Published:Updated:

விழிகளில் வெளிச்சம் ஏற்றும் கருவி!

பார்வை
பிரீமியம் ஸ்டோரி
பார்வை

பார்வைச் சவால் உள்ளவர்களுக்கு இது மூன்றாவது கண் எனச் சொல்லலாம்.

விழிகளில் வெளிச்சம் ஏற்றும் கருவி!

பார்வைச் சவால் உள்ளவர்களுக்கு இது மூன்றாவது கண் எனச் சொல்லலாம்.

Published:Updated:
பார்வை
பிரீமியம் ஸ்டோரி
பார்வை

பார்வை சவால் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில், உணரும் கருவிகளையும் ஒலிக்கருவிகளையும் நவீன முறையில் வெளிநாடுகளில் கண்டுபிடித்துவருகிறார்கள். ஆனால், நம் நாட்டில் உள்ளவர்களுக்குக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அந்த விலைக்கு வாங்குவதற்கு பலரிடம் வசதி இல்லை. இச்சூழலில் பார்வைத் திறன் இழந்தவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் ‘ஸ்மார்ட் விஷன் ஸ்பெக்ஸ்’ என்ற டிவைஸை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கி, பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

விழிகளில் வெளிச்சம் ஏற்றும் கருவி!

பார்வைச் சவால் உள்ளவர்களுக்கு இது மூன்றாவது கண் எனச் சொல்லலாம்.

முழுமையாகப் பார்வை இழந்தவர்கள் இந்த ‘ஸ்மார்ட் விஷன் ஸ்பெக்ஸ்’ (smart vsion spectacles) மூலம் யாருடைய உதவியுமில்லாமல் இயங்கலாம். கல்வி கற்க, உறவினர், நண்பர்களை அறிந்துகொள்ள, எந்த வேலையும் செய்ய, அருகில் உள்ள பொருள்களை அறிய, துணையில்லாமல் வெளியில் செல்ல என அனைத்துக்கும் உதவும் வகையில் இக்கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளது. இருண்டு கிடக்கும் புற உலகை அக வெளிச்சம் மூலம் உணர்ந்துகொள்ளக் கூடிய வகையில் ஆடியோ டிவைஸாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 73 மொழிகளில் உள்ள எழுத்துகளைப் படிக்கும் வசதி இக்கண்ணாடியில் உள்ளதால் புத்தகங்கள், பதாகைகள், எழுத்து அறிவிப்புகளைப் படிக்கமுடிகிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய அரவிந்த் மருத்துவமனையின் பார்வை மறுவாழ்வுத்துறை நிபுணர் ஜெயசீலி ப்ளோரா, ‘‘உலகளவில் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் படிக்கவும், செயல்படவும் நவீனத் தொழில்நுட்பத்தில் பல கருவிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அதேநேரம், முற்றிலும் பார்வை இழந்தவர்களுக்கு அதுபோன்ற கருவிகள் குறைவாகவே உள்ளன. அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டில் தயாராகும் அக்கருவிகள் லட்சக்கணக்கில் விலை விற்கிறது. மேலும் வெளிநாட்டுத் தயாரிப்பு ஸ்மார்ட் விஷன் டிவைஸ்களில் தமிழ் மொழி உள்ளீடு செய்யப்படவில்லை. ஆங்கிலம்கூட இந்திய உச்சரிப்பில் இருக்காது. அதனால் நம் மக்கள் அதைப் பயன்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன.

விழிகளில் வெளிச்சம் ஏற்றும் கருவி!

பார்வையற்றவர்களுக்கு நல்ல பலனைத்தர வேண்டும், அதே நேரம் விலை குறைவாகவும், பயன்படுத்த சுலபமாகவும் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும், பெங்களூரில் உள்ள எஸ்.ஹெச்.ஜி டெக்னாலஜி நிறுவனமும் இணைந்து இந்த ஸ்மார்ட் விஷன் கண்ணாடி என்ற கருவியை உருவாக்கினார்கள்.

இந்தக் கருவி பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் முன் 2 மீட்டர் தூரத்திலுள்ள நபர்களையும், பொருள்களின் பெயர்களையும் விருப்பமான மொழியில் உச்சரிக்கும். கண்ணாடியில் ஃப்ளாஷ் வசதி உள்ளதால் இரவிலும் புத்தகம் படிக்கலாம். இந்தக் கண்ணாடி டிவைஸ், சாப்ட்வேர் மூலம் இணைக்கப் பட்டுள்ளதால் புதிய ஆப்ஷன்கள் தானாகவே அப்டேட் ஆகிக்கொள்ளும்.

கடந்த சில மாதங்களாக இதை ஆய்வு செய்து தற்போது 5 பேருக்குப் பயன்படுத்த வழங்கியுள்ளோம். தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து இந்தத் திட்டம் பலருக்கும் விரிவுபடுத்தப்படும்’’ என்றார்.

பார்வையற்றவர்களுக்கு மூன்றாம் கண்ணாக இந்த டிவைஸ் பயன்படும் என்கிறார்கள். பெங்களூரு எஸ்.ஹெச்.ஜி டெக்னாலஜி நிறுவனம், அமெரிக்காவின் விஷன் எய்ட் நிறுவனத்துடன் சேர்ந்து பார்வையற்ற வர்களுக்காகப் பல கருவிகளை உருவாக்கி வருகிறது.

இந்தக் கருவியின் விலை 30,000 ரூபாய். தற்போது 5 பேருக்கு வழங்கிய செலவை ஈஸ்ட் மெட்ராஸ் ரோட்டரி கிளப் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அந்த அமைப்பு இன்னும் 300 பேருக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

விழிகளில் வெளிச்சம் ஏற்றியவர்களுக்கு நன்றிகள்!

விழிகளில் வெளிச்சம் ஏற்றும் கருவி!

****

பிரிட்டிஷ்-இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றிய ஜி.வெங்கிடசாமி, பின்பு சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றி அப்படியே கண் மருத்துவத்தைப் பயின்று அத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற மிகச் சிலரில் ஒருவராக வந்தார். பின் மதுரை அரசு மருத்துவமனையில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட கண் மருத்துவத்துறையில் தலைவராகப் பொறுப்பேற்ற ஜி.வெங்கிடசாமி, பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு, அதிலும் கிராமப்புற மக்களுக்குச் சிறப்பாகச் சிகிச்சை அளித்துப் பிரபலமானார்.

ஓய்வுக்குப் பின் மதுரை அண்ணா நகரில் 1976-ல் 11 படுக்கைகளுடன் சிறிய அளவில் அரவிந்த் கண் மருத்துவமனையைத் தொடங்கியவர் ஏழைகளுக்கு இலவசமாகவும், வசதியானவர்களுக்குக் குறைந்த கட்டணத்திலும் சிகிச்சை அளித்தார். இவரின் சேவையைப் பார்த்துப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்ததால் கிராமம் கிராமமாகச் சென்று மக்களுக்குக் கண் பரிசோதனை செய்து ஆரம்பநிலையிலேயே பலரின் கண்பார்வைக் குறைபாடுகளைச் சரிசெய்தார். அவரின் அர்ப்பணிப்பான சேவையை அறிந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் மருத்துவமனைக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்ய, அவர் மறைவுக்குப் பின்னும் இன்று பல கிளைகளுடன் நாட்டிலேயே பெரிய கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமாக வளர்ந்து நிற்கிறது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய சர்வதேச அளவில் பல ஆய்வுகளை நடத்திப் புதிய மருந்துகளையும், சிகிச்சை முறைகளையும் கருவிகளையும் இங்கிருக்கும் நிபுணர்கள் கண்டுபிடித்து வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism