Published:Updated:

புது பஸ் ஸ்டாண்ட் வேண்டாம்! - அமைச்சருக்கு எதிராகப் போராடும் மக்கள்

இளையான்குடி
பிரீமியம் ஸ்டோரி
இளையான்குடி

வெகு தூரத்தில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டால், மக்கள் போய்வருவதற்கு கூடுதல் செலவாகும். இதுமட்டுமல்ல... சுடுகாடு, பிராந்திக்கடை பக்கத்திலேயே புது பஸ் ஸ்டாண்ட் கட்டுகிறார்கள்

புது பஸ் ஸ்டாண்ட் வேண்டாம்! - அமைச்சருக்கு எதிராகப் போராடும் மக்கள்

வெகு தூரத்தில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டால், மக்கள் போய்வருவதற்கு கூடுதல் செலவாகும். இதுமட்டுமல்ல... சுடுகாடு, பிராந்திக்கடை பக்கத்திலேயே புது பஸ் ஸ்டாண்ட் கட்டுகிறார்கள்

Published:Updated:
இளையான்குடி
பிரீமியம் ஸ்டோரி
இளையான்குடி

‘புதிய பஸ் ஸ்டாண்ட் வேண்டும்’ என்று கேட்கும் மக்களுக்கு மத்தியில், ‘மூன்றே முக்கால் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுவரும் புதிய பஸ் ஸ்டாண்ட் எங்களுக்கு வேண்டாம்’ என்ற வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்துப் போராடிவருகின்றனர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மக்கள்.

கோரிக்கையை வலியுறுத்தி கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் என உள்ளூரில் கவனம் ஈர்த்தவர்கள் அண்மையில் சென்னைக்குச் சென்று ‘தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம்’ நடத்தி பரபரப்பைக் கூட்டியிருக்கின்றனர். இது குறித்துப் பேசுகிறவர்கள், ‘‘இளையான்குடிக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்தாலும், பெரும்பாலான பஸ்கள் இளையான்குடி வழியாக மற்ற நகரங்களுக்குச் செல்பவைதான். மற்றபடி இங்கேயே எந்த பஸ்ஸையும் நிறுத்திவைப்பதில்லை. எனவே, புதிதாகப் பெரிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமளவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஊருக்குள் இருக்கும் பழைய பஸ் ஸ்டாண்டையே விரிவுபடுத்தித் தருமாறு கடந்த ஆட்சியிலிருந்தே கோரிக்கை வைத்துவருகிறோம். தொகுதி எம்.எல்.ஏ-வான தமிழரசியும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். அமைச்சர் பெரியகருப்பனுக்கும் இது விஷயமாக மனு அளித்திருந்தோம். ஆனால், அவருக்கு தமிழரசியைப் பிடிக்காததாலும், வேறு ஆதாயத்துக்காகவும் ஊருக்கு வெளியே 3 கிலோமீட்டர் தூரம் தள்ளி புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க உத்தரவிட்டுவிட்டார்’’ என்றனர்.

புது பஸ் ஸ்டாண்ட் வேண்டாம்! - அமைச்சருக்கு எதிராகப் போராடும் மக்கள்

‘மக்கள் நல கூட்டமைப்பு’ நிர்வாகிகளான சைபுல்லா மற்றும் கார்த்திகேயன் நம்மிடம், ‘‘வெகு தூரத்தில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டால், மக்கள் போய்வருவதற்கு கூடுதல் செலவாகும். இதுமட்டுமல்ல... சுடுகாடு, பிராந்திக்கடை பக்கத்திலேயே புது பஸ் ஸ்டாண்ட் கட்டுகிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும் இதே இடத்தைத்தான் தேர்வு செய்திருந்தனர். ஆனால், மக்கள் எதிர்த்ததும் திட்டத்தையே கைவிட்டுவிட்டார்கள்’’ என்றனர் ஆதங்கத்துடன்.

அமைச்சர் பெரியகருப்பனிடம் விளக்கம் கேட்பதற்காக அவரது செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. நாம் அனுப்பிய குறுஞ்செய்திக்கும் அமைச்சர் தரப்பிலிருந்து பதில் இல்லை.

புது பஸ் ஸ்டாண்ட் வேண்டாம்! - அமைச்சருக்கு எதிராகப் போராடும் மக்கள்

இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ-வான தமிழரசி யிடம் பேசியபோது, ‘‘இளையான்குடி மக்களின் பஸ் ஸ்டாண்ட் பிரச்னை குறித்து கலெக்டரிடம் எடுத்துச் சொல்லியிருந்தேன். ஆனால், ஊருக்கு வெளியே பஸ் ஸ்டாண்ட் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு விட்டார்கள். என்னால் அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியவில்லை’’ என்றார் நழுவலாக.

பெரிய கருப்பன்
பெரிய கருப்பன்
தமிழரசி
தமிழரசி

அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “இப்போதே இளையான்குடியில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் ஏற்படுகிறது. எதிர்கால வாகனப் பெருக்கத்தை கணக் கிட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதே சரியானதாக இருக்கும். அரசு நிலம் ஊருக்கு வெளியில் இருந்த தால் அங்கு அமைக்கிறோம். இதையெல்லாம் எதிர்க்க லாமா?’’ என்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் திட்டங்களை நிறைவேற்றுகிறபோது, மக்கள் கருத்தைக் கேட்க வேண்டாமா?!