Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சுனாமியே வந்தாலும் என்னையும் எடப்பாடியையும் பிரிக்க முடியாது!

வலைபாயுதே

சுனாமியே வந்தாலும் என்னையும் எடப்பாடியையும் பிரிக்க முடியாது!

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

https://twitter.com/mohanramko

100 ரூபாய் காய்கறி வாங்கிட்டு கொசுறா கறிவேப்பிலை கேட்கவே வெட்கமா இருக்கு, இவுங்க எப்படித்தான் வாங்குன கடனை வெட்கமே இல்லாம write off பண்ணிக்கறாங்களோ!

mommyshotsbyamrita
mommyshotsbyamrita

https://www.facebook.com/Arun Mo

நாட்டில் என்ன நடந்தாலும் சிலர் சினிமாவைக் குறை சொல்வதையே பெரிய கடமையாக நினைத்துச் செய்துக்கொண்டிருக்கிறார்கள். சினிமாவை ஒழிப்போம், மக்கள் நலன் காப்போம் என்று அரசு கொரோனா வைரஸுக்குச் செய்யும் விளம்பரம்போல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு வீட்டில் அடைந்திருக்கும் பெரும்பாலானோர் பைத்தியம் பிடித்துப்போய் பக்கத்து வீட்டுக்காரன் கழுத்தைக் கடிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம், தமிழர்களின் சினிமா நுகர்வு. பல உயிர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் சினிமா பலரது மனநலனையும் பாதுகாக்கிறது. இல்லையேல் இன்று கொரோனாவிற்கு ஏற்பாடு செய்வது போல் மனநல பாதிப்பிற்கும் தனி வார்டுகள் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். அரசுக்குப் பல கோடி ரூபாய் தவிர பெரும் உழைப்பு தேவைப்படும். இது அத்தனையும் நடக்காமல் பாதுகாத்திருக்கிறது சினிமா. ஆனால் நோகாமல் சினிமாவைத் திட்டிக்கொண்டிருக்கிறது ஒரு குரூப். இவர்கள் யாரெனில் தினசரி இலவசமாகக் கிடைக்கும் எல்லாப் படங்களையும் பார்த்து, ஏன் இன்னும் சில முக்கியமான படங்கள் இலவசமாகக் கிடைக்க மாட்டேன் என்கிறது என்கிற கோபம் கொண்டவர்கள். சினிமா என்பது தனிப்பட்ட ஒரு கலை அல்ல. மருத்துவம்போல், கல்விபோல், அத்தியாவசியத் தேவைபோல், அதற்கும் சமூக வளர்ச்சியில், தனிமனித ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

www.facebook.com/Aadhavan Dheetchanya

புதிய பாராளுமன்றம் கட்ட ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் 14 லட்சம் வெண்டிலேட்டர்களை வாங்கி பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றமுடியும்.

ana_d_armas
ana_d_armas

https://twitter.com/Thaadikkaran

கத்தரி வெயிலில் மக்கள் பாதிக்கப்படக்கூடாதுன்னுதான் ஊரடங்கு மேலும் 14 நாள் நீட்டிக்கப்பட்டதுன்னு நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்..!

https://twitter.com/RahimGazzali

சுனாமியே வந்தாலும் என்னையும் எடப்பாடியையும் பிரிக்க முடியாது!- ஓ.பி.எஸ். சசிகலா வெளியில் வந்தால் தெரிஞ்சிடப்போகுது.

samcsmusic
samcsmusic

https://twitter.com/karthekarna

லாக்டௌன்ல சும்மா இருக்கதால ரொம்ப யோசிச்சு யோசிச்சு முன்ஜென்ம ஞாபகம்லாம் வர ஆரம்பிச்சிருச்சு.

https://twitter.com/swaravaithee

இந்த நேரத்திலும் அரசியல் செய்வதா? என்று கேட்ட எவராவது இந்த நேரத்திலும் ஊழல் செய்வதா என்று கேட்டார்களா?

kavin
kavin

https://twitter.com/umakrishh

இந்தியாவுக்கு டீக்கடைக்காரர் பிரதமர். தமிழகத்துக்குப் பால்காரர் முதல்வர். இதல்லவோ மக்களாட்சி.

https://twitter.com/Kozhiyaar

ஊரடங்கு முடிந்தவுடன் Funk, Hippy போன்ற பழைய Hairstyleகள் மீண்டும் Fashion ஆகிவிடும்போல!

https://twitter.com/i_soruba

எதுக்கு எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வெக்கணும்ன்றாங்க? நாலஞ்சு இடத்துல தேடிக் கண்டுபிடிச்சாதான மதிப்பு.

rock
rock

https://twitter.com/shivaas_twitz

உங்க ரேப்பிட் டெஸ்ட் கிட்ஸ் எல்லாம் வேலை செய்யல... திருப்பி அனுப்புறோம். அதுக்கு பதிலா, ஒரு மாசம் ஆனாலும் திரிஞ்சி போகாத பால் இருந்தா அனுப்பி விடு.

https://twitter.com/Anandh_Offl

மளிகை லிஸ்ட்ல விடப்பட்ட அந்த ஒரு பொருளை வைத்துதான் குடும்பமே நடத்த முடியும்னு பேசுறதுதான் மனைவியோட ஸ்பெஷல் குணம்!

anushkashettyofficial
anushkashettyofficial

https://www.facebook.com/revathi ravikanth

சப் டைட்டில் படிச்சு முடிக்கறதுக்குள்ள நடிச்சுட்டு ஓடீர்றானுக! மொதல்ல நில்லு, அப்புறம் சொல்லு மொமன்ட்!

ஒலகப்படம் தொயரங்கள்!

https://twitter.com/balu_gs

இந்த லாக்டவுன்லால நடந்த நல்லது என்ன? எனக்கு... 30 வருடம் இருந்த சிகரெட் பிடிக்கும் கெட்ட பழக்கத்தை நிறுத்தியாச்சு...