Published:Updated:

தற்கொலைத் தலைநகரமாகிறதா தமிழகம்? - ஷாக் ரிப்போர்ட்

ஷாக் ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
ஷாக் ரிப்போர்ட்

`இது ஒரு தனி உலகம்!’

தற்கொலைத் தலைநகரமாகிறதா தமிழகம்? - ஷாக் ரிப்போர்ட்

`இது ஒரு தனி உலகம்!’

Published:Updated:
ஷாக் ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
ஷாக் ரிப்போர்ட்
காதல், கடன் பிரச்னை, தேர்வு பயம், குடும்பப் பிரச்னை, சாதிய ஒடுக்குமுறைகள், ஆன்லைன் கேமில் தோல்வி, மொபைல்போன் வாங்கித் தரவில்லை, ஆன்லைன் வகுப்பு புரியவில்லை, போதை விபரீதங்கள்... எனத் தற்கொலை களும், தற்கொலைக்கான காரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கின்றன. விபரீதத்தின் உச்சமாக ‘வேலை கிடைத்தால் உயிரைத் தருகிறேன்’ என ஒருவர் வேண்டிக்கொண்டு, வேலை கிடைத்ததும், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் நடந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை ஐஐடி-யில் ஒன்பது தற்கொலைகள் நடந்திருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2016-ம் ஆண்டில் மட்டும் நான்கு பேர் ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம், நீட் தேர்வு பயத்தால் நிகழ்ந்த தற்கொலைகளும் வரிசைகட்டுகின்றன. கொஞ்சம் விவரமாக ஆராய்ந்தால், தற்கொலைகளுக்குப் பின்னிருக்கும் உளவியல் நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது!

கடந்த 2019-ம் ஆண்டில் நிகழ்ந்த தற்கொலைகள் குறித்து, விரிவான அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி). அதன் புள்ளிவிவரங்களின்படி, தற்கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங் களில் தமிழகம் இரண்டாம் இடத்திலும், மாநகரங்களின் வரிசையில் சென்னை முதலிடத்திலும் இருக்கும் தகவல் நமக்குக் கடும் அதிர்ச்சியளிக்கிறது!

முக்கியமான மூன்று காரணங்கள்!

‘‘மனிதர்களுக்குத் தங்கள்மீது காதல் இருக்கும்வரைதான், தங்களது குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒருவருக்குத் தன்னையே வெறுக்கும் சூழல் வரும்போதுதான் அவர் தற்கொலையை நாடுகிறார்’’ என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.

‘‘ஒரு நபர் தற்கொலை செய்துகொள்ள பல காரணங்கள் உண்டு. தன்னைப் பற்றிய தாழ்வான எண்ணம், தனக்கு எதிராகவே எல்லோரும் செயல்படுகிறார்கள் என்ற எண்ணம், அனைவராலும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக எண்ணுவது போன்றவை அவற்றுள் முக்கியமான மூன்று காரணங்கள். தன்னைச் சுற்றியுள்ள சமூக நிகழ்வுகளால் இவர்கள் மனச்சோர்வு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதை `மேஜர் டிப்ரஸிவ் டிஸ்ஆர்டர்’ (Major Depressive Disorder) என்கிறார்கள். மனச்சோர்வு, மனஅழுத்தம் போன்ற விஷயங்களைப் பற்றி நம் சமூகத்தில் விழிப்புணர்வோ கவனமோ போதிய அளவு இல்லை. இதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு சரியான நேரத்தில், முறையான ஆலோசனை கிடைக்காததால், தற்கொலையை நோக்கிச் செல்கிறார்கள். இதற்கு அடுத்த நிலையைத்தான் `மனப்பதற்றம்’ அல்லது `சீஸோபெர்னியா’

(Schizophrenia) என்கிறார்கள். வழக்குத் தமிழில் சொல்வதானால், `பித்துப்பிடித்து விட்டது’ எனலாம். இந்த நோய் முற்றும்போது, தற்கொலை எண்ணங்கள் மேலோங்கி, தீவிரமாகத் தற்கொலைக்கு முயல்வார்கள். பெரும்பாலான நேரத்தில் இதன் முடிவு மரணம்தான்!

தற்கொலைத் தலைநகரமாகிறதா தமிழகம்? - ஷாக் ரிப்போர்ட்

`இது ஒரு தனி உலகம்!’

சிலர் போதைப் பவுடர், பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆகியவற்றை மோந்து பார்த்து போதையை அனுபவிக் கிறார்கள். `இதுவொரு தனி உலகம்’ என அவர்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள். சிலர் போதைக்காக மனநல மாத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால், மனநோயாளியாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. போதைப் பழக்கங்களால் ஏற்படும் மனப்பிறழ்வாலும் தற்கொலை முயற்சிகள் அதிகம் அரங்கேறுகின்றன.

இவையெல்லாம் தவிர்க்கவும் தடுக்கவும் வாய்ப்புள்ள பிரச்னைகளும் நோய்களும்தான். ஆனால், எந்தத் தவறும் செய்யாமல் மனநோய்க்கு ஆளாகிறவர்களும் இருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக எங்களால் நோயாளிகளை நேரில் சந்தித்து கவுன்சலிங் கொடுக்க முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். தற்கொலை எண்ணங்களுக்கும் முயற்சி களுக்கும் அவர்கள் சொல்லும் காரணத்தைக் கேட்டால், நமக்குத் தலைசுற்றிவிடும்!

இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்

தற்கொலைக் குறிப்புகள்!

மரபணுரீதியாகத் தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்களெல்லாம் சற்றுச் சிக்கலான வட்டத்துக்குள் வருகிறார்கள். அவர்கள், தங்களுக்கு வரக்கூடிய தற்கொலை எண்ணங்களை சூசகமாகச் சொல்வார்கள். செல்போன் மெசேஜ் மூலமாகவோ, துண்டுக் காகிதத்திலோ எழுதிக் காட்டுவார்கள். `நான் செத்துப்போவேன்’ என அடிக்கடி சொல்வார்கள். அவர்களின் எடை குறைந்துகொண்டே போகும்; சாப்பிடும் ஆர்வம் இருக்காது. இந்த அறிகுறிகளை சீரியஸாக எடுத்துக்கொண்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுவது நல்லது. `சும்மா பேசுகிறான்... செய்ய மாட்டான்’ என நினைக்க வேண்டாம். `ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டால், அவர்களை மாற்றிவிடலாம்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்’’ என்று அக்கறையுடன் விளக்கினார் மோகன வெங்கடாசலபதி.

ஒருவருக்குத் தற்கொலை தொடர்பான எண்ணம் தொடர்ந்து ஏற்பட்டால், மாநில உதவி மையம் எண்ணான 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் எண் 044 - 24640050 ஆகியவற்றில் தொடர்புகொண்டு நிவாரணம் பெறலாம். உலக சுகாதார நிறுவனம், கடந்த 2013-ம் ஆண்டு `மனநலச் செயல்பாடு’ என்ற திட்டத்தை முன்னெடுத்தது. அதன்படி, `2020-க்குள் தற்கொலைகளின் எண்ணிக்கையில் 10 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்’ என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கு எட்டப்பட்டதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

மோகன வெங்கடாசலபதி
மோகன வெங்கடாசலபதி

இந்தப் பரபரப்பான வாழ்க்கையில், நமது உடலுக்குத் தரும் முக்கியத்துவத்தை, மனதுக்குத் தருவதில்லை. ஆனால், மனம்தான் நம் வாழ்வின் ஆதாரம். அதில் ஏற்படும் சிறிய பிரச்னைகள்கூட ஒட்டுமொத்த வாழ்வையும் சிதைத்துவிடும். பிரச்னைகள் ஆயிரம் இருப்பதைப்போலவே இங்கே தீர்வுகளும் நூறாயிரம் உண்டு. வாழ நினைத்தால் வாழலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism