Published:Updated:

ஆந்திர ரயில்வே காவல்துறையிடம் முகிலன்! - வெளியான வீடியோ

முகிலன்
முகிலன்

காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

சூழலியலாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15 -ம் தேதி அன்று சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக மிக முக்கிய வீடியோ ஆவணம் ஒன்றை வெளியிட்டார். மறுநாள் மதுரையில் சில பணிகள் இருந்ததால் அன்றிரவு சென்னை டு மதுரை மகால் விரைவு ரயிலில் அவர் பயணிப்பதாக இருந்தது. சென்னையில் இருந்து புறப்படுவதற்கு முன்பு அவரது நண்பர்கள் சிலர் அவரை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்துச் சந்தித்திருக்கின்றனர்.

முகிலன்
முகிலன்

அதுமட்டுமல்லாமல், மதுரையிலிருக்கும் நண்பர் ஒருவரிடம் இரவு பத்தரை மணியளவில் பேசிய முகிலன், ‘காலை 11 மணிக்குள் மதுரை வந்துவிடுவேன்’ எனப் போனில் பேசியிருக்கிறார். நள்ளிரவில் முகிலனின் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.ஆனால், மறுநாள் அவர் மதுரை சென்றடையவில்லை. அதன் பிறகு முகிலன் காணவில்லை .

இதனையடுத்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. எழும்பூர் ரயில்வே காவல் இந்த வழக்கை த சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைத்துள்ளது. இதுதொடர்பாக ஆட்கொணர்வு மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.முகிலன் காணாமல் போகி 100 நாள்கள் மேல் ஆகியுள்ளது. இந்நிலையில் தான் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் சண்முகம் கூறியுள்ளார். ஆந்திர போலீஸார் வசம் அவர் இருப்பதாக கூறியுள்ளார்.

ஆந்திர ரயில்வே காவல்துறையிடம் முகிலன்! - வெளியான வீடியோ

Posted by Junior Vikatan on Saturday, July 6, 2019

இதுதொடர்பாக முகிலன் நண்பர் சண்முகத்தை தொடர்புக்கொண்டு பேசினோம், “ நான் திருப்பதி ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் இறங்க காத்திருந்தேன் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அந்திரா காவலர்கள் பிடித்து சென்ற நபர் தமிழில் முழக்கமிட்டவாறு சென்றார். சற்று மெலிந்த தேகத்துடன் முகத்தில் தாடியுடன் இருந்த நபர் முகிலன் என அடையாளம் கண்டேன். இதனையடுத்து உடனடியாக முகிலன் மனைவி பூங்கொடியை அலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு முகிலனை கண்டுபிடித்து வீட்டீர்களா என்ன நிலைமை எனக் கேட்டேன். அதற்கு அவர் இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை என்றார். நான் ஆந்திரா சென்றுக்கொண்டிருக்கிறேன் திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை பார்த்தேன் என பூங்கொடிக்கு தெரிவித்தேன்”என்றார்.

இதுதொடர்பாக முகிலன் மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதனிடம் பேசுகையில், “ இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாரை தொடர்புக்கொண்டு பேசினோம். ஆனால் இந்த வழக்கை விசாரித்து வந்த செந்தில் குமார் வேறு துறைக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் மாற்றப்பட்டுள்ளார்.இதனால் முகிலன் குடும்பத்தினருக்கு விசாரணை அதிகாரி யார் என இன்னும் தெரிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு காவலர்களிடம் பேசும் போது கூட சரியான தகவல் இல்லை. கடும் அழுத்ததிற்கு பின்னர் தமிழ்நாடு போலீஸாருக்கு இதற்கு சம்மதம் இல்லை என்றனர்.

முகிலன்
முகிலன்

ஆந்திரா போலீஸ் ஏன் அவரை கைது செய்தார்கள் எனத் தெரியவில்லை. எந்த அடிப்படையில் கைது செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை. ஆந்திராவில் எந்த காவல்துறையின் கீழ் உள்ளார் என்பதும் தெரியவில்லை. ஆந்திர காடுகளின் உலாவிக்கொண்டிருந்த போது கைதாகி இருந்திருக்கலாம். இதில் பல கோணங்கள் பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு முகிலன் உயிரோடு இருக்கிறார் என்பது பதிவாகியுள்ளது . இதுவரை அவர் உயிரோடு இருக்காரா என தெரியாத நிலை இருந்தது. ஆந்திர காவல்துறை தமிழகத்தில் வைத்து முகிலனை கைது செய்ததா. இல்லை முகிலன் ஆந்திரா சென்ற போது பிடிப்பட்டாரா என்பது தெரியவில்லை. தமிழகத்துக்கு முகிலனை கொண்டு வர இந்த அரசாங்க எதாவது நடவடிக்கை எடுக்குமா இல்லை காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்றார்.

அடுத்த கட்டுரைக்கு