Published:Updated:

தீப்பெட்டி... லுங்கி... பட்டு... தென்னை... நார்... - முடங்கும் சிறுதொழில்!

தீப்பெட்டி... லுங்கி... பட்டு... தென்னை... நார்
பிரீமியம் ஸ்டோரி
தீப்பெட்டி... லுங்கி... பட்டு... தென்னை... நார்

குமுறலில் குடியாத்தம்!

தீப்பெட்டி... லுங்கி... பட்டு... தென்னை... நார்... - முடங்கும் சிறுதொழில்!

குமுறலில் குடியாத்தம்!

Published:Updated:
தீப்பெட்டி... லுங்கி... பட்டு... தென்னை... நார்
பிரீமியம் ஸ்டோரி
தீப்பெட்டி... லுங்கி... பட்டு... தென்னை... நார்
‘கொரோனா ஊரடங்கால் முடங்கியிருக்கும் குறு, சிறு தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயத்தில் உள்ளன. எனவே, குறு - சிறு தொழில்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற குமுறல், ‘குட்டி சிவகாசி’ குடியாத்தத்தில் எதிரொலிக்கிறது.

சமையலறையின் முதல் விருந்தாளியான தீப்பெட்டியை, சிவகாசிக்கு அடுத்தபடியாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தான் அதிகம் தயாரிக்கிறார்கள். இங்கே 15 இயந்திரத் தொழிற் சாலைகளிலும், 200-க்கும் மேற்பட்ட குடிசைத் தொழிற்சாலை களிலும் தீப்பெட்டி தயாரிக்கப்படுகிறது. ஊரடங்கால் தீப்பெட்டித் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் தீப்பெட்டியைப் போன்றே சுருங்கிவிட்டது.

ஆர்.கே.மகாலிங்கம் - ஹரிஹரன் - சம்பத் - ஜெகதீசன்
ஆர்.கே.மகாலிங்கம் - ஹரிஹரன் - சம்பத் - ஜெகதீசன்

குடியாத்தம் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் ஆர்.கே.மகாலிங்கம், ‘‘தீப்பெட்டித் தொழில் மூலம் இங்கே ஏழாயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைகிறார்கள். இதில் பெண்களே அதிகம் பணியாற்று கின்றனர். ஒவ்வோர் இயந்திரத் தொழிற்சாலையிலும் நாளொன்றுக்கு 1.50 லட்சம் தீப்பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. கரன்ட் பில், மூலப்பொருள்களுக்கான செலவு, தொழிலாளர்கள் கூலி, 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி போக சொற்ப லாபத்துக்காகத் தான் உழைக்க வேண்டியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குடியாத்தம் தீப்பெட்டிகள் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்கின்றன. ஊரடங்கால், தீப்பெட்டித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் வரையிலான தீப்பெட்டி பண்டல்கள் குடோன்களில் தேங்கியுள்ளன. குடிசைத் தொழிலாக தீப்பெட்டியைத் தயாரித்துவரும் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களும் வறுமையில் வாடுகின்றன. இந்த நிலையில், சுழற்சி முறையில் குறைவான தொழிலாளர் களைக் கொண்டு தொழிற்சாலைகளை இயக்க அரசு அனுமதித்திருக்கிறது. வாகனங்கள் இயக்கப்படாததால் மூலப்பொருள்களைக் கொண்டுவர முடியவில்லை. ஆர்டர் இல்லாததால் உற்பத்தியைத் தொடங்க முடியாத நிலை உள்ளது’’ என்றார்.

தீப்பெட்டி... லுங்கி... பட்டு... தென்னை... நார்... - முடங்கும் சிறுதொழில்!

ஏற்றுமதி தரம்வாய்ந்த கைத்தறி லுங்கி உற்பத்தியிலும் குடியாத்தம் பெயர்பெற்றது. பீகார், மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், இலங்கை, இந்தோனேஷியா, மியான்மர் மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. லுங்கித் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுகிறார்கள். ஊரடங்கால் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான லுங்கிகள் தேக்கமடைந்து நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நெசவாளர் ஹரிஹரன், ‘‘ரம்ஜான் காலத்தில் லுங்கி விற்பனை அதிகமாக இருக்கும். ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் லுங்கிகள் தேக்கமடைந்துள்ளன. நாள்தோறும் 400 ரூபாயை நம்பியிருந்த குறு, சிறு நெசவாளர்கள், குடும்பத்துடன் பட்டினியால் வாடுகிறார்கள். கடன் கொடுத்தவர்களும் வட்டியைக் கேட்டு நச்சரிக்கிறார்கள். அவர்களிடம், `சாப்பாட்டுக்கே காசு இல்லை’ என்று காலில் விழாத குறையாக நெசவாளர்கள் கெஞ்சுகிறார்கள். கைத்தறி லுங்கி நெசவாளர்களின் குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும்’’ என்றார்.

குடியாத்தத்தில் இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட பட்டு விசைத்தறிகள் உள்ளன. இதை நம்பி 2,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் இருக்கின்றனர்.ஊரடங்கால், எட்டு கோடி ரூபாய் வரையிலான பட்டுப்புடவைகள் தேங்கியிருக்கின்றன. பட்டு விசைத்தறி சங்க கௌரவத் தலைவர் மூகாம்பிகை சம்பத், “ஊரடங்குக்கு முன்பு ஜவுளிக் கடைகளுக்கு அனுப்பிய சரக்கு களுக்கான தொகைகூட விசைத்தறி உரிமையாளர்களின் கைகளுக்கு வரவில்லை. இதனால், எங்களைச் சார்ந்துள்ள உபத்தொழிலாளர் களுக்குக் கூலி கொடுக்க முடிய வில்லை. விசைத்தறித் தொழிலாளர் களின் குடும்பங்களுக்கு மூன்றா யிரம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

தென்னை நாரில் கயிறு தயாரிக்கும் 2,500 தொழிலாளர்களின் நிலையும் இதேதான். தென்னை நார் உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் ஜெகதீசனிடம் பேசினோம்.

‘‘குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், காட்பாடி பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட தென்னை நார் கயிறு தொழிற்சாலைகள் உள்ளன. இதுவரை நான்கு கோடி ரூபாய்க்குமேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பிலிருந்து மீள, அரசு கருணை காட்ட வேண்டும். கயிறு தொழிற்சாலைகள் வாங்கியிருக்கும் வங்கிக் கடனை கட்டுவதற்கான கால அவகாசத்தை, குறைந்தது ஆறு மாதங்களுக்காவது நீட்டிக்க வேண்டும். கொரோனா பாதிப்பால் குறு, சிறு தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அது தொடர்ந்தால், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து குடும்பத்துடன் வீதிக்கு வந்துவிடுவார்கள். குறு, சிறு தொழில்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டும்’’ என்றார்.

தீப்பெட்டி... லுங்கி... பட்டு... தென்னை... நார்... - முடங்கும் சிறுதொழில்!

வங்கிகளில் கடன்பெற்ற பணத்தை ஊதாரித்தனமாக செலவிட்டு, நாட்டைவிட்டே தப்பியோடியவர்கள்... ஆளும் அரசியல்புள்ளிகளைக் கையில் வைத்துக்கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கெல்லாம் ‘ரைட் ஆஃப்’ என்கிற பெயரில் கருணை காட்டும் அரசு, அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக அல்லாடும் இவர்களுக்கு என்ன தரப்போகிறது?