Published:Updated:

சைலன்ஸ் ப்ளீஸ்!

சைலன்ஸ் ப்ளீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சைலன்ஸ் ப்ளீஸ்!

- கணியன் பூங்குன்றன்

சைலன்ஸ் ப்ளீஸ்!

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
சைலன்ஸ் ப்ளீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சைலன்ஸ் ப்ளீஸ்!

* ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, இரவு 11 மணிக்கு மேல் மெரினா பீச்சில் நாற்காலியைப் போட்டு தாகசாந்தி நடத்திய அமைச்சர் அவர். பிற்பாடு, உளவுத்துறை மூலமாக ஜெயலலிதாவுக்கு விஷயம் தெரிந்து, அமைச்சரை வறுத்தெடுத்தது தனிக்கதை. இப்போது, கடவுள் பக்தியில் உச்சமாகி கோயில் கோயிலாகச் சுற்றும் அந்த அமைச்சர், கடந்த மூன்று மாதங்களாக விரதமிருக்கிறார். மதுபாட்டிலைக் கண்ணால்கூடப் பார்ப்பதில்லையாம். சமீபத்தில், அமைச்சரின் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ஒருவர், கையில் மதுபாட்டிலுடன் அமைச்சரைச் சந்திக்க வந்திருக்கிறார். ‘‘அண்ணே, மிலிட்டரி சரக்கு. சும்மா கும்முனு இருக்கும்’’ என்று நீட்டினாராம். பாட்டிலைப் பார்த்தவுடன் அமைச்சருக்கு கை உதறினாலும், உஷாரானவர், ‘‘என் விரதத்தைக் கலைக்கப் பார்க்குறியா... ஒரு மண்டலத்துக்கு இந்த ஏரியா பக்கம் வராதே...’’ என்று விரட்டிவிட்டாராம். ‘‘நம்ம அண்ணனா இப்படி மாறிட்டாரு’’ என்று வாய்பிளக்கிறது அமைச்சரின் உதவியாளர்கள் தரப்பு.

* டெல்டாவில் பணியாற்றிய அந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரியின் குடும்பத்தில் ஏகப்பட்ட தகராறு. எல்லாம் அதிகாரியின் ‘ஒன் டே மேட்ச்’களால் வந்த வினைதானாம். அடிக்கடி சர்ச்சையைக் கிளப்பும் ஒரு நடிகையுடன் சேர்ந்து இளம் அதிகாரி போடும் ஆட்டம், குடும்பத்துக்குள் ரணகளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்திலும், சென்னைக்கு அலுவல் வேலையாகச் செல்வதாகக் கூறிவிட்டு, நடிகையுடன் ஊர் சுற்றியிருக்கிறார். விஷயத்தை லேட்டாகக் கேள்விப்பட்ட அதிகாரியின் குடும்பம் தாண்டவமாடிவிட்டதாம். விவகாரம் விரைவில் நீதிமன்றப் படியேறும் என்கிறார்கள்.

சைலன்ஸ் ப்ளீஸ்!

* கொரோனா காலத்தில் மேற்படி சமாசாரங்களைப் பாதுகாப்பாக முடித்துக்கொள்வதில் மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்குப் பெரும் சிக்கலும் பயமும். ‘பத்து நிமிஷ சந்தோஷத்துக்காக கொரோனாவை வாங்கிடுவோமோ?’ என்று அரண்டுபோயிருக்கிறார்கள். இதற்காகவே, கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொண்ட கிளிகளைப் பாதுகாப்பாக மெயின்டெயின் செய்கிறாராம் ஒரு கிளப் முதலாளி. சென்னை அண்ணாசாலையில் அலுவலகம் வைத்திருக்கும் அவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் பலமுறை மோசடிப் புகாரில் சிக்கினாலும், யாராலும் அசைக்க முடியாத சக்தியாக வலம்வருகிறார். இதற்கு இந்த சப்ளை அண்ட் சர்வீஸ்தான் காரணமாம். தன்னிடமுள்ள கிளிகளுக்குப் பத்து நாள்களுக்கு ஒரு முறை கொரோனா டெஸ்ட் எடுத்துவிடுகிறாராம். ‘தன்னிடம் வரும் பார்ட்டிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டு மென்று இவ்வளவு மெனக்கெடுகிறாரே!’ என்று ஆச்சர்யப்பட்டு ‘உச்’ கொட்டிய சில காவல் அதிகாரிகள், தங்கள் நட்பு வட்டத்திலும் கிளப் முதலாளியின் பெயரைப் பகிர்ந்திருப்பதால், முதலாளியின் கிராப் எகிறியிருக்கிறது.-

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism