Published:Updated:

வலைபாயுதே

பழைய காரைக் கொடுத்து புதிய கார் வாங்கினால் ஆஃபர். நிதின் கட்கரி அறிவிப்பு

பிரீமியம் ஸ்டோரி

twitter.com/mohanramko

‘போகப் போகப் பிடிக்குது’, அளவு பார்த்து வாங்கிய சட்டை.

twitter.com/saravankavi

அமித்ஷா ~ தி.மு.க கட்சி எப்போதும் அவர்கள் குடும்பம் பற்றி மட்டுமே கவலைப்படும்...

ஜெய்ஷா ~ ஆமாம்பா, ஆமா...!

twitter.com/naaraju

கள்ளக்குறிச்சித் தொகுதி நாதக வேட்பாளர் பெயர், திராவிட முத்தமிழ்ச் செல்வி.

twitter.com/mrithulaM6

Shobana - இது கூட்டணி நடனம்!
Shobana - இது கூட்டணி நடனம்!

உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு அவ்வப்போது தனிமையையும் பரிசாக அளிக்கலாம்.

twitter.com/arattaigirl

யூடியூப் போனா வெள்ளை ரவையை வச்சு மட்டுமே ஒரு 1,000 ஸ்வீட் /டிபன் ரெசிபி வச்சுருக்காங்க. இவ்ளோ நாளா உப்புமா மட்டும் செஞ்சு லைஃபைத் தொலைச்சிட்டமேன்னு குற்ற வுணர்ச்சியே வர அளவுக்கு!

twitter.com/skpkaruna

காங்கிரஸ் கட்சிக்குச் சில வேண்டுகோள்கள்.

1. தயவுசெய்து போராடி வாங்கிய தொகுதிகளை ‘தலைவர்கள் கோட்டாவில்’ பிரிக்காதீர்கள்.

2. வேட்பாளர்களை வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யாதீர்கள்.

3. பெரும் தொழிலதிபர்கள் வேண்டாம். தொழிலைக் காப்பாற்றிக்கொள்ள பா.ஜ.கவிடம் சரணடையும் வாய்ப்பு அதிகம்.

4. பத்துத் தொகுதிகளிலாவது எளிய காங்கிரஸ் தொண்டர்களுக்கு, இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்.

5. வேட்பாளர் முடிவானவுடன், எந்த கோஷ்டியாக இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையாக யாரும் அழைக்காமலேயே போய்ப் பணி செய்யுங்கள்.

6. இந்த முறை 75% strike rate பெறவில்லையெனில் அடுத்த முறை எங்கு சென்றாலும் ஒற்றைப்படை இலக்கம்தான் என்பதை நினைவில் கொண்டு ஒற்றுமையாகப் பணியாற்றுங்கள்.

7. இறுதியாக ஒன்று : இளம் தலைவர் ராகுல்காந்தி உங்களது விதைநெல். அவர் உழைப்பை வீணடிக்காதீர்கள்.

twitter.com/Kozhiyaar

Anurag Kashyap - ரெய்டு பத்திக் கவலையில்லை!
Anurag Kashyap - ரெய்டு பத்திக் கவலையில்லை!

எப்படா வீட்டை விட்டு வெளியே போவோம் என்கிற பருவத்தில் ஆரம்பித்து, எப்படா வீட்டுக்குப் போய் படுப்போம் என்பதாக முடிகிறது வாழ்க்கை!

twitter.com/parveenyunus

எப்போதாவது துரோகம் செய்பவன் நண்பன். அடிக்கடி செய்பவன் சொந்தக்காரன்.

twitter.com/amuduarattai

இணைய வசதி உள்ள மொபைல்களிலும் குழந்தைகளுக்கு, ‘குட் டச்’, ‘பேட் டச்’ எதுவெனச் சொல்லித்தர வேண்டும்.

twitter.com/ItsJokker

எப்படி 23 சீட் வாங்கி அவங்களவிட நாம வெயிட்டுன்னு காமிச்சமோ, அதே மாதிரி, தோத்தாலும் அவங்களவிட அதிகமா தோத்து நாமதான் வெயிட்டுன்னு காமிக்கணும் பங்காளி...

twitter.com/HAJAMYDEENNKS

Virat Kohli - அன்பிற்கினியாள்!
Virat Kohli - அன்பிற்கினியாள்!

அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவிப்பு

#இதுக்கு பேசாமல் பெங்களூரில் இருந்து விமானத்துல வந்திருக்கலாமே!

twitter.com/Kannan_Twitz

வாழ்க்கையில,

மரணம் மட்டுமே காலத்தின் கட்டாயம்!

மற்றதெல்லாம் அவரவர் விருப்பமே!

twitter.com/gips_twitz

மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் வரலாம் - கமல்

ஆள் பத்தாம ஷேர் ஆட்டோக்காரன் ‘பஸ்ஸ்டாண்டு போறவங்கலாம் வரலாம்’ங்கிற மாதிரி சொல்றாரு.

facebook.com/primyarayee

நோய்மைப் பொழுதுகளில் மனமும் நோயுறும்... உயிரில் கலந்த ஒருவருக்கே தெரியும் அப்போது உமிழப்படும் வார்த்தைகளின் துவேஷம், காதலின் வெளிப்பாடே என்று. ஆணோ பெண்ணோ ஒருவர் நோயுற்று வீழும் போதில், பிறிதொருவர் தாயாய் மாறிப்போதல் இதுவரை வாழ்ந்த வாழ்வின் அர்த்தம்... காதலின் உச்சம்!

twitter.com/saravankavi

தீபா ~ “சின்னம்மா நீங்க ஒதுங்கிட்டதால தியாகத்தலைவி, ராஜமாதா பட்டம்லாம் இனிமே எனக்குத்தானே..!”

twitter.com/prabhu65290

ஜோசியக்காரர்: கடந்த ஒரு மாசத்துல உங்களுக்கு எதிர்பாரா பண வரவு வந்திருக்கணுமே...

எது, Google pay-ல வந்த 2 ரூபாயா?

twitter.com/Suyanalavaathi

‘‘ஏன் தலைவரே அவன அடிக்குறீங்க?’’

‘`தொகுதிக்குப் போய் பிரசாரம் பண்ணுடான்னு சொன்னா, வெயில் ரொம்ப அடிக்குது work from home பண்ணட்டுமான்னு கேக்குறான்...’’

twitter.com/Kannan_Twitz

டைம் இருந்தா கால் பண்ணு,

டைம் இல்லைன்னாலும் டைம் ஒதுக்கி கால் பண்ணு!

அவள்கள் அப்படித்தான்!

twitter.com/LAKSHMANAN_KL

மூப்பனாரின் பிரதமர் வாய்ப்பைக் கெடுத்தவர் ப.சிதம்பரம்!- காயத்ரி ரகுராம்.

அப்படியே... அத்வானியின் பிரதமர் வாய்ப்பைக் கெடுத்தது யாருங்கிறதையும் சொன்னா நல்லா இருக்கும்..!

twitter.com/amuduarattai

நாங்கள் யாரையும் வீழ்த்த வரவில்லை, வெல்லவே வந்திருக்ிறோம். -கமல்.

யாராவது வீழ்ந்தால் தானே, நீங்கள் வெல்ல முடியும் ஆண்டவரே!

twitter.com/manipmp

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

#எலக்‌ஷன் முடியட்டும்

எலக்‌ஷன் முடியட்டும்

twitter.com/mohanramko

தொகுதியை எப்படியாவது வாங்கி, மக்களுக்கு சேவை செய்யணும்னு போட்டி போடுற அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது கண்ணுல தண்ணி வருது...

twitter.com/mkd_ganesan

வெறும் 20 தொகுதிதானான்னு ராத்திரி பூரா ஒரே அழுகை. அப்புறம் அமித்ஷா வந்து, ‘மீதி 214-லயும் நம்மாளுங்கதான். ஆனா வேற சின்னத்துல நிக்குறாங்க’ன்னு சொன்ன பிறகுதான் அழுகைய நிப்பாட்டிட்டு தூங்குனானுங்க.

twitter.com/sultan_Twitz

பழைய காரைக் கொடுத்து புதிய கார் வாங்கினால் ஆஃபர். நிதின் கட்கரி அறிவிப்பு ~ செய்தி

பெட்ரோல் யாரு ஜி-யா வந்து போடுவாரு..?!

twitter.com/mohanramko

‘‘நீ 5 வருஷம் செய்ததை எல்லாம் சொல்லி ஓட்டு கேட்க வேண்டியது தானே...’’

‘‘அப்படிச் சொன்னா, போட நினைச்சவனும் போட மாட்டான்.’’

twitter.com/RajaAnvar_

இந்தப் பிரபல பிரியாணிக்கடைல எல்லாம் ரெய்டு போக மாட்டாங்களா?

லெக் பீஸூம் வைக்க மாட்றாங்க, விலையையும் ஏத்திட்டாங்க.

twitter.com/balebalu

குடும்பத் தலைவிகளுக்கு ஆளாளுக்குப் போட்டி போட்டுப் பணம் அறிவிப்பதைப் பார்த்தா, இனிமே கடுகு டப்பா பத்தாது போலயே!

twitter.com/LAKSHMANAN_KL

டிடிவி தினகரனும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்!- சி.டி.ரவி.

அரசியலை விட்டு அவரும் ஒதுங்கணும்னு நெனைக்கிறாருபோல..?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு