twitter.com/shivaas_twitz
நல்லா செக் பண்ணுங்க... பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கும் முறை மாதிரி, கேஸ் சிலிண்டர் விலையை வாரம் ஒருமுறை ஏற்றியமைக்கும் முறையைக் கொண்டு வந்திருக்கப் போறாங்க!
twitter.com/balasubramni1
தமிழ் கற்க முயற்சி செய்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை - பிரதமர்
#தமிழ் கத்துக்க வேண்டாம் ஜி. அப்புறம் நாங்க போடுற மீம்ஸ் எல்லாம் நீங்க படிச்சா, எங்களைப் பழிவாங்க இன்னும் கேஸ், பெட்ரோல் விலையைக் கூட்டிடுவீங்க!
twitter.com/parveenyunus/
கருத்துக்கணிப்பில் மூன்று நான்கு சதவிகிதம்தான் ஆதரவு என வந்தும் பிரசாரத்தைத் தொடரும் அரசியல் கட்சித் தலைவர்களே ஆகச் சிறந்த தன்னம்பிக்கையாளர்கள்.

twitter.com/manipmp
தோல்வியை ஏற்றுக்கொள்ள மனசு வேணும். ஒப்புக்கொள்ள மூளை வேணும்.
twitter.com/kumarfaculty
இழவு வீட்டில் இயல்பு நிலை விரைவாய்த் திரும்புவதற்குக் குழந்தைகள் முதன்மைக் காரணியாய் இருக்கிறார்கள்..!
twitter.com/HAJAMYDEENNKS
நவரச நாயகன் கார்த்திக், டி.ஆர், தீபா, அவர் கணவர் போன்றவர்கள் இன்னும் தேர்தல் களத்துக்கு வராதது மீம்ஸ்வாசிகளுக்குப் பேரிழப்பாக இருக்கிறது!
twitter.com/amuduarattai
நாம் பைக்கிற்கு பெட்ரோல் போட்ட பிறகு நண்பர்கள் நம்மிடம் பைக்கை இரவல் கேட்பதும் நாம் பைக் இரவல் கேட்கும் போதெல்லாம் பெட்ரோல் இல்லாமல் பைக்கை நண்பர்கள் தருவதுமே, நாம் வாங்கி வந்த வரம்.
twitter.com/drloguortho1
அடிடாஸ் ஷோரூமில் ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கிக்கொண்டிருக்கிறான் மகன். தென்னம்புருடையில் ஃபுட்பால் விளையாடிய என் கால்களில் ஏதோ குறுகுறுப்பு.
twitter.com/LAKSHMANAN_KL
துன்பம் வரும்போது மக்களுக்குப் பக்கபலமாக நின்றதே அ.தி.மு.க அரசின் சாதனை! - முதல்வர் பழனிசாமி
# அந்தத் துன்பத்துக்குக் காரணமே அந்த அரசுங்கிறதுதான் இதில் உள்ள ட்விஸ்ட்டே!
twitter.com/amuduarattai
கள்ள நோட்டுகளை மாற்றுவதைவிடக் கடினமானது, அரசு வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்களை மாற்றுவது.
twitter.com/teakkadai1
நாம மக்களை ‘அரசியல்ங்கிறது நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம்’னு நம்ப வச்சிருக்கோம். ஆனா அரசியல்ங்கிறது தீமைக்கும் தீமைக்குமான போராட்டம். அதில் நாம குறைந்த தீமைகிட்ட நிக்கணும்.
- ஸ்டீபன் (லூசிபர்)
twitter.com/K2_b_

எந்த மொழியும் கத்துக்கலயேன்னு வருத்தமே பட வேணாம். நான் பார்த்தவரை கொஞ்சம் நடைமுறைப் பிரச்னைகள் இருந்தாலும், நல்லபடியாக நடந்து கொண்டால் மொழி தெரியாத சுற்றுலாப் பயணிகளைப் பொதுவாகவே எல்லா இடங்களிலும் அன்பாகத்தான் நடத்துறாங்க. கத்துக்க வேண்டியது, ‘நல்ல மனுஷனா இருப்பது எப்படி’ன்னுதான்.
twitter.com/JamesStanly
சிலிண்டர் விலைய ₹1,500 ஆக்கிட்டு டெய்லி ₹2 குறைச்சா விலை டெய்லி குறையும்ல!
twitter.com/prabhu65290
‘`சின்ன வெங்காயம் ஒரு கிலோ குடுங்க...’’
கடைக்காரர்: “பெரிய வெங்காயம் வாங்கிக்கப்பா, விலை கம்மிதான்...”
‘’கேட்டத குடுய்யா, என் பொண்டாட்டிகிட்ட நீயா திட்டு வாங்குவ?’’
twitter.com/kumarfaculty
நடுநிலைவாதிகள் என்பவர்கள், எல்லாக் கட்சிக் கூட்டங்களிலும் பணம் வாங்கிக்கொண்டு கலந்து கொள்பவர்கள்!
facebook.com/DavidEXIM
சரத்குமார், ராதிகா, சீமான்கூட வியப்பில்லை. ஆனால் பாரதிராஜா ஏன்? அட, அவர விடுங்க.. அமீர் ஏன்? சரி இவங்கல்லாம்கூட ஓகேன்னு வெச்சுக்கிட்டாலும்... ட்ராஃபிக் ராமசாமி... உனக் கென்னய்யா கொள்ள போச்சு?
facebook.com/gokul.prasad
ஐந்தாண்டுகள் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டுக் கொண்டிருந்துவிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் எதிரிகளாக சண்டையிட்டுக்கொள்பவர்கள் அரசியல்வாதிகள்.
இதற்கு நேர்மாறாக மற்ற சமயங்களில் ‘போர், ஆமாம் போர்’ எனக் கூவிக்கொண்டிருந்துவிட்டு புத்தகத் திருவிழாவில் ‘எதேச்சையாக’ சந்தித்ததும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு செல்ஃபிக்கு போஸ் தருபவர்கள் எழுத்தாளர்கள்.