Published:Updated:

கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரத்துக்குத் தடை! - வியாபாரிகள் தொடர் போராட்டம்

வியாபாரிகள் போராட்டம்

சுமார் 1,800-க்கும் மேற்பட்ட சிறியரக காய்கறிக் கடைகள், 850-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் என நிரம்பியிருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் 2,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தொழில் செய்துவருகின்றனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரத்துக்குத் தடை! - வியாபாரிகள் தொடர் போராட்டம்

சுமார் 1,800-க்கும் மேற்பட்ட சிறியரக காய்கறிக் கடைகள், 850-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் என நிரம்பியிருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் 2,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தொழில் செய்துவருகின்றனர்.

Published:Updated:
வியாபாரிகள் போராட்டம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு நேற்று (8.4.2021) பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உத்தரவிட்டது. அதில், ``திரையரங்குகள், ஷாப்பிங் மால் உள்ளிட்ட பெரு வணிக வளாகங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி, கோயில், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை, வெளி மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் போன்ற பல முக்கியமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நாளை (10.4.2021) முதல் அமல்படுத்தப்படும்’’ என்று தெரிவித்திருந்தது.

கோயம்பேடு
கோயம்பேடு

குறிப்பாக, சென்னை கோயம்பேட்டில் சில்லறை வியாபாரத்துக்குத் தடைவிதிப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில், அரசின் இந்தத் தீர்ப்பால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும், இந்த உத்தரவை மறுபரிசீனை செய்ய வேண்டும் என்று கூறி கோயம்பேடு சில்லறை வியாபாரிகள், பணியாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் என அனைவரும் கோயம்பேடு வணிக வளாக அலுவலகத்தை (சி.எம்.டி.ஏ) முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொரோனா பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவந்ததையடுத்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த சிறு வியாபாரிகள், பொருளாதாரரீதியில் பெருமளவு பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில், குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தை முற்றிலுமாக மூடப்பட்டது. பின்னர் கொரோனா தீவிரம் குறைந்துவந்த நிலையில், படிப்படியாக கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு 8 மாதங்கள் கழித்துதான் முழுமையாக திறந்துவிடப்பட்டது.

கோயம்பேடு
கோயம்பேடு

சுமார் 1,800-க்கும் மேற்பட்ட சிறியரக காய்கறிக் கடைகள், 850-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் என நிரம்பியிருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் 2,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தொழில் செய்து வருகின்றனர். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தொழிலாளர்கள் என இந்தத் தொழிலைச் சார்ந்து வாழ்ந்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்பால் கொதிப்படைந்த அவர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, கடைகளைத் தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து இன்று காலையிலிருந்து போராட்டம் செய்து வந்தனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன், தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறி வியாபாரிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

கோயம்பேடு
கோயம்பேடு

முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், இன்று மாலை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளின் இந்தப் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, சிறு மொத்த வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கியுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism