facebook.com/Vinayaga Murugan

மிஷ்கின் அகிராகுரசோவாவின் செவன் சாமுராய் படத்தை ஐந்தாயிரம் முறை பார்த்தாகச் சொல்கிறார். அதுபோல நந்தலாலா படத்தில் இளையராஜா இசையைப் பத்தாயிரம்முறை கேட்டதாகச் சொல்கிறார். ஐம்பதாயிரம் புத்தகங்கள் படித்திருப்பதாகச் சொல்கிறார். பீத்தோவனோட சிம்பனியை ஆயிரம் முறை கேட்டதாகச் சொல்கிறார். இந்த நூறு ஐந்நூறெல்லாம் அவர் பார்த்ததே இல்லை போலிருக்கு. எனக்கென்னவோ அவரிடம் காலையில் என்ன சாப்பிட்டீங்க என்று கேட்டால்கூட ஆயிரம் இட்லி, இரண்டாயிரம் பூரின்னு சொல்வார் போலிருக்கு.

facebook.com/Marx Anthonisamy

ஜார்ஜ் லாய்டின் இனவெறிப் படுகொலையைக் கண்டித்து மிகப் பெரிய எழுச்சி அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப் ஓடி ஒளியும் நிலையையும் கண்டோம். இந்தக் கொரோனாக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இந்த எதிர்ப்பு. இந்தியாவில் இப்படி தினந்தோறும் இப்படி சாதி, மத, தீண்டாமை அடிப்படையிலான வெறுப்புப் படுகொலைகள் நடந்து கொண்டே உள்ளன. ஒரு சிறிய அளவு எதிர்ப்புகளோடு எல்லாம் மறந்துவிடுகின்றன. இங்கே அதிகாரத்தில் இருப்பவர்கள் குறைந்த பட்ச அனுதாபம், கண்டனம் எதுவும் தெரிவிப்பதும்கூட இப்போது இல்லாமல் போய்விட்டது.

facebook.com/UrsTrulyShruthi

சின்ன வயசுல கோயம்புத்தூர் போனா அங்க டீ வாங்கிட்டு வர `போசி’ன்னு ஒரு பாத்திரம் வெச்சிருப்பாங்க. இப்போ அவங்க ஊர்லயே எல்லாரும் டப்பான்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதே மாதிரி இங்க வீட்டுல கொழம்புக் குடுவை. இப்போ அதுவும் டப்பா ஆகிடுச்சு. நாம பார்த்தே நிறைய வார்த்தைய வழக்குல இருந்து தொலைச்சிடறோம்.

twitter.com/mr_rooster_king

எப்படித்தான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணுறங்களோ...? எனக்கெல்லாம் எந்திருச்சுப்போய் ஃபேன் போடவே சோம்பேறித்தனமா இருக்கு.

twitter.com/AadhiraiPonni

“கறுப்பா இருந்தாலும் களையான முகம்” - இதுல வெளிப்படையா ஒளிஞ்சிருக்கற இசம் இருக்கே...

facebook.com/Baskar M

கொரோனாத் தொற்று ஒரே நாளில் இருபதாயிரமாகும்போது, பள்ளிக்கூடங்கள் திறக்கவும் அனுமதி கிடைக்கலாம். காத்திருங்கள்.

twitter/Thaadikkaran

அம்மாமேல சத்தியமா சொல்லு என்பது அந்தக் காலத்து உண்மை கண்டறியும் சோதனை..!

twitter/ItsJokker

தமிழர்களின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது, நான்வெஜ் வாங்கக் கூடும் கூட்டத்தில் “ஞாயி்ற்றுக்கிழமை மட்டும் கொரோனா பரவாது” என்பதே..!

twitter/Kozhiyaar

Demonetisation அறிவிச்ச உடனேயும், Lockdown அறிவிச்ச உடனேயும் மக்களிடம் பேசிய பிரதமர், அவை தோல்வி என்று உணர்ந்தவுடன் மக்களைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்! Same Template!

twitter/swaravaithee

ஸ்கூல் நடத்தக் காசு வேணும். காசு குடுன்னு கேட்டா அதான் ஸ்கூலே மூடிக் கெடக்கே நான் ஏன் காசு தரணும்னு கேட்ருவாய்ங்க. அதான் ஆன்லைன்ல க்ளாஸ் எடுக்கறோம்னு உருட்டிக்கிட்டு இருக்காய்ங்க. உன்கிட்ட லேப்டாப் இருக்கு, இல்லை. நீ படி, படிக்காமப் போ. எனக்கு காசு கரெக்டா வந்துரணும் என்பதே பிசினஸ்.

twitter/mrithulaM

சொல்லிக் காட்டக் கிடைச்ச அத்தனை சந்தர்ப்பத்தையும் தட்டிக்கழிச்சதுதானே நாம ஒருத்தங்களுக்குக் கொடுக்கும் அதிகபட்ச மரியாதை...

twitter/shivaas_twitz

கழுத்துல தாயத்து கட்டிக்கிற மாதிரி மாஸ்க்கை மாட்டிக்கிறாங்க.

அது சரி, எல்லாம் ஒரு நம்பிக்கைதானே?

twitter/Raajavijeyan

நாலு தும்மல் தொடர்ந்து வந்தா, சில நேரம் நம்ம மேல நமக்கே நம்பிக்கை இல்லாமப் போயிருது...

twitter/Vikki_Twits

சீனாவில் கொரோனாத் தொற்று என்ற தகவல் வெளியானவுடன் தமிழகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டன - முதல்வர் பழனிசாமி. கோயம்பேடு மார்க்கெட்டை விசாலமா திறந்து வச்சதைச் சொல்றாரு..!

twitter/withkaran

ஆபீஸ்ல நேபாள்காரனும் பாகிஸ்தான்காரனும் இந்தில பேசிட்டு இருந்தானுவ. இடைல போனா ஒண்ணும் புரியல. இந்தியால பிறந்துட்டு இந்தி தெரியலங்கிறன்னானுவ. நீ இங்க க்ளீனரா இருக்க, பாகிஸ்தான்காரன் ட்ரைவரா இருக்கான், நான் இன்ஜினீயரா இருக்கேன். இதுல இந்தி தெரிஞ்சா என்ன தெர்லன்னா என்னன்னு வந்தாச்சு.