணுங்ககிட்ட நைஸா பேசுறதும், இன்டர்னல் மார்க்கை அள்ளிப் போடுற தும்னு ஆரம்பிப்பாரு. அப்புறம் ‘நீ பாஸ் ஆகணும்னு நிறைய மார்க் போட்டுருக்கேன். ஏதாவது சந்தேகம்னா தனியா வா. சொல்லித் தாரேன்’னு லீலைகளைக் காட்டுவாரு. அப்படித்தான் இப்போ புகார் கொடுத்திருக்கிற மாணவிகிட்டயும் சில்மிஷம் செஞ்சு சிக்கியிருக்காரு. இந்த விவகாரத்துல கௌரவ விரிவுரை யாளர் ஒருவருக்கும் சம்பந்த மிருக்கு. அவரையும் விசாரிக்கணும்” என்றனர்.

விஷயமறிந்த இன்னும் சிலர், “கல்லூரி முதல்வர் சுகந்திக்கும், ஜெயக்குமாருக்குமான முன்பகை யும் இதில் பிரதானமான காரணம். இதன் பின்னணியில் பேராசிரியர் களுக்குள்ளான சாதிரீதியான பாகுபாடுகளும், பிரச்னைகளும் இருக்கின்றன” என்றனர்.

சுகந்தி
சுகந்தி

இந்தப் பாலியல் புகார் குறித் துப் பேராசிரியர் ஜெயக்குமாரிடம் கேட்டோம். “என் மீதான பாலியல் புகார் முழுக்க முழுக்க ஜோடிக்கப் பட்டது. உண்மையாகவே அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருந்தால், எங்கள் துறையிலுள்ள 14 பேராசிரியைகளில் யாரிடமாவது முன்பே புகார் சொல்லியிருக்க லாமே... கல்லூரி முதல்வரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாலேயே இந்தப் பிரச்னையைக் கிளப்பியிருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக என்னிடம் விசாரணை செய்யாமலேயே அறிக் கையை அரசுக்கு அனுப்பியுள்ளனர். என்மீது புகார் கொடுத் திருக்கும் பெண்ணுக்கு, `அந்நியன்’ படத்துல வர்ற மாதிரி மாத்தி மாத்தி பேசும் லேசான மனப்பிறழ்வு இருக்கு. எனக்கே 8 பக்கத்துக்கு அந்தப் பொண்ணு லவ் லெட்டர் கொடுத்தது. கல்லூரித் தேர்வு நெறியாளர் அலுவலகத்தில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. எனக்குத் தேர்வு நெறியாளர் பதவி கிடைத்துவிட்டால், அவர்களுக்குச் சிக்கல் உண்டாகும் என்பதாலேயே திட்டமிட்டு இப்படிச் செய்கின்றனர்” என்றார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இறுதியாக, கல்லூரி முதல்வர் சுகந்தியிடம் பேசினோம். “மாணவிக்குப் பாலியல் தொந்தரவு நடந்திருப்பது உண்மை தான். சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் அந்தத் துறையிலுள்ள மாணவர்களிடமும் விசாரித்துத்தான் அறிக்கையை அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. சம்பந்தப் பட்ட நபர் சாதியைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதோடு, அரசு மற்றும் அரசியல் பிரமுகர்களைத் தனக்குத் தெரியும் என்கிறார். எங்களுக்கும் எல்லோரையும் தெரியும்” என முடித்துக்கொண்டார்.

நியாயமான விசாரணையும், நீதியும் கிடைக்குமா?