Published:Updated:

“டேய் வேணாம்டா... நான் உங்க ஃபிரெண்டுடா..!” - கதறிய சிறுமியை சிதைத்த சிறுவர்கள்!

சிறுமியை சிதைத்த சிறுவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சிறுமியை சிதைத்த சிறுவர்கள்!

எங்க சாதிப் பையன்கூட நீ எடுத்துக்கிட்ட போட்டோ என்கிட்ட இருக்குது. அதை உன் வீட்டில் காட்டவா

“டேய் வேணாம்டா... நான் உங்க ஃபிரெண்டுடா..!” - கதறிய சிறுமியை சிதைத்த சிறுவர்கள்!

எங்க சாதிப் பையன்கூட நீ எடுத்துக்கிட்ட போட்டோ என்கிட்ட இருக்குது. அதை உன் வீட்டில் காட்டவா

Published:Updated:
சிறுமியை சிதைத்த சிறுவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சிறுமியை சிதைத்த சிறுவர்கள்!

அரசுப் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியை சக மாணவர்களே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். இந்தச் சிறுமியும், அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்த கொடிக்களம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவனும் நட்புடன் பழகி வந்துள்ளனர். பொதுத்தேர்வில் தோல்வியடைந்த அந்தச் சிறுவன், கடந்த மே 22-ம் தேதி நண்பர்களை வீட்டுக்கு அழைத்து தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். அந்த விழாவுக்குச் சென்ற சிறுமியும், அந்தப் பையனும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்திருக்கின்றனர். அப்போது அந்தச் சிறுமியுடன் படிக்கும் 14 வயதுடைய சக மாணவர் ஒருவரும், அந்தப் புகைப்படத்தை அவர்களுக்குத் தெரியாமல் தனது செல்போனில் படமெடுத்து வைத்திருந்திருக்கிறார்.

“டேய் வேணாம்டா... நான் உங்க ஃபிரெண்டுடா..!” - கதறிய சிறுமியை சிதைத்த சிறுவர்கள்!

சில நாள்கள் கழித்து, தான் எடுத்த புகைப்படத்தை சிறுமியிடம் காட்டிய அந்த 14 வயது மாணவன், “எங்க சாதிப் பையன்கூட நீ எடுத்துக்கிட்ட போட்டோ என்கிட்ட இருக்குது. அதை உன் வீட்டில் காட்டவா?” என்று மிரட்ட, அந்த போட்டோவை அழித்துவிடுமாறு கெஞ்சியிருக்கிறாள் சிறுமி. உடனே, ‘‘செல்போன் என் வீட்டில் இருக்கிறது. என்னுடன் வீட்டுக்கு வந்தால், உடனே அதை அழித்துவிடுவேன்’’ என்று கூறியிருக்கிறான் அவன். இதை ஏற்றுக்கொண்டு ஜூலை 1-ம் தேதி மதிய உணவு இடைவேளையில், அந்த மாணவனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறாள் சிறுமி. அங்கே தன்னுடன் படிக்கும் மேலும் இரண்டு மாணவர்கள் இருந்ததைப் பார்த்து குழப்பமடைந்த சிறுமி, அது குறித்து விசாரித்திருக்கிறாள்.

அதற்குள் வீட்டின் கதவை மூடிய சிறுவர்கள், “சத்தம் போட்டால் போட்டோவை உன் வீட்டுக்கு அனுப்பிடுவோம்” என்று கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். “டேய் வேணாம்டா... நான் உங்க ஃபிரெண்டுடா... ப்ளீஸ்” என்ற சிறுமியின் கதறலைப் பொருட்படுத்தாத மூவரும் அவளைச் சீரழித்து, அதை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். பிறகு அந்த வீடியோவை சென்னையில் இருந்த சிறுமியின் நண்பனுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். மாணவர்களுக்குள் வீடியோ பரவ ஆரம்பித்ததால், தனித்தனியாகச் சிறுமி பிளாக்மெயில் செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து பெற்றோர் மற்றும் பள்ளி தலைமையாசிரியரிடம் சிறுமி நடந்தவற்றைக் கூற, அதிர்ச்சியில் உறைந்தவர்கள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். தற்போது சிறுமியின் நண்பன் உள்ளிட்ட நான்கு சிறுவர்கள் ‘போக்சோ’ வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர்.

வளரிளம் பருவப் பெண்களின் முதல் நண்பர்களாகப் பெற்றோர் மாறினால் மட்டுமே இப்படியான விபரீதங்களைத் தவிர்க்க முடியும்!