Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

கொரோனா டு மதவெறி ~ ஆனா ஒன்னுடா... நான் நல்லா பண்ணுறனோ இல்லையோ நீ நல்லா பண்ணுறடா...!

வலைபாயுதே

கொரோனா டு மதவெறி ~ ஆனா ஒன்னுடா... நான் நல்லா பண்ணுறனோ இல்லையோ நீ நல்லா பண்ணுறடா...!

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/sultan_Twitz

கொரோனா நோய் இறைவனின் திருவிளையாடல் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி #மாவட்டச் செயலாளர் பதவியைப் பறிச்சதும் இறைவனோட திருவிளையாடல் தானா..?!

வலைபாயுதே

twitter.com/Thaadikkaran

பேச்சுலர் ரூம் நவ் : எதுக்குடா இப்போ சீட்டு குலுக்கிப் போட்டுட்டு இருக்கே..?! யார் மளிகைச் சாமான் வாங்கப் போறதுன்னு ஒரு முடிவு எடுத்திறலாம். எல்லாத் தடவையும் நானே அடி வாங்க முடியாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

twitter.com/HariprabuGuru

கொரோனா டு மதவெறி ~ ஆனா ஒன்னுடா... நான் நல்லா பண்ணுறனோ இல்லையோ நீ நல்லா பண்ணுறடா...!

twitter.com/HAJAMYDEENNKS

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொன்னால் மத இடைவெளியைக் கடைப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்!

வலைபாயுதே

twitter.com/thoatta

1.5 கோடி mask ஆர்டர் போட்டிருக்கோம், 25லட்ச N95 mask ஆர்டர் போட்டிருக்கோம், 11 லட்சம் PPE ஆர்டர் போட்டிருக்கோம், 2500 வெண்டிலேட்டர் ஆர்டர் போட்டிருக்கோம்... அய்யா இதெல்லாம் எப்ப வந்து மக்களைக் காப்பாத்துறது? அதுக்கு தான் மக்களை வீட்ட விட்டு வெளிய வராதன்னு ஆர்டர் போட்டிருக்கோம்ல.

twitter.com/manipmp

பேசும்போது “அதுவந்து’’ன்னு அடிக்கடி சொன்னால் 90’s kids. ``ஆக்சுவலி’’ன்னு அடிக்கடி சொன்னால் 2k kids.

twitter.com/manipmp

ஆரோக்கியத்தைத் தேடி ஓடுவதற்கு ஜாக்கிங் என்று பெயர்.

வலைபாயுதே

twitter.com/Thaadikkaran

மயக்கம் தெளிஞ்சு “நான் எங்க இருக்கேன்னு” கேட்குற மாதிரி, ஊரடங்கிற்குப் பிறகு எல்லாரும் கேட்குற கேள்வி “ஆமா, இன்னைக்கு என்ன கிழமை” #lockdown

twitter.com/Vicky_stirring

`ஒன்று கூடுவோம்; கொரோனாவை வெல்வோம்!’ - ரவீந்திரநாத் குமார் எம்.பி. கொரோனாவை அவங்க அப்பாவோட தர்மயுத்தம்னு நினைச்சுக்கிட்டார்போல?!

twitter.com/iKappal

சன் மியூசிக்ல ஒரு நாளைக்கு 22 தடவ வெறித்தனம் பாட்டும், 20 தடவ சிங்கப்பெண்ணேவும் போடுறாங்க! #குவாரண்டைன் கண்டுபிடிப்புகள்

வலைபாயுதே

twitter.com/Thaadikkaran

கை தட்டச் சொன்னாங்க, கை தட்டுறாங்க..! விளக்கு வைக்கச் சொன்னாங்க, விளக்கு வைக்குறாங்க..! வீட்ல இருக்கச் சொன்னா மட்டும் ஏன்டா இருக்க மாட்டேங்குறீங்க, உங்களைப் புரிஞ்சுக்கவே முடில..!

twitter.com/ArunPandiyanMJ

To be honest, இந்தச் சின்ன விஷயத்துக்கு கூட “கிரகங்கெல்லாம் நேர்க்கோட்டில் இல்ல. இது ஒரு PR stunt”னு குடும்ப வாட்ஸப்ல புரிய வைக்க முயற்சி பண்ணி, இதுக்கெல்லாம் Rebelனு பேர் வாங்குறது ரொம்ப அயர்ச்சியா இருக்கு. Feeling exhausted.

வலைபாயுதே

twitter.com/ImAvudaiappan

கொரோனா மட்டும் வைரஸா இல்லாம ஒரு இயக்கமா இருந்திருந்தா,இந்த நேரம் இவிங்க பண்றதப் பார்த்துட்டு,அவமானத்துல நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுகிறோம் என பிரெஸ் ரீலீஸ் அனுப்பியிருக்கும்!

twitter.com/kumarfaculty

கொரோனா வந்த பிறகு மொட்டை மாடி வெளி உலகம் ஆகிவிட்டது!

twitter.com/Arunan Kathiresan

எடப்பாடியார் ரூ.9,000 கோடி கேட்டதற்கு மோடி ரூ.500 கோடி கொடுத்திருக்கிறார்! அப்ப, ரூ.9,000கோடி கிடைக்க எவ்வளவு

கேட்டிருக்க வேண்டும்? சரியான விடை சொல்பவருக்கு

ஒரு விளக்கு இனாம்!

வலைபாயுதே

twitter.com/thoatta

பால்கனில நின்னு கை தட்டியாச்சு, இப்ப பால்கனில் நின்னு விளக்கு ஏத்தியாச்சு, அடுத்து பால்கனில இருந்து குதிக்கணும் அதானே?

twitter.com/teakkadai1

70களின் இறுதியிலும் 80களின் ஆரம்பத்திலும் தீய கட்டமைப்பை/அநீதியை எதிர்த்துப் போராடும் சினிமாக்களில் நடித்தவர்களை சூப்பர் ஸ்டார்களாக (இந்தி முதல் தமிழ் வரை) வரித்துக்கொண்டனர் மக்கள். அந்த அடித்தளத்தில் தங்கள் கோட்டைகளைக் கட்டியவர்கள், இன்று அநீதிக்குப் பெரும் ஆதரவாக நிற்கிறார்கள்

வலைபாயுதே

twitter.com/barathi_

எனக்கு கொரோனா வந்துருச்சி, என்னைத் தனிமைப்படுத்திட்டாங்கன்னா என்னடா செய்வன்னு பையன் கிட்ட கேட்டா, கப் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டுப்பேன்றான்

www.facebook.com/RedManoRed

முத்தம் என்பது வாய் வந்த கலை!

twitter.com/ItsJokker

சைனால இருந்து வந்திருக்கே இந்த “கொரோனோ” தம்பி, விடிய விடிய ஒரே அழுகை. அய்யோ ஜி என்னைக் கொல்லப்போறார், கொல்லப்போறார்னு.

அப்புறம்தான் நம்ம “ஜி” பெரிய மனசு பண்ணி, கொல்ல மாட்டேன், விளக்கு வச்சு விரட்டி விட்டுடுறேன்னு சொல்லவும்தான் நிம்மதியா தூங்குச்சு.

வலைபாயுதே

twitter.com/withkaran

கொரோனா என்னும் வைரஸ் வவ்வாலிடமிருந்து வந்ததால் அடுத்த ஞாயிறு அனைவரும் பத்து நிமிடம் வவ்வால் மாதிரி தலைகீழாகத் தொங்க வேண்டும். தொங்கும்போது முக்கியமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

twitter.com/Sweetsudha

லாக் டௌனுக்கு வேற வழியில்லாம எப்படியோ பழகிட்டோம். இப்ப புதுக் கவலை, லாக் டௌன் முடிந்த பிறகு, எப்படி குடும்பத்தவரை, நேரத்துக்கு எழுப்பி, ஸ்கூலுக்கும், ஆபீஸுக்கும் அனுப்புவது?

வலைபாயுதே

twitter.com/G sundarrajan

கொரோனா வைரஸின் மரபணு வரிசை deep sequencing மூலமாக ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் பிறகு உலக நாடுகள் எல்லாம் test kits செய்ய ஆரம்பித்துவிட்டன, இந்திய அரசு மட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைக்காக அகமதாபாத்தில் சுவர் எழுப்பிக் கொண்டிருந்தது.

கொடுமை!

www.facebook.com/parani

எவனோ கீரை சாப்பிட்டா கொரோனா வராதுன்னு என் பொண்டாட்டிக்கு வாட்ஸப் ஃபார்வர்டு பண்ணியிருக்கான்போல... அவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும்....

கீரைக் குழம்பு, கீரைக் கூட்டு, கீரைப்பொறியல் இன்னும் கீரை பிரியாணி, ஃப்ரைடுரைஸ் மட்டும்தான் பாக்கி...