Published:Updated:

``என் மகள் சாகவில்லை... உயிருடன் தான் இருக்கிறார்!" - இந்திராணி முகர்ஜி சி.பி.ஐ-க்கு கடிதம்?

இந்திராணி முகர்ஜி
News
இந்திராணி முகர்ஜி

தன் மகள் ஷீனா போரா உயிருடன் இருப்பதாகவும், அவரை காஷ்மீரில் பார்த்ததாக பெண் கைதி ஒருவர் தன்னிடம் கூறியதாகவும் சி.பி.ஐ க்கு கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவையே உலுக்கிய கொலை வழக்கு ஷீனா போராவின் கொலை வழக்கு. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அவரின் தாய் இந்திராணி முகர்ஜி (49), கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து மும்பை பைகுல்லா சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

25 வயதே ஆன தன்னுடைய மகள் ஷீனா போராவை, தன்னுடைய அப்போதைய கணவர் பீட்டருடன் சேர்ந்து இந்திராணி கொலை செய்ததாக போலீஸார் குற்றம் சுமத்தி அவரைக் கைது செய்தனர். அவருடைய கணவர் பீட்டரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திராணி - பீட்டர்
இந்திராணி - பீட்டர்

இந்திராணி கைது தொடர்பாக ஊடங்கங்களிடம் அப்போது பேசிய விசாரணை அதிகாரிகள், ``இந்திராணியும், பீட்டரும் ஒருவரை ஒருவர் இரண்டாவதாகத் தான் திருமணம் செய்துகொண்டனர். முந்தைய திருமணங்களின் மூலம் இருவருக்குமே பிள்ளைகள் இருந்தார்கள். இந்திராணிக்கு ஷீனா போரா என்ற மகளும், பீட்டருக்கு ராகுல் என்ற மகனும் இருந்தனர். இந்திராணியும், பீட்டரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களின் பிள்ளைகள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அண்ணன் தங்கை உறவுமுறையில் பழக வேண்டிய இருவரும், காதலித்தது அவர்களின் பெற்றோரான இந்திராணிக்கும், பீட்டருக்கும் பிடிக்கவில்லை.

அதனால், அவர்களை பிரிக்கும் முயற்சிகளை இருவரும் மேற்கொண்டனர். இருப்பினும், ஷீனா போராவும், ராகுலும் உறுதியாக இருந்தனர். அதனால், ஆத்திரமடைந்த இந்திராணி, பீட்டரின் உதவியுடன் ஷீனா போராவைக் கொலை செய்தார்"என்று தெரிவித்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்திராணி மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அண்மையில், நீதிமன்றம் இவரின் ஜாமீன் மனுவை நிராகரித்திருந்தது.

இந்த நிலையில் இந்திராணி, தன் மகள் ஷீனா போரா உயிருடன் இருப்பதாகவும், அவரை காஷ்மீரில் பார்த்ததாக பெண் கைதி ஒருவர் தன்னிடம் கூறியதாகவும் சி.பி.ஐ க்கு கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திராணி முகர்ஜி
இந்திராணி முகர்ஜி

இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்த அவர்தரப்பு வழக்கறிஞர், ``இந்திராணி சி.பி.ஐ க்கு கடிதம்எழுதியிருப்பது உண்மைதான். ஆனால், அதில் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.