Published:Updated:

`இதில் அரசியல் செய்வதில் அர்த்தமில்லை!' -கொரோனா வார்டு திகில் காட்சிக்கு அமைச்சர் விளக்கம்

மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப்
மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப்

இணையத்தில் வீடியோ வெளியானதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு அரைமணி நேரத்தில் சடலங்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறியதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

மும்பை உள்ள சியான் மருத்துவமனையில் கொரோனா வார்டில் இறந்தவர்களின் சடலங்கள் வைக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் படுக்கைக்கு அருகிலே சடலங்கள் கருப்பு நிற கவரால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. `மருத்துவமனை நிர்வாகம் குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு நடத்துகொள்ள வேண்டாமா? கொரோனா நோயத்தோற்றால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சடலங்களைக் கண்டு அதிர்ச்சியடைய மாட்டார்களா? நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஒரு மருத்துவமனை இப்படியா நடப்பது?’ என சமூக ஆர்வலர்கள் வேதனையைத் தெரிவித்தனர்.

`இதில் அரசியல் செய்வதில் அர்த்தமில்லை!' -கொரோனா வார்டு திகில் காட்சிக்கு அமைச்சர் விளக்கம்

மருத்துவமனை டீன் பிரமோத் இங்காலே, ’கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுக்கின்றனர். இதன்காரணமாக இங்கு நிறைய உடல்கள் உள்ளன. கொரோனா வார்டில் இருந்த சடலங்களை நாங்கள் அகற்றிவிட்டோம். பிணவறையில் மற்ற காரணத்தால் இறந்தவர்களின் சடலத்தோடு கொரோனாவால் இறந்தவர்களின் சடலத்தை வைக்க முடியாது” என்றார்.

`கொரோனா வார்டில் சடலங்களுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை?’ - மும்பை சியான் மருத்துவமனையின் திகில் காட்சி

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் இணையத்தில் வெளியான வீடியோ குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அரைமணி நேரத்தில் சடலங்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறினேன்” என்றார். மேலும் பேசியவர், ``சமீபகாலமாக எதாவது ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

கொரோனா
கொரோனா

நோயாளிகளுடன் சடலங்கள் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியானதைப் பார்த்தேன். இதில் அரசியல் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. கொரோனா நோய்த் தொற்றால் ஒருவர் இறந்துவிட்டால் வழிக்காட்டுதல் நெறிமுறைகளின்படி அவரது உடல் கறுப்பு நிற கவரால் சுற்றப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் நோய்த் தொற்று பரவல் தடுக்கப்படுகிறது. இந்த வழிமுறைகளைச் செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கிறது. கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் அச்சப்படுகின்றனர். சில நேரங்களில் அவர்கள் மருத்துவமனையை அடைவதற்கு சிறிது நேரமாகிறது. நாங்கள் மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம். மரணமடைந்த ஒரு நபரின் உடலை உரிமைக்கோர அரைமணி நேரத்துக்குள் யாரும் வரவில்லை என்றால் அந்தச் சடலத்தைப் பிணவறையில் வைக்க அறிவுறித்தியுள்ளோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு